இந்தியாவில் 3 மாநில சட்டமன்ற தேர்தல் கட்டுப்பாடுகள் – தேர்தல் ஆணையம் வெளியீடு!!

0
இந்தியாவில் 3 மாநில சட்டமன்ற தேர்தல் கட்டுப்பாடுகள் - தேர்தல் ஆணையம் வெளியீடு!!
இந்தியாவில் 3 மாநில சட்டமன்ற தேர்தல் கட்டுப்பாடுகள் - தேர்தல் ஆணையம் வெளியீடு!!
இந்தியாவில் 3 மாநில சட்டமன்ற தேர்தல் கட்டுப்பாடுகள் – தேர்தல் ஆணையம் வெளியீடு!!

இந்தியாவில் மேகாலயா, நாகாலாந்து மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவை பொதுத்தேர்வு நடத்துவது குறித்து ஊடகங்களுக்கான கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது

தேர்தல் கட்டுப்பாடுகள்:

2023 ஆம் ஆண்டில் 9 மாநில சட்ட மன்றத் தேர்தல்கள் நடைபெற இருக்கும் நிலையில், அதன் முதற்கட்டமாக மேகாலயா, நாகாலாந்து மற்றும் திரிபுரா ஆகிய 3 மாவட்டங்களில் பிப்ரவரி மாதம் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த மூன்று மாநிலங்களில் சட்டப்பேரவைகளுக்கு பொதுத் தேர்தல் நடத்த அட்டவணை கடந்த 18 ஆம் தேதி வெளியானது. அதில் மேகாலயா, நாகாலாந்தில் ஒரே கட்டமாக பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

அதே போல திரிபுராவில் ஒரே கட்டமாக பிப்ரவரி 16 ஆம் தேதியும் தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில் தேர்தல் குறித்து மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951 இன் பிரிவு 126 ன்படி அனைத்து ஊடகங்களும் கடைப்பிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள் தற்போது வெளியாகி இருக்கிறது. அதில் தேர்தலுக்கு 48 மணி நேரத்திற்கு ஊடகங்களில் தேர்தல் குறித்த விஷயங்கள் காட்ட கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய பணியாளர் தேர்வாணைய தேர்வுகளுக்கு பிப்.1 முதல் இலவச பயிற்சி – மாவட்ட ஆட்சியர் அறிக்கை!

மேலும் வாக்கெடுப்பு முடிவதற்கு நிர்ணயிக்கப்பட்ட நேரத்துடன் முடிவடையும் நாற்பத்தெட்டு மணிநேரத்தில் பொதுக் கூட்டத்திற்கு தடை விதிக்கப்படுகிறது. அதனால் அது குறித்த செய்திகள் வெளியிட கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்தல் குறித்து தொலைக்காட்சிகளில் எதுவும் ஒளிபரப்ப கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விதிகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951 இன் மேற்கண்ட பிரிவு 126 இன் விதிகளை டிவி சேனல்கள் தங்கள் குழு விவாதங்கள் மற்றும் பிற செய்தி மற்றும் நடப்பு நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதில் சில சமயங்களில் மீறுவதாக குற்றச்சாட்டுகள் எழுகின்றன. அதனால் தேர்தல் நடைபெறும் நேரத்தில், அது குறித்து தொலைக்காட்சியில் எதுவும் காட்ட கூடாது. அது 126 பிரிவின் படி தேர்தல் ஆணையம் தடை செய்கிறது. அந்தப் பிரிவில் “தேர்தல் விஷயம்” என்பது தேர்தல் முடிவை பாதிக்கும் அல்லது பாதிக்கும் நோக்கம் கொண்ட அல்லது கணக்கிடப்பட்ட எந்தவொரு விஷயமாகவும் வரையறுக்கப்பட்டுள்ளது. இந்த விதிகளை மீறினால் அபராதம் அல்லது சிறை தண்டனை விதிக்கப்படும்.

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!