மக்களே உஷார்.., அதிவேக பாதிப்புகளை ஏற்படுத்தும் டெல்டா வைரஸ் – அமெரிக்க ஆய்வு குழு தகவல்!
இந்தியாவில் கொரோனா 2 ஆம் அலையாக உருவெடுத்த டெல்டா வகை வைரஸ் தற்போது உலக நாடுகளில் அதி தீவிரமாக பரவி வருகிறது. அதிகளவு பாதிக்கும் திறன் கொண்ட இவ்வகை வைரஸ் அமெரிக்காவில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
டெல்டா வைரஸ்
கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் மிக எளிதாக பல்வேறு உலக நாடுகளுக்கு பரவ துவங்கியது. இந்த உயிர்கொல்லி வைரஸின் வீரியமும், பாதிப்புகளும் வெளிச்சத்துக்கு வராததற்கு முன்னமே பல உலக நாடுகளை இந்த நோய் தொற்று ஆக்கிரமித்தது. இந்த எதிர்பாராத அடியால் உலக நாடுகள் பலவும் ஸ்தம்பித்தது. எனினும் பல்வேறு கட்டுப்பாடுகள் மூலம் கொரோனா வைரஸை வென்றெழுந்த நிலையில், இந்த வைரஸ் 2ஆம், 3ஆம், 4 ஆம் அலையாக உருவெடுத்து வெவ்வேறு நாடுகளில் பரவி வருகிறது.
உயர்கல்வி மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு எப்போது? சுகாதாரத்துறை அமைச்சர் விளக்கம்!
குறிப்பாக இந்தியாவில் கொரோனா 2 ஆம் அலையாக தாக்கத்தை ஏற்படுத்தி வரும் உருமாறிய டெல்டா வகை கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளில் தீவிரமாக பரவி வருகிறது. இவ்வகை வைரஸின் தாக்கத்தால் அமெரிக்காவில் சுமார் 83% கொரோனா புதிய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. முக்கியமாக கடந்த 7 நாட்களில் இவ்வகை வைரஸின் தாக்கம் 58% அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் தினசரி 37 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புதிய பாதிப்புகளுடன் 240க்கு மேல் உயிரிழப்புகளும் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.
TN Job “FB
Group” Join Now
இதற்கிடையில் டெல்டா வைரஸ் தொடர்பாக அமெரிக்காவை சேர்ந்த நோய்க் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையம் ஆய்வுகளை மேற்கொண்டு வந்த நிலையில், அதன் முடிவுகளை தடுப்பு மைய இயக்குநர் டாக்டர் ரோசெல்லே வாலென்ஸ்கி வெளியிட்டுள்ளார். அதில் கடந்த 20 ஆண்டுகளில் பார்த்திராத இவ்வகை கொடிய டெல்டா வகை வைரஸ் மிகவும் வேகமாக பரவக் கூடியதாகவும், ஆயிரம் மடங்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் இந்த தொற்று பாதிப்பினால் நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை 32% அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.