மத்திய அரசு ஊழியர்களுக்கு இரண்டு ஹாப்பி நியூஸ்.. கால அவகாசம் நீட்டிப்பு – அரசு அறிவிப்பு!

0
மத்திய அரசு ஊழியர்களுக்கு இரண்டு ஹாப்பி நியூஸ்.. கால அவகாசம் நீட்டிப்பு - அரசு அறிவிப்பு!
மத்திய அரசு ஊழியர்களுக்கு இரண்டு ஹாப்பி நியூஸ்.. கால அவகாசம் நீட்டிப்பு - அரசு அறிவிப்பு!
மத்திய அரசு ஊழியர்களுக்கு இரண்டு ஹாப்பி நியூஸ்.. கால அவகாசம் நீட்டிப்பு – அரசு அறிவிப்பு!

நாடு முழுவதும் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 4% உயர்த்த இருப்பதாக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதனை தொடர்ந்து, தற்போது மற்றொரு மகிழ்ச்சியான செய்தி ஒன்றை அரசு அறிவித்துள்ளது. அது குறித்த விவரத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.

விடுப்பு பயணச் சலுகை (LTC):

கடந்த செப். 28 ஆம் தேதி நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், மத்திய அரசு ஊழியர்களுக்கு வழக்கமாக ஆண்டுக்கு இரு முறை வழங்கப்படும் அகவிலைப்படி உயர்வின் ஜூலை மாதத்திற்கான அறிவிப்பு வெளியானது. அதன் படி அரசு ஊழியர்களுக்கு 4 % அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டு 34 சதவிகித அகவிலைப்படி 38% சதவிகிதமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு மூலமாக 47.68 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள், 68.62 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு மற்றொரு மகிழ்ச்சி செய்தி வெளியாகி இருக்கிறது. அதன் படி, ஜம்மு-காஷ்மீர், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், லடாக் மற்றும் வடகிழக்கு பகுதிகளுக்குச் செல்ல அரசு தனது ஊழியர்களுக்கு விடுப்பு பயணச் சலுகை (LTC) வசதியை இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டித்துள்ளது. இந்த புதிய வசதியை பெற தகுதியான ஊழியர்கள் 25 செப்டம்பர் 2024 வரை இந்த வசதியை பயன்படுத்தி கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ‘இந்த’ இடங்களில் நீங்கள் வசிப்பவரா? அப்போ நாளைக்கு உஷாரா இருங்க – மின்தடை அறிவிப்பு!

Exams Daily Mobile App Download

ஏற்கனவே இந்த வசதியை 6 செப்டம்பர் 2022 வரை பயன்படுத்தி கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது 25 செப்டம்பர் 2024 வரை இரண்டு ஆண்டுகளுக்கு இந்த வசதி நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகையின் படி எல்டிசியில் பயணம் செய்யும் போது ஊதியத்துடன் கூடிய விடுப்பு மற்றும் பயண டிக்கெட்டுகளுக்கான தொகையும் வழங்கப்படும். மேலும் தற்போது வெளியான அறிவிப்பின் படி விமானப் பயணத்திற்கு தகுதியில்லாத அரசு ஊழியர்கள் இந்த முறை விமானத்தில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் அரசின் LTC வசதியை தவறாக பயன்படுத்தினால், அந்த ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!