கோவில்பட்டியில் டி.டி.வி தினகரன் முன்னிலை – தபால் வாக்குகள் எண்ணிக்கை முடிவு!!

0
கோவில்பட்டியில் டி.டி.வி தினகரன் முன்னிலை - தபால் வாக்குகள் எண்ணிக்கை முடிவு!!
கோவில்பட்டியில் டி.டி.வி தினகரன் முன்னிலை - தபால் வாக்குகள் எண்ணிக்கை முடிவு!!
கோவில்பட்டியில் டி.டி.வி தினகரன் முன்னிலை – தபால் வாக்குகள் எண்ணிக்கை முடிவு!!

கோவில்பட்டி தொகுதியில் அமமுக வேட்பாளர் டி.டி.வி தினகரன் அவர்கள் தபால் வாக்கு எண்ணிக்கை முடிவில் முன்னிலையில் உள்ளார். இதனால் அங்கு அவரது கட்சி தொண்டர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

டி.டி.வி தினகரன் முன்னிலை:

தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 6ம் தேதி தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக நடத்தப்பட்டது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் வாக்குப்பதிவு நடைபெற்ற அன்றே தகுந்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டது. தமிழகம் முழுவதும் மொத்தம் 75 வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த முறை கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதால் முடிவுகளை அறிவிப்பதில் தாமதமாகலாம் என்று தலைமை தேர்தல் ஆணையர் நேற்றே அறிவித்திருந்தார்.

TN Election Result Live Updates – தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை!!

அதன்படி, இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்டது. தேர்தல் ஆணையம் முதலில் தபால் ஓட்டுகளை எண்ணும் படி எண்ணிக்கையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு அறிவித்துள்ளது. இந்த முறை தேர்தல் வாக்குபதிவில் மொத்தம் 5,64,253 தபால் வாக்குகள் பெறப்பட்டுள்ளது. அதன்படி, தபால் வாக்குகள் எண்ணப்பட்டு அதன் விவரங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றது.

TN Job “FB  Group” Join Now

கோவில்பட்டி தொகுதியில் தபால் வாக்குகள் எண்ணிக்கை முடிவில் அந்த தொகுதியில், அமமுக கட்சி வேட்பாளர் டி.டி.வி தினகரன் அவர்கள் முன்னிலை பெற்றுள்ளார். அந்த தொகுதியில் டி.டி.வி தினகரனை எதிர்த்து கடம்பூர் ராஜு போட்டியிட்டிருந்தார். அமமுக கட்சி முன்னிலையில் உள்ளதால் அக்கட்சியின் தொண்டர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!