Wipro நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு – விண்ணப்ப விவரங்கள் இதோ!

0
Wipro நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு - விண்ணப்ப விவரங்கள் இதோ!
Wipro நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு - விண்ணப்ப விவரங்கள் இதோ!
Wipro நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு – விண்ணப்ப விவரங்கள் இதோ!

விப்ரோ நிறுவனம் தங்கள் நிறுவனத்தில் வணிகவியல் பட்டதாரி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது. மேலும், இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான முழு விவரங்களும் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது.

விப்ரோ வேலைவாய்ப்பு:

நாட்டின் முன்னனி ஐடி நிறுவனங்களில் அதிக அளவில் பணியாளர்களை நியமிக்க திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, HCL டெக்னாலஜிஸ் நிறுவனம் சுமார் 60% புதிய பெண் ஊழியர்களை பணியமர்த்துவதாக கூறியுள்ளது. மேலும் நடப்பு நிதியாண்டில் சுமார் 22,000 புதிய ஊழியர்களை பணியமர்த்த திட்டமிட்டுள்ளது. மறுபுறம், டிசிஎஸ் 15,000 முதல் 18,000 பெண் ஊழியர்களுக்கு வாய்ப்பு வழங்க திட்டமிட்டுள்ளது. பெண் ஊழியர்களை ஊக்குவிக்கும் வகையில் நியமனம் செய்வதாகவும் L&T அறிவித்துள்ளது. மேலும், கேப்ஜெமினி இப்போது 65,000 பணியாளர்களை நியமிக்க உள்ளது.

ATM மைய பரிவர்த்தனைகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பு – அடுத்த ஆண்டு ஜனவரி முதல் அமல்!

புகழ்பெற்ற நிறுவனமான விப்ரோ, குர்கானில் உள்ள அலுவலகத்திற்கு அனுபவமிக்க தரவு ஆய்வாளர் ( Data Analyst) மற்றும், தங்கள் நிதி களத்திற்காக (Financial Domain) பணியாளர்களை நியமிக்க திட்டமிட்டுள்ளது. இந்த நிதி வல்லுநர்கள் வாடிக்கையாளர்களுக்கு ஆதரவாக தொழில்நுட்ப வல்லுநர்களுடன் இணைந்து பணியாற்றுவார்கள். வாடிக்கையாளர் ஆதரவை மேம்படுத்த நிதி தொழில்முறை ஊழியர்களுக்கு இடையே ஒரு இணைப்பாக செயல்படும் என்று தெரிவித்துள்ளது.

தகுதிகள்:
  • இந்த வேலைகளுக்கு விண்ணப்பிக்க, வேட்பாளர்கள் கணக்கியல், நிதி அல்லது தொழில்நுட்பத்தில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட பதவியில் பணிபுரிந்த குறைந்தபட்ச அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.
  • US GAAP பற்றிய அறிவு மற்றும் நிதிக் களத்தில் பணிபுரிந்த அனுபவம் / நிதி விதிமுறைகள் பற்றிய நல்ல அறிவு இருக்க வேண்டும்.
  • SQL பயன்படுத்தி தரவுத்தளத்தில் பகுப்பாய்வு செய்வதில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

TNPSC தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு – புதிய விதிமுறைகள் வெளியீடு!

  • எக்செல் பற்றிய அறிவு இருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரர்கள் உறுதியான தகவல் தொடர்பு திறனை கொண்டிருக்க வேண்டும்.
  • புதிய தொழில்நுட்பங்களை கற்றுக் கொள்ளவும், தொழில்நுட்ப மற்றும் செயல்பாட்டு திறன்களை வளர்த்துக் கொள்ளவும் விருப்பம் இருக்க வேண்டும்.
  • குழுவாக பணியாற்றவும், சுயமாக சிந்திக்கவும், பல்வேறு பணிகளை மேற்கொள்ளும் திறன் மற்றும் வேகமாக மாறிவரும் சூழலில் குழுவுடன் இணைந்து பணியாற்ற விருப்பம் பணியாளராக இருக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது.
வேலை பற்றிய தகவல்கள்:
  • வேட்பாளர்கள் நிதி உதவி வழங்க வேண்டும்.
  • தொழில்நுட்பக் குழுவும் வணிகப் பங்குதாரர்களும் ஒருவருக்கொருவர் உரையாட வேண்டும்.
  • நிறுவனம் தனது வணிகத்தை வளர்க்க முயற்சி செய்ய வேண்டும்.
  • நிதி அறிக்கை பற்றிய எதிர்கால முன்னேற்றம் மற்றும் ஒருங்கிணைப்பு திட்டங்களின் சோதனை மற்றும் செயல்படுத்தல் ஆகியவற்றிற்கு பங்களிக்க வேண்டும்.

    Velaivaippu Seithigal 2021

    To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
    To Join => Whatsapp கிளிக் செய்யவும்
    To Join => Facebookகிளக் செய்யவும்
    To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!