RSS தலைவர், துணை குடியரசு தலைவர் ட்விட்டர் ப்ளூ டிக் நீக்கம்!!

0
RSS தலைவர், துணை குடியரசு தலைவர் ட்விட்டர் ப்ளூ டிக் நீக்கம்!!
RSS தலைவர், துணை குடியரசு தலைவர் ட்விட்டர் ப்ளூ டிக் நீக்கம்!!
RSS தலைவர், துணை குடியரசு தலைவர் ட்விட்டர் ப்ளூ டிக் நீக்கம்!!

இந்தியாவின் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு மற்றும் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் அவர்களின் தனிப்பட்ட ட்விட்டர் கணக்கிலிருக்கும் ப்ளூ டிக்கை அந்நிறுவனம் நீக்கியுள்ளது. இதனால் அந்நிறுவனம் மீது எதிர்ப்புகள் வலுத்துள்ளது.

ட்விட்டர்:

உயர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சியால் நினைத்து கூட பார்க்க இயலாத விஷயங்களை கூட நாம் எளிதாக செய்து வருகிறோம். வளர்ந்து வரும் ஸ்மாட் போன் போன்ற தொழில்நுட்பம் மூலம் நம் அன்றாட வாழ்க்கை எளிதாகிவிட்டது. இவ்வகை சாதனங்களின் பயன்பாடும் தற்போது பன்மடங்காக அதிகரித்துள்ளது. ஸ்மார்ட் போன்களுக்கான தேவைகள் அதிகரித்ததும், புதிதாக பல செயலிகள் அறிமுகப்படுத்தப்பட்டு, அதன் பின்னாக வாடிக்கையாளர்கள் ஈர்க்கப்பட்டனர். அந்த வகையில் முகநூல், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்றவை மக்கள் அதிகம் பயன்படுத்தும் பிரபல சமூக வலைதளங்களாக இருந்து வருகிறது.

LPG காஸ் சிலிண்டர் விலை மீது ரூ.800 வரை கேஷ்பேக் – Paytm பயனர்கள் மகிழ்ச்சி!!

சான் பிரான்சிஸ்கோவை தலைமையிடமாக கொண்ட ட்விட்டர் நிறுவனம் 2006 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. இன்றைய காலகட்டத்தில் அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், திரைப்பிரபலங்கள் என பலரும் ட்விட்டரில் கணக்கு வைத்துள்ளனர். இந்த பிரபலங்கள் பயன்படுத்தும் ட்விட்டர் கணக்கில் ஒரு ப்ளூடிக் கொடுக்கப்பட்டிருக்கும். அதன்படி வலைதளங்களில் உள்ள பிரபலங்கள் ஒவ்வொருவரின் அதிகார பூர்வ கணக்குக்கிலும் ப்ளூடிக் இருக்கும். அதன் அடிப்படையில் தான் நாம் அவர்களை பின் தொடருகிறோம்.

TN Job “FB  Group” Join Now

இதற்கிடையில் இன்று காலை, நம் நாட்டின் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு அவர்களின் தனிப்பட்ட ட்விட்டர் கணக்கிலிருந்து ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளது. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதை தொடர்ந்து RSS தலைவர் மோகன் பகவத்தின் ட்விட்டர் கணக்கிலிருந்து ப்ளூ டிக்கை ட்விட்டர் நிறுவனம் நீக்கியுள்ளது. இந்த சம்பவத்தினால் ட்விட்டர் நிறுவனம் மீது தற்போது எதிர்ப்புகள் வலுத்துள்ளது. மேலும் ட்விட்டர் நிறுவனத்துக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் பலரும் #BanTwitterInIndia என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்டிங் செய்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!