அறிவியல் கருவிகள் மற்றும் அவற்றின் பயன்பாடுகள்

0

அறிவியல் கருவிகள் மற்றும் அவற்றின் பயன்பாடுகள்

TNPSC, UPSC பாடக்குறிப்புகள் Download

பொது அறிவு பாடக்குறிப்புகள் Download 

                அறிவியல் கருவி என்பது அறிவியல் நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும் ஒரு கருவியாகும். அவை துல்லியமான அளவீட்டுக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளன. அவற்றின் பயன்கள் பற்றி விரிவாக கீழ் காண்போம்.

அறிவியல் கருவிகள்பயன்பாடுகள்கண்டறிந்தவர்கள்
அம்மீட்டர் (Ammeter): மின்னோட்டத்தின் வலிமையை அளக்க உதவுவதுப்ரீட்ரிக் ட்ரேக்ஸ்லர்
அலிமோ மீட்டர் (Anemometer): காற்றின் வேகமும், வீசும் திசையும் அளந்தறிய உதவும் காற்று வீச்சளவி.லியோன் பாட்டிஸ்டா ஆல்பெர்டி
ஆடியோ மீட்டர் (Audiometer): கேள்வித் திறனை அளக்க உதவும் கேளொலி அளவி.ஜார்ஜ் வோன் பெக்கே (1899-1972 நோபல் பரிசு வென்றவர்), ஒரு ஹங்கேரிய-அமெரிக்க இயற்பியலாளர்.
ஆல்டி மீட்டர் (Altimeter): குத்துயரங்களை அளக்க உதவும் ஒருவகை சிறப்பு திரவமில்லா அழுத்தமானி.பிரஞ்சு இயற்பியலாளரான லூயிஸ் பால்
எலக்ட்ரோஸ்கோப் (Electroscope): மின்னேற்றம் கண்டு துலக்க உதவும் மின்காட்டிவில்லியம் கில்பர்ட்
கம்யுடேட்டர் (Commutator): மின்னோட்டத் திசையை மாற்ற அல்லது திருப்ப உதவும் மின் திசை மாற்றி, டைனமோ இயந்திரத்தில் மாறு மின்னோட்டத்தை நேர்மின்னோட்டமாக மாற்றுவது.1832 இல் பிரிட்டிஷ் விஞ்ஞானி வில்லியம் ஸ்ருஜன்
கோலரிமீட்டர் (Calorimeter): நிறங்களின் தீவிரத்தை ஒப்புநோக்க உதவும் நிற அளவி.ஜான் டி. ஸ்டாக்
கலோரி மீட்டர் (Calorimeter): வெப்பத்தை அளக்க உதவும் வெம்மையளவி
கால்வனோமீட்டர் (Galvanometer): மின்னோட்டத்தை அளக்க உதவும் நுண் மின்னளவி.ஜோஹன் ஸ்கீயெக்டர்
கிளினிக்கல் தெர்மோமீட்டர் (Clinical Thermometer): மனித உடல் வெப்ப நிலையை அளக்க உதவும் நோயறி வெப்ப அளவிகலிலியோ கலிலி
குரோனா மீட்டர் (Chronometer): கடல்பயணத்தில் தீர்க்கரேகை அளவை அறிந்து கொள்ள உதவும் கருவி போன்று துல்லியமாகக் கால அளவைக் காட்டும் கால அளவி.ஜான் ஹாரிசன்
சாலினோ மீட்டர் (Salinometer): உப்புக்கரைசல்களின் அடர்த்திகளை அளப்பதன்மூலம் அவற்றின் கரைசல் செறிவைத் தீர்மானிக்க உதவும் ஒருவகை தரவமானி (உப்புக்கரைசல் அளவி)
செய்ஸ்மோ கிராஃப் (Seismograph): நிலநடுக்க அதிர்ச்சிகளின் தீவிரத்தையும், தோற்றத்தையும் பதிவு செய்ய உதவும் பூகம்ப அளவிஜான் மில்னே
குவாட்ரண்ட் (Quadrant): பயண அமைப்பு முறையிலும், வானவியலிலும் குத்துயரங்க ளையும், கோணங்களையும் அளக்க உதவும் செங்குத்தளவி.ஜான் ஹாட்லி
டிரான்சிஸ்டர் (Transistor): மின்னாற்றலை மிகைப்படுத்துவதுடன், வெப்ப அயன வால்வு களின் பண்புகளும் கொண்டதோர் சிறு மின் கூறுப் பொருள்.
டெலிபிரிண்டர் (Teleprinter): தொலை தூர இடங்களுக்குத் தானியங்கி மூலம் செய்திகளை அனுப்பவும் ஏற்கவும், தகவல்களை அச்செழுதவும் உதவும் தொலை எழுதி.
டெலி மீட்டர் (Telemeter): வான்பயணத்தொலைவில் நிகழும் நிகழ்வுகளைப்பதிவு செய்யும் கருவி (தொலை அளவி)சி.மைக்கேல்
டெலஸ்கோப் (Telescope): தொலைதூரப் பொருட்களை பெருக்கிக்காட்டும் தொலை காட்டி.ஹன்ஸ் லிப்பர்ஷே
டைனமோ (Dynamo): இயந்திர ஆற்றலை மின்னாற்றலாக மாற்றும் கருவிமைக்கேல் ஃபாரடே
டைனமோ மீட்டர் (Dynamo meter): மின் திறனை அளக்க உதவும் மின்திறனளவி.
தெர்மோஸ்கோப் (Thermoscope): வெப்பத்தால் ஒரு பொருளின் பருமனில் ஏற்படும் அளவு மாற்ற ங்களைக் கொண்டு வெப்ப நிலை வேறுபாட்டைத் தோராயமாக அளக்க உதவும் வெப்பங்காட்டி
தெர்மோஸ்டாட் (Thermostat): ஒரு பொருளின் வெப்பநிலையைத் தானாகவே ஒழுங்குபடுத்தும் கருவி (வெப்ப நிலைப்படுத்தி)வாரன் எஸ். ஜான்சன்
பாரோமீட்டர் (Barometer): வளிமண்டல அழுத்தத்தை அளக்க உதவும் காற்றழுத்த அளவி.எவாஞ்சலிஸ்டா டோரிசெல்லி
பிளான்டி மீட்டர் (Plantimeter): சமதளப்பரப்பளவைத் தொகுத்தளிக்க உதவும் கருவி
பெரிஸ்கோப் (Periscope): நேரிடைக் கண்ணோட்டத்திற்குக் குறுக்கே தடையிருப்பின் காண் பவர் கண்மட்டத்திற்கும் மேலாக மறைந்திருக்கும் பொருட்களை கவனிக்க உதவுவது.ஹிப்போலி மாரி-டேவி
பைக்னோ மீட்டர் (Phknometer): நீர்மத்தின் அடர்த்தியையும், விரிவாக்கக் குணத்தையும் (Coefficient of Expansion):  அளக்க உதவும் அடர்வளவி.
பைனாகுலர்கள் (Binoculars): தொலை தூரப் பொருட்களை பெருக்கி இரு கண்களுக்கும் ஒரே சமயத்தில் காட்டும் இரட்டைத் தொலைகாட்டிJ. P. லேமியர்
பைரோ மீட்டர் (Pyrometer): உயர்வெப்ப நிலைகளை அளக்க உதவும் கனல் அளவி.ஜோசியா வெட்ஜ்வுட்
மாக்னடோ மீட்டர் (Magneto Meter): காந்தத் திருப்புத் திறன்களையும் (Magnentic Moments), புலங்க ளையும் (Fields) ஒப்பு நோக்க உதவும் காந்த அளவி
மானோ மீட்டர் (Manometer): வளிமங்களின் அழுத்தத்தை அளக்க உதவும் திரவ அழுத்த அளவிஓட்டோன் வோன் கியூரிக்
மரீனர்ஸ் காம்பஸ் (Mariner’s Compass): முப்பத்தியிரண்டு திசைகளும் குறிக்கப்பட்ட மாலுமித் திசை காட்டி
மைக்ரோ மீட்டர் (Micrometer): சிறுதொலைவுகள் மற்றும் கோணங்களைத்துல்லியமாக அளக்க உதவும் நுண்ணளவி.வில்லியம் கஸ்கோக்னி
மைக்ரோஸ்கோப் (Microscope): நுண்ணிய பொருட்களை பன்மடங்கு பெருக்கிக் காட்டும் நுண் காட்டிஜாக்கரியஸ் ஜான்சென்
ரிஃப்ராக்டோ மீட்டர் (Refractometer): ஒரு பொருளின் ஒளி விலகல் எண்ணினை அளக்க உதவும் விலகல் அளவி.ஏர்ன்ஸ்ட் அபே
ரெசிஸ்டன்ஸ் தெர்மோ மீட்டர் (Resistance Thermometer): வெப்பத்தால் மின் கடத்திகளின் தடையில் எழும் மாற்றங்களை அளப்பதன் மூலம் வெப்பநிலையைக் கண்டறிய உதவும் மின் தடை வெப்ப அளவி.
ரெயின்கேஜ் (Raingauge): மழைப்பொழிவை அளக்க உதவும் மழை அளவி.
ரேடியோ மைக்ரோமீட்டர் (Radiomicro meter): வெப்பக்கதிர் வீச்சுக்களை அளக்க உதவும் கதிரலை நுண் ணளவி
லாக்டோ மீட்டர் (Lactometer); பாலின் ஒப்பு அடர்த்தியை அளக்க உதவுவதுதிரு. டிகாஸ்
வெர்னியர் (Vernier): அளவுகோலின் மிகக் குறைந்த அலகின் உட்பகுப்புகளைச் சுத்த மாக அளக்க, பிரதான அளவுகோலில் சறுக்கி நகரக்கூடிய நுண்ணளவுகோல்.பியர் வெர்னியர்
வோல்ட் மீட்டர் (Voltmeter): இருபுள்ளிகளுக்கிடையே உள்ள மின்னழுத்த வேறுபாட்டை அளக்க உதவும் மின்னழுத்த அளவி.ஆண்ட்ரூ கே
ஸ்டெதஸ்கோப் (Stethoscope): இதயத்தின் நாடித்துடிப்பை அளக்க மருத்துவர் பயன்படுத்தும் இதயத்துடிப்பளவி.ரெனே லான்னெக்
ஸ்பிக்மோமானோ மீட்டர் (Spygmomano Meter): இரத்த அழுத்தத்தை அளக்க உதவும் இரத்த அழுத்த அளவி.சாமுவேல் சீக்ஃப்ரிட் கார்ல் ரிட்டர் வான் பாஸ்ச் 1881
ஸ்பிரிங் பாலன்ஸ் (Spring Balance): பொருளின் எடையை அளக்க உதவும் சுருள் தராசு.
ஸ்பெக்ட்ரோ மீட்டர் (Spectrometer): ஒளி விலகல் எண்களை மிக நுட்பமாக அளந்தறிவதற்கு உகந்த வகையில் திறம்படுத்தப்பட்ட ஒளியின் நிறமாலை அளவி.
ஸ்பெக்ட்ரோஸ்கோப் (Spectroscope): மின் காந்த அலைவரிசையைப் பிரித்து பகுப்பாய்ந்து காட்டும் நிரல்மாலைகாட்டி.ராபர்ட் வில்ஹெல்ம் புன்சென்
ஸ்ஃபியரோ மீட்டர் (Spherometer): கோளக வடிவப் பொருட்களின் வளைவைத் துல்லியமாக அளக்க உதவும் கோள அளவி.ராபர்ட்-அகலா கோச்சோய்க்ஸ்
ஹைக்ரோ மீட்டர் (Hygrometer): வளிமண்டல ஒப்பு ஈரப்பத அளவி (relative Humidity) அளந்திட உதவும் கருவிஹொரேசன் பெனடிக்டிஸ்ட் டி சாஸ்ச்சர்
ஹைக்ரோஸ்கோப் (Hygroscope): வளி மண்டல ஈரப்பதத்தின் அளவு மாற்றங்களைக் கண்டறிய உதவும் ஈரப்பதங்காட்டிராபர்ட் ஹூக்
ஹைட்ரோஃபோன் (Hydrophone): நீருக்கடியில் பேசும் குரலைக் கேட்ட உதவும் நீரொலி வாங்கிரெஜினால்ட் பெஸ்சென்
ஹைட்ரோமீட்டர் (Hydrometer):நீர்மங்களின் ஒப்பு அடர்த்தியை அளக்க உதவுவது.வில்லியம் நிக்கல்சன்

PDF Download

Whatsapp குரூபில் சேர – கிளிக் செய்யவும்

Facebook  Examsdaily Tamil – FB ல் சேர – கிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!