TNPSC இந்திய அரசியலமைப்பு – ஒன்றியமும் அதன் ஆட்சிப்பரப்பும்

0

ஒன்றியமும் அதன் ஆட்சிப்பரப்பும்

பிரிவு 1 ஓன்றியத்தின் பெயரும் அதன் பரப்பும்
பிரிவு 2 ஒரு புதிய மாநிலத்தைச் சேர்த்தல் அல்லது நிறுவுதல்
பிரிவு 2யு சிக்கிம் இந்தியாவின் இணைப்பு மாநிலம் – நீக்கப்பட்டது
பிரிவு 3 ஒரு புதிய மாநிலத்தை உருவாக்குதல், இருக்கும் மாநிலங்களின் பரப்புகள், எல்லைகள் மற்றும் பெயர்களை மாற்றுதல்
பிரிவு 4 இருக்கும் மாநிலத்தின் பரப்பு முதலியவைகள் மாற்றப்பட்டாலோ, அரசியலமைப்பில் அவை தொடர்பான திருத்தங்களை பாராளுமன்றமானது எளிய பெரும்பான்மையின் (Simple Majority Parliament) அடிப்படையில் சட்டமாக இயற்றி நிறைவேற்ற வேண்டும். ஆனால் இந்த திருத்தம் சரத்து 368-ன் கீழான ஒரு அரசியலமைப்பு திருத்தமாக கருதப்படாது.

மேற்கண்டவைகளை எவ்வாறு செய்வது என்பதற்குண்டான நடைமுறைகளும் (Procedures) சரத்து 3-ன் கீழாகவே கொடுக்கப்பட்டுள்ளன.

  • சரத்து 2 மற்றும் 3 சட்டத்திற்குண்டான மசோதா (Bill) இந்திய குடியரசுத் தலைவரின் பரிந்துரையின் பேரில்தான் பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப் பட வேண்டும்.
  • எனினும், குடியரசுத் தலைவர் மேற்கண்டவாறு பரிந்துரை செய்வதற்கு முன்னர், மேற்படி மசோதாவால் பாதிப்பிற்குள்ளாகும் மாநிலத்தின் சட்டமன்றத்திற்கு அம்மாசோதா குறித்து அதன் கருத்துகளை தெரிவிப்பதற்காக அனுப்ப வேண்டும்.

மாநிலங்கள் மற்றும் யூ னியன் பிரதேசங்களின் உருவாக்கம்

மாகாண மாநிலங்களின் ஒருங்கிணைவு:

  • இந்திய சுதந்திரச் சட்டம் (1947) இந்தியாவை இரு சுதந்திர தனித்தனியான பகுதிகளாக பிரித்தது. மாகாண மாநிலங்கள் இவ்விரு பகுதிகளுடன் சேரவோ அல்லது தன்னிச்சையாக இருக்கவோ அதிகாரம் அளிக்கப்பட்டது.
  • 552 மாகாண மாநிலங்களில், இந்திய புவியியல் எல்லைகளைக் கருத்தில் கொண்டு 3 மாகாண மாநிலங்களைத் தவிர 549- ஆம் இந்தியாவோடு இணைந்தன.

அந்த 3 மாகாண மாநிலங்கள்: 

  1. ஹைதராபாத் – படையெடுப்பின் (Police action) மூலமும்
  2. ஜீனாகாட் – பொது வாக்கெடுப்பு (referendum) மூலமும்
  3. ஜம்மு-காஷ்மீர் – இணைப்பு ஒப்பந்தம் (Instrument of Accession) மூலமும் இந்தியாவுடன் இணைக்கப்பட்டன.

1950-இல் அரசியலமைப்பு ஆட்சிப்பரப்பை நான்கு பகுதிகளாகப் பிரிந்திருந்தது

  1. ஆளுநருக்கு உட்பட்ட பகுதிகள் (9)
  2. சட்டமன்றங்களை உடைய மாகாண மாநிலங்கள் (9)
  3. தலைமை ஆணையருக்கு உட்பட்ட பகுதிகள் மற்றும் சில மாகாண மாநிலங்கள் (10)
  4. அந்தமான மற்றும் நிகோபர் பகுதிகள்

S.K தார் குழு (Dhar Commission) (1948)

  • மொழிவாரி மாநிலங்கள் அமைக்க முடிவதற்கான சூழல்களை ஆராய ஜூன் 1948-ல் இந்திய அரசால் அமைக்கப்ட்டது.
  • இக்குழுவின் தலைவர் ளு.மு. தார்.
  • டிசம்பர் 1948-இல் இக் குழு அறிக்கையை சமர்ப்பித்தது.
  • இக்குழு நிர்வாக வசதிகளின் அடிப்படையிலேயே இந்தியா பிரிக்கப்பட்ட வேண்டுமேயன்றி மொழியின் அடிப்படையில் பிரிக்கக் கூடாது என்று கருத்து தெரிவித்தது.

ஜே.வி.பி. (J.V.P) குழு (1948)

  • தார் குழுவின் அறிக்கை திருப்தி அளிக்காததால் இக்குழு காங்கிரஸால் டிசம்பர் 1948-இல் அமைக்கப்பட்டது.
  • J – Jawaharlal Nehru
  • V – Vallabhai Patel
  • P – Pattabhi Sitaramayya
  • ஏப்ரல் 1949-இல் அறிக்கை சமர்ப்பித்த இக் குழுவும், மொழிவாரி மாநிலங்கள் பகுப்பதை நிராகரித்தது.
  • எனினும் பொட்டி ஸ்ரீராமுலு என்பவர் தனி ஆந்திர மாநிலம் கேட்டுப் போராடி 56 நாட்கள் உண்ணா நோன்பிருந்து பின்பு 1953-இல் சென்னை மாகாணத்தில் இருந்து தெலுங்கு பேசும் பகுதிகள் பிரிக்கப்பட்டு முதல் மொழிவாரி மாநிலமாக ஆந்திரா உருவானது.

பசல் அலி குழு (Fazl Ali Committee) (1953)

  • இந்திய அரசாங்கம் டிசம்பர் 1953-ல் 3-நபர்களைக் கொண்ட மாநில மறுசீரமைப்பு கமிஷனை நியமித்தது.
  • தலைவர்   :1. பசல் அலி
  • உறுப்பினர்கள் :2. கே.எம். பணிக்கர், 3. கே.என். குன்ஷ்ரு
  • இக்குழு மொழிவழி மாநில மறுசீரமைப்பை ஏற்றுக்கொண்டது. ஆனால் ஒரு மொழி – ஒரு மாநிலம் என்னும் கொள்கையை நிராகரித்தது.
  • இக்குழுவின் பரிந்துரையின் படி மாநில மறுசீரமைப்புச் சட்டம் (1956) நிறைவேற்றப்பட்டது.

மாநில மறுசீரமைப்புச் சட்டம் (1956)

  • 7-ஆவது சட்டத் திருத்தம், 1956 மற்றும் மாநில மறுசீரமைப்புச் சட்டம் 1956-ன் கீழ் 14 மாநிலங்களும், 6 யூனியன் பிரதேசங்களும் நவம்பர் 1, 1956-இல் உருவாக்கப்பட்ன.
  • 15-ஆவது மாநிலமாக குஜராத் 1960-இல் உருவாக்கப்பட்டது.

1956-ஆம் ஆண்டிற்குப் பின்னர் உருவாக்கப்பட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள

ஆண்டு மாநில ஃ யூனியன் பிரதேசம் அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் எத்தனையாவது மாநிலம்
1960 குஜராத் 15-வது மாநிலம்
1961 தாத்ரா மற்றம் நாகர் ஹவேலி 10-வது அரசியலமைப்புத் திருத்தம்
1962 கோவா, டாமன் மற்றும் டையூ 12-வது அரசியலமைப்புத் திருத்தம்
1962 பாண்டிச்சேரி 14-வது அரசியலமைப்புத் திருத்தம்
1963 நாகாலாந்து 16
1966 ஹரியானா 17
1971 இமாச்சலப் பிரதேசம் 18
1972 மணிப்பூர் 19
திரிபுரா 20
மேகாலயா 21
1975 சிக்கிம் 34 மற்றும் 35 22
1987 மிசோரம் 23
அருணாச்சல பிரதேசம் 24
கோவா 25
2000 சத்தீஸ்கர் 26
உத்ராஞ்சல் 27
ஜார்கண்ட் 28

 

பெயர் மாற்றங்கள்

எண் ஆண்டு பழைய பெயர் புதிய பெயர்
1 1950 ஐக்கிய மாகாணம் உத்திரப்பிரதேசம்
2 1969 மெட்ராஸ் தமிழ்நாடு
3 1973 மைசூர் கர்நாடகம்
4 1973 லட்சத்தீவுகள், மினிகாய் மற்றும் அமிண்டிவி தீவுகள் லட்சத்தீவுகள்
5 1992 டெல்லி யூனியன் பிரதேசம் டெல்லி தேசிய நகரப் பிரதேசம் – டெல்லி
6 1995 பம்பாய் மும்பை
7 1996 மெட்ராஸ் சென்னை
8 2000 கல்கத்தா கொல்கத்தா
9 2006 உத்திராஞ்சல் உத்தரகாண்ட்
10 2006 பெங்களுர் பெங்களுரு
11 2007 பாண்டிச்சேரி புதுச்சேரி

PDF Download

Download TNPSC அரசியலமைப்பு பாடக்குறிப்புகள்

Download TNPSC பொது தமிழ் பாடக்குறிப்புகள்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Facebook  Examsdaily Tamil – FB ல் சேர – கிளிக் செய்யவும

Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!