TNPSC இந்திய அரசியலமைப்பு – அரசின் வகைப்பாடு

3
அரசின் வகைப்பாடு

அரசாங்கம் அரசின் முக்கிய கூறுகளில் ஒன்றாகும். அரசின் செயல்படும் கருவியாக அரசாங்கம் கருதப்படுகிறது. அரசாங்கத்தின் தேவை மற்றும் அதன் பணிகளை பற்றி தற்காலத்தில் மக்கள் அறிந்திருப்பதோடு அவற்றின் முக்கியத்துவத்தையும் உணர்ந்திருக்கிறார்கள். இத்தகைய அரசாங்கம் பலவகைப்பட்டதாகும். தொன்றுதொட்டு இன்று வரையிலும் நடைமுறையில், இருந்து வந்திருக்கின்ற அரசாங்கம் பல மாறுதல்களை சந்தித்திருக்கிறது. அவ்வாறு அதில் ஏற்பட்ட மாற்றங்கள் கீழே உள்ளபடி வகைப்படுத்தப்படுகின்றன.

இந்திய அரசியல் அமைப்பு என்பது, மத்தியிலும் – மாநிலத்திலுமாக இரு மடடங்களிலும் நாடாளுமன்ற ஆட்சி வடிவ முறையிலமைந்த அரசாங்கத்தைக் கொண்டதாகும். இரண்டு வகையான வடிவங்களில் அரசாங்க அமைப்பு உள்ளது.

ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்ற ஆட்சி வடிவ அரசாங்க முறைகள். முதலாவது வகையான குடியரசுத் தலைவரின் அரசாங்க முறையில், அரசாங்கத்தில் மூன்று அங்கங்களும், ஒன்றிலிருந்து மற்றொன்று சுதந்திரமானதாகும். நிர்வாகப் பிரிவுக்கும், சட்டமியற்றும் பிரிவுக்கும் இடையே நெருக்கமான உறவின்மை அங்கு நிலவுகிறது.

ஐக்கிய அமெரிக்கக் குடியரசு நாடுகளில் உள்ளது (யுஎஸ்ஏ), குடியரசுத் தலைவரின் ஆட்சி முறை வடிவில் அமைந்த அரசாங்கமாகும். ஆனால், நாடாளமன்ற ஆட்சி வடிவமுறை அரசாங்கத்தில், நிர்வாகப் பிரிவுக்கும் – சட்டமியற்றும் பிரிவுக்குமிடையே மிக நெருக்கமான உறவு நிலவுகிறது. ஐக்கிய ராஜ்யம் (யு.கே) நாடாளுமன்ற ஆட்சி வடிவ அரசாங்கத்தைக் கொண்டதாயிருக்கிறது.

இந்தியா, பிரிட்டிஷ் மாதிரியை ஸ்வீகரித்துக் கொண்டிருக்கிறது. காரணம், 1947- ஆம் ஆண்டுக்கு முன்பாக இந்தியாவில் செயல்பட்டுக் கொண்டிருந்த அரசாங்க அமைப்பு, மிகப் பெருமளவிற்கு பிரிட்டிஸ் நாடாளுமன்ற முறை அரசாங்கத்தைப் போலவே அமைந்த முறையாகும். ஒரு நாடாளுமன்ற ஆட்சிமுறை அரசாங்கத்தின் முக்கியமான அனைத்து அம்சங்களையும் பிரதிபலிக்கும் வகையில் இந்திய முறை அமைந்துள்ளது:

(i) சட்டமியற்றும் பிரிவுக்கும், நிர்வாகப் பிரிவுக்குமிடையே நெருக்கமான உறவு,

(ii) சட்டமியற்றும் பிரிவுக்கு நிர்வாகப் பிரிவின் பொறுப்பேற்பு,

(iii) நிர்வாகப் பிரிவு, அரசின் தலைவராகப் பேரளவில் ஒரு நிர்வாகியைக் கொண்டிருக்கும்; பிரதமரால் தலைமை தாங்கப்படும் அமைச்சர்களின் குழு ஒன்றுதான் உண்மையான நிர்வாகத் தலைமையாயிருக்கும்.

  1. சட்டமியற்றும் பிரிவுக்கும், நிர்வாகப் பிரிவின் பொறுப்பேற்பு

இந்தியாவில், சட்டமியற்றும் பிரிவுக்கும் – அதாவது, நாடாளுமன்றத்திற்கும், நிர்வாகப் பிரிவுக்கும், அதாவது பிரதமரைத் தலைவராகக் கொண்ட அமைச்சரவைக் குழுவிற்குமிடையே, நெருக்கமான உறவு நிலவுகிறது. பெரும்பான்மை பலம் பெற்ற கட்சியின் அல்லது கட்சிகளின் கூட்டணியின் தலைவர் மட்டுமே பிரதமாராக நியமிக்கப்பட முடியும்.

அமைச்சரவைக் குழுவின் அனைத்து உறுப்பினர்களும் கட்டாயமாக நாடாளுமன்ற உறுப்பினர்களாக மட்டுமே இருக்க வேண்டும். இந்த அமைச்சரவைக் குழுவின் ஆலோசனையின் பேரில் மட்டுமே குடியரசுத்தலைவர் நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் அமர்வுகளுக்கும் அழைப்பு விடுக்கவும், அவைகளை செயல்படவும் அனுமதிக்க முடியும்; மக்களவையைக் கலைக்கவும் கூட முடியும்.

  1. சட்டமியற்றும் பிரிவுக்கும் நிர்வாகப் பிரிவின் பொறுப்பேற்பு

அமைச்சரவைக் குழு, மக்களவைக்கு கூட்டாகப் பொறுப்புடைய அமைப்பாகும். இதனுடைய பொருள், ஒவ்வோர் அமைச்சரின் பொறுப்பு என்பதும், ஒட்டு மொத்த அமைச்சர்களுடைய குழுவின் பொறுப்பாகும். உண்மையில், நாடாளுமன்றத்தின் இரு அவைகளும், அமைச்சர்களின் குழுவைக் கட்டுப்படுத்தும் அதிகாரங்களைக் கொண்டிருக்கின்றன.

அரசாங்கத்தின் கொள்கைகள், திட்டங்கள் மற்றும் செயல்பாட்டின் மீது கேள்விகளையும் – துணைக் கேள்விகளையும் கேட்பதன் மூலம் இரு அவைகளும் இதைச் செய்கின்றன. அரசாங்கத்தின் முன்மொழிவுகளின் மீது அவை விவாதங்களை நடத்துவதுடன் அரசாங்கச் செயல்பாட்டையும் தீவிரமான விமர்சனத்திற்கு உட்படுத்துகின்றன.

ஒத்திவைப்புத் தீர்மானங்களையும், கவன ஈர்ப்பு அறிக்கைகளையும் அவை முன் வைக்க முடியும். அமைச்சர்களின் குழு அவைமுன் சமர்ப்பிக்கும் எந்த ஒரு மசோதாவும் நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்காமற் போகும் பட்சத்தில் சட்டமாக வர இயலாது.

  1. பெயரளவிலான மற்றும் உண்மையான செயல் நிர்வாகம்

இந்தியாவில் நிர்வாக அமைப்பின் இரண்டு பிரிவுகள் நடைமுறையில் இருக்கின்றன. பெயரளவிலான நிர்வாக அமைப்பு மற்றும் உண்மையான நிர்வாக அமைப்பு ஆகும். அரசின் தலைவராக இருப்பவரான குடியரசுத் தலைவர், பெயரளவிலான மற்றும் மரபு சார்ந்த நிர்வாக அமைப்பு. தத்துவார்த்த ரீதியாக அரசியல் சட்டத்தால் அளிக்கப்பட்டுள்ள எல்லா நிர்வாக அதிகாரங்களும் இந்தியாவின் குடியரசுத் தலைவரிடமே உள்ளன.

ஆனால், நடைமுறையில் இவற்றை குடியரசுத் தலைவர் பிரயோகிப்பதில்லை. பிரதமராலும், அமைச்சரவைக் குழுவினாலும் இவை நடைமுறையில் பயன்படுத்தப்படுகின்றன. பிரதமர் தலைமை வகிக்கும் அமைச்சரவைக் குழுதான் உண்மையான நிர்வாக அமைப்பு. அமைச்சரவைக் குழுவின் அறிவுரை இல்லாமல் குடியரசுத் தலைவர் இயங்க முடியாது.

  1. உண்மையான செயல்நிர்வாகியாக பிரதமர்

நாடாளுமன்ற செயல்நிர்வாக அமைப்பின் அச்சாணியாகத் திகழ்பவர் பிரதமர் ஆவார். அமைச்சரவைக் குழுவின் அனைத்து அமைச்சர்களான உறுப்பினர்களும் பிரதம அமைச்சரின் பரிந்துரைகளின் அடிப்படையில் நியமிக்கப்படுகிறார்கள்.

மாநிலங்களில் உள்ள நாடாளுமன்ற முறை அரசுகளும் கூட மத்திய அரசாங்கத்தின் வடிவமைப்பைப் போலவே கட்டமைக்கப்பட்டுள்ளன. இங்கு நிர்வாக அமைப்பு, ஆளுநர் மற்றும் முதல்வரைத் தலைமையாகக் கொண்ட அமைச்சரவைக் குழு ஆகியவற்றைக் கொண்டதாக உள்ளது.

மாநிலத்தின் அரசுத் தலைவராக ஆளுநர் செயல்படுகையில், முதல் அமைச்சர் மற்றும் அமைச்சரவைக் குழுவினர் உண்மையான செயல்நிர்வாக அமைப்பாகச் செயல்படுகினறனர். சில மாநிலங்களில் மட்டுமே மாநில சட்டமன்றங்கள் இரண்டு அவைகளாக அமைந்துள்ளன. (சட்டமன்றம் மற்றும் சட்ட மேலவை); மிகப் பெரும்பான்மையான மாநிலங்களில் ஒரே ஓர் அவையாக (சட்டமன்றம்) அமைந்துள்ளது.

நிறைகள்

  1. இம்முறை அரசாங்கத்தின் நிர்வாகத் துறைக்கும் சட்டத்துறைக்கும் இடையே ஒற்றுமையும், ஒத்துழைப்பும் பெருமளவில் காணப்படுகிறது.
  2. அவசியப்படும்போது விட்டுக்கொடுத்து நடக்கும் முறை நிலவுகிறது. நெருக்கடி காலங்களில் அமைதியான முறையில் அரசாங்க மாற்றம் ஏற்படுகிறது.
  3. எதிர்க்கட்சிகள் நடைமுறைக்கு சாத்தியமான ஆலோசனைகள் வழங்குவதோடு நியாயமான குறைகளை எடுத்துக்கூறுகின்றன.
  4. இம்முறை மக்களுடைய விருப்பத்திற்கேற்ப செயல்படுகிறது.

குறைகள்

  1. இது அதிகாரப்பிரிவினைக் கோட்பாட்டிற்கு எதிரானது. நிர்வாகத்துறை மற்றும் சட்டத்துறைகளுக்கு இடையே ஒற்றுமை அடிப்படையில் பணிகள் நிறைவேற்றப்படுவதால் பிரதம அமைச்சர் அதிகாரம் மேலோங்கியவராக சர்வாதிகாரியாக மாறிவிடக்கூடிய சூழ்நிலை இருக்கிறது.
  2. சட்டமன்றத்தில் எந்த ஒரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத போது பல கட்சிகள் ஒன்று சேர்ந்து கூட்டு அரசாங்கம் ஒன்றை அமைக்கின்றன. இத்தகைய அரசாங்கம் கட்சிகளுக்கிடையே காணப்படும் பிரச்சனைகளை காரணமாக அரசியல் நிலையற்ற தன்மை ஏற்படுவதோடு அரசாங்கமும் வலிமை குன்றி காணப்படும்.
  3. ஆட்சியிலிருக்கும் கட்சி பதவியிலிருந்து விலகுகின்ற போதோ அல்லது சட்டமன்றத்தில் தோற்கடிக்கப்படும் போதோ எதிர்க்கட்சி ஆட்சி செய்யும் உரிமையை பெறுகிறது. இந்த அரசாங்கம் முன்னால் இருந்த அரசாங்கத்தினுடைய முடிவுகளை ஏற்கமால் போகக்கூடும். இத்தகைய சூழ்நிலையில் பின்பற்றும் கொள்கையில் தொடர்ச்சி இல்லாமல் போகும்.

தலைவர்முறை அரசாங்கம்

இம்முறை அரசாங்கத்தில் தலைவர் சட்டமன்றத்திற்கு பொறுப்புடையவராக இருக்கமாட்டார். இதற்கு சிறந்த உதாரணம் அமெரிக்க ஐக்கிய குடியரசு ஆகும்.

இம்முறையின் சிறப்பு அம்சங்கள்

  1. குடியரசுத் தலைவர் நடைமுறையிலும் அரசியலமைப்பு அடிப்படையிலும் உண்மையான அதிகாரம் உடையவராக இருக்கிறார்.
  2. அரசாங்கத்தின் பிரிவுகளான சட்டத்துறை செயல்துறை மற்றும் நீதித்துறை ஆகியவற்றின் அதிகாரங்கள் பிரிக்கப்பட்டு ஒவ்வென்றும அதற்கென சில அதிகாரங்களைப் பெறுகின்றன. இந்த அளவில் ஒவ்வொன்றும் தனித்தன்மையுடையதாக இருக்கிறது.
  3. இவ்வாறு அதிகாரப்பிரிவினை இருந்தபோது ஒரு முறை பிறிதொரு துறையை கண்காணித்து தகுந்த நடவடிக்கையை மேற்கொள்ளும் வகையில் சமநிலை மற்றும் தடை கோட்பாடு பின்பற்றப்படுகிறது. எந்த ஒரு துறையும் எந்த ஒரு சூழ்நிலையிலும் எதேச்சதிகாரம் செலுத்த முடியாது.
  4. குடியரசுத் தலைவரது பதவிக்காலம் வரையறை செய்யப்பட்டது. எந்த காரணத்தை கொண்டும் பதவிக் காலத்தை அதிகரிக்கவோ அல்லது குறைக்கவோ அல்லது அவரை பதவியிலிருந்து தேசத் துரோக குற்றச்சாட்டு அடிப்படையில்லாமல் விலக்கமுடியாது.

நிறைகள்

  1. நிலையான அரசு சாத்தியமாகிறது.
  2. குடியரசு தலைவர் விருப்பப்படி கட்சியை சேர்ந்தவர்கள் மட்டுமல்லாமல் வெளியில் உள்ளவர்களும் அரசாங்கத்தின் துறைகளுக்கு தலைமை தாங்க பொறுப்பு ஏற்க நியமிக்கப்படலாம். அவசியமானால் எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள் கூட இப்பொறுப்புகளை ஏற்க நியமிக்கப்படலாம்.
  3. கொள்கை தொடர்ந்து பின்பற்றப்படுவதால் செயலாக்கம் இணக்கமாக இருக்கிறது.
  4. தேசிய நெருக்கடிகள் ஏற்படும்போது இத்தகைய அரசாங்கம் சிறந்ததாக இருக்கிறது.
  5. அதிகார குவிப்பிற்கு வாய்ப்பு இல்லை.

குறைகள்

  1. நிர்வாகத்துறை சட்டத்துறைக்கு பொறுப்பு ஏற்காமல் இருப்பதால் அதன் விருப்பப்படி செயல்படமுடிகிறது.
  2. நிர்வாகத்துறைக்கும் சட்டத்துறைக்கும் இடையே பிரச்சனைகள் தீர்க்கப்பட முடியாத சூழ்நிலைகள் அதிகம்.
  3. இம்முறை அரசாங்கம் இறுக்கமானதாக இருக்கிறது.
  4. சட்டத்துறைக்கும் நிர்வாக துறைக்கும இடையே சுமுகமான சூழ்நிலை இல்லாமல் போகும் போது சுதந்திரமான வெளிநாட்டுக் கொள்கையைப் பின்பற்றுவதற்கு முடியாமல் போகிறது.

நிர்வாகத்துறை பின்பற்றும் கொள்கை சட்டத்துறையால் ஏற்கப்படாமலும் போகலாம்.

ஒற்றை அரசாங்கமுறை

               ஒற்றை அரசாங்க முறையில் மைய அரசில் அதிகாரங்கள் குவிக்கப்பட்டு இருக்கின்றன. மைய அரசாங்கம் மாநில மற்றும் பகுதி அரசாங்கங்களை ஏற்படுத்தி அவைகளுக்கு அதிகாரங்களை மாற்றி தருகிறது. இது நிர்வாகம் சீராக நடப்பதற்கான ஏற்பாடாகும். இந்த அமைப்புகள் தனி அரசாங்கம் என அழைக்கப்படுகின்றன.

ஒற்றை அரசாங்க முறைக்கு இங்கிலாந்து, பிரான்ஸ், ஜப்பான், ஸ்ரீலங்கா நாடுகள் உதாரணங்கள் ஆகும்.

சி.எப்.ஸ்ட்ராங்: இரண்டு முக்கியமான தகுதிகள் பற்றி குறிப்பிடுகிறார். அவை

  1. மத்திய அரசாங்கத்தின் உயரிய தன்மை.
  2. இறையாண்மை அதிகாரம் உடைய இதர அமைப்புகள் எதுவுமில்லாமல் இருப்பது.

இறையாண்மை அதிகாரம் இல்லாத இதர அமைப்புகளுடன் மைய அரசாங்கம் உள்ள முறை ஒற்றை அரசாங்க வகையை சேர்ந்தது. மத்திய அரசாங்கம் மற்றும் மாநில அரசாங்கம் சட்டம் இயற்றும் அதிகாரம் பெற்ற அமைப்பு கூட்டாட்சி முறை எனப்படுகிறது.

நிறைகள்

  1. ஒற்றுமை, ஒரே மாதிரியான சட்டமுறை, கொள்கை மற்றும் நிர்வாகம்.
  2. ஆட்சி அதிகாரம் மற்றும் பொறுப்பு வகிப்பவர்களிடையே சச்சரவுகள் இல்லாத தன்மை.
  3. முடிவுகள், விரைவாக எடுக்கப்பட்டு அவை விரைவாக நடைமுறைப்படுத்தப்படுகின்றன.
  4. செலவு குறைவான அமைப்பு
  5. அரசியல் சட்டத்தை எளிதில் மாற்றக்கூடிய நிலை.

குறைகள்

  1. அதிகாரக் குவிப்பு மத்திய அரசாங்கத்தின் சர்வாதிகாரத்திற்கு ஏகுவாகும்.
  2. மத்திய அரசாங்கம் பல சிக்கலான பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். மேலும் பிரதேச அலுவலங்களைக் கவனிப்பதற்கு நேரம் இல்லாமல் போகும்.
  3. மத்திய அரசாங்கத்திற்கு பிரதேச பிரச்சினைகள் அவற்றின் துவக்கம், மற்றும் அவற்றில் ஈடுபாடு இல்லாமல் போகும்.
  4. அளவில் பெரிய நாடுகளுக்கு ஒத்து வராது.

மேலும் கூடுதல் குறிப்புகளை அறிய கீழ் உள்ள இணைப்பில் PDF -பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

PDF Download 

Download TNPSC அரசியலமைப்பு பாடக்குறிப்புகள்

Download TNPSC பொது தமிழ் பாடக்குறிப்புகள்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Facebook  Examsdaily Tamil – FB ல் சேர – கிளிக் செய்யவும

Telegram Channel கிளிக் செய்யவும்

3 COMMENTS

  1. В Pinterest с 2012 г. Реклама в нем дает Заказчикам из Etsy, Shopify, amazon заработки от 7000 до 100 000 usd в месяц. http://1541.ru Ручная работа, Цена 300-1000 usd за месяц

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!