விஜய் டிவி சீரியல் ரசிகர்களுக்கு ஷாக் நியூஸ் – TRP இல் தொடர் பின்னடைவு! சன் டிவி சீரியல்கள் அபாரம்!
ஒவ்வொரு வாரமும் எல்லா தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பாகும் தொடர்கள் மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் எந்த சேனல் அதிகம் மக்களால் ரசிக்கப்படுகிறது என்பது டிஆர்பி ரேட்டிங்கில் வெளியிடப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஒவ்வொரு வாரமும் விஜய் டிவி சீரியல்கள் மற்றும் நிகழ்ச்சிகள் முதலிடம் பெற்றிருந்த நிலையில் தற்போது அதை சன் டிவி முறியடித்துள்ளது.
பின்னுக்கு தள்ளிய சன் டிவி:
தமிழ் தொலைக்காட்சியில் ஒரு காலத்தில் மெட்டி ஒலி, சித்தி, திருமதி செல்வம் என பல ஹிட் சீரியல்கள் ஓடிய பெருமை சன் டிவிக்கு சேரும். சீரியல் எண்ணிக்கை அதிகமாக, அதிகமாக பார்வையாளர்களின் எண்ணிக்கையும் அதிகமாகி வரும் நிலையில் டிஆர்பி ரேட்டிங்கில் சன் டிவி எப்பொழுதும் பின்னுக்கு தள்ளப்பட்டிருக்கும். ஆனால் கடந்த சில மாதங்களாகவே சன் டிவி கயல் சீரியல் அனைத்து வீட்டின் அம்மாக்கள் மனதிலும் இடம்பிடித்து டிஆர்பி ரேட்டிங்கிலும் முதலிடம் பெற்று வருகிறது.
மௌனராகம் சீரியல் நாயகிகளுடன் போட்டிபோடும் ‘பாரதி கண்ணம்மா’ வில்லி – வைரலாகும் வீடியோ!
இவ்வரிசையில் கடந்த வாரம் சன் டிவியின் சுந்தரி சீரியல் இரண்டாவது இடத்தையும், ரோஜா சீரியல் மூன்றாம் இடத்தையும் மற்றும் வானத்தைப் போல சீரியல் நான்காம் இடத்தையும் பிடித்துள்ளன. இவ்வாறு தொலைக்காட்சிகளின் வரிசையில் சன் டிவி முதலிடத்தையும், எப்பொழுதும் ஹிட் கொடுத்து வந்த விஜய் டிவி தற்போது பின்னடைந்து இரண்டாவது இடத்தையும், ஜீ தமிழ் மற்றும் கே டிவி அடுத்தடுத்த இடங்களையும் பெற்றுள்ளது.
எப்போதும் முதலிடம் பெற்று வந்த விஜய் டிவி சின்னத்திரை நடிகை, நடிகர்கள் என்றாலே தனி மதிப்பு தான். ஏனென்றால் அவர்கள் நடிக்கும் கதைகள் ரசிகர்களின் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும். ஆனால் தற்போது பாரதி கண்ணம்மா 6 வது இடத்தில் இருந்து 8வது இடத்திற்கும், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் 8லிருந்து 7வது இடத்திற்கு தான் வந்துள்ளது மற்றும் பாக்கியலட்சுமி சீரியல் 7வது இடத்திலிருந்து 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இவ்வாறு சன் டிவி தொலைக்காட்சி டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடம் பெற்று விஜய் டிவியை பின்னுக்கு தள்ளி உள்ளது.