தமிழக அரசு ஆசிரியர்கள் கவனத்திற்கு – ஜனவரியில் இடமாறுதல் கவுன்சிலிங்!

0
தமிழக அரசு ஆசிரியர்கள் கவனத்திற்கு - ஜனவரியில் இடமாறுதல் கவுன்சிலிங்!
தமிழக அரசு ஆசிரியர்கள் கவனத்திற்கு - ஜனவரியில் இடமாறுதல் கவுன்சிலிங்!
தமிழக அரசு ஆசிரியர்கள் கவனத்திற்கு – ஜனவரியில் இடமாறுதல் கவுன்சிலிங்!

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு விருப்ப இடமாறுதல் கவுன்சிலிங் நடத்தப்படும். கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த ஆண்டு நடைபெறவில்லை. அதனால் இந்த ஆண்டுக்கான இடமாறுதல் கவுன்சிலிங் ஜனவரியில் நடத்தப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இடமாறுதல் கவுன்சிலிங்:

தமிழகத்தில் அனைத்து அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் ஒவ்வொரு ஆண்டும் விருப்ப பணியிட மாறுதல் வழங்கப்படும். ஆனால் கடந்த ஆண்டிற்கான விருப்ப பணியிட மாறுதல் கலந்தாய்வு கொரோனா பெருந்தொற்று மற்றும் தேர்தல் காரணமாக நடத்தப்படவில்லை. மேலும் கலந்தாய்வு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் உயர்நீதிமன்றம் கலந்தாய்வில் பல்வேறு விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள் அறிவித்து விரிவான தீர்ப்பு வழங்கியது.

தமிழகத்தில் நாளை (டிச.8) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

அதனை தொடர்ந்து அரசு ஆசிரியர்கள் சங்கங்கள் பல முறை பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்துமாறு தமிழக அரசை வலியுறுத்தி வந்தது. ஆனால் கொரோனா பெருந்தொற்று மற்றும் சட்டமன்ற தேர்தல் காரணமாக அரசு ஆசிரியர்களுக்கான விருப்ப மாறுதல் கலந்தாய்வு நடத்துவதற்கான சாத்தியம் இல்லாமல் இருந்தது. இந்நிலையில் நடப்பு கல்வியாண்டில் மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்த உள்ள நிலையில் இடமாறுதல் கவுன்சிலிங் நடத்துவதா, தள்ளி வைப்பதா என்று கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வந்தனர்.

Wipro நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு – விண்ணப்ப விவரங்கள் இதோ!

அத்தகைய ஆலோசனையின் முடிவில் வரும் ஜனவரி மாதம் அரசு ஆசிரியர்களுக்கு விருப்ப மாறுதல் கலந்தாய்வு நடத்தும் வகையில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து உயர் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி கவுன்சிலிங்கிற்கான விதிமுறைகள் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதனால் இதற்கான அரசாணை இந்த மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. அடுத்தகட்ட நடவடிக்கையாக ஆசிரியர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு ஆன்லைன் மூலம் இடமாறுதல் வழங்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!