ரயில் பயணிகளுக்கான முக்கிய அறிவிப்பு – செப்.15 வரை சேவைகள் ரத்து!

0
ரயில் பயணிகளுக்கான முக்கிய அறிவிப்பு - செப்.15 வரை சேவைகள் ரத்து!
ரயில் பயணிகளுக்கான முக்கிய அறிவிப்பு - செப்.15 வரை சேவைகள் ரத்து!
ரயில் பயணிகளுக்கான முக்கிய அறிவிப்பு – செப்.15 வரை சேவைகள் ரத்து!

தெற்கு ரயில்வே தற்போது ரயில் பயணிகளுக்கான முக்கிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. முக்கிய பகுதிகளில் ரயில் பராமரிப்பு பணிகள் காரணமாக 15ம் தேதி வரை ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில் சேவைகள் ரத்து

கொரோனா பாதிப்பிற்கு பிறகு தற்போது தான் அரசின் கீழ் உள்ள பொது போக்குவரத்து சேவைகள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் அவ்வப்போது தெற்கு ரயில்வே சார்பாக ரயில்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். அப்போது ரயில் சேவைகள் நிறுத்தி நிறுத்தி வைக்கப்படும். அந்த வகையில் செங்கோட்டையில் இருந்து மதுரை வரும் ரயில்கள் வரும் செப்டம்பர் 15ம் தேதி வரை ரத்து செய்யப்பட இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ரேஷன் அட்டைதாரர்களுக்கு சிறப்பு சலுகை – மாநில முதல்வர் அறிவிப்பு!

அதன்படி, வரும் 15ம் தேதி வரைக்கு ரயில் பாதையினை பலப்படுத்தும் விதமாக ராஜபாளையம் முதல் சங்கரன்கோவில் பிரிவில் ரயில்கள் ரத்து செய்யப்பட இருக்கிறது. இதனை அடுத்து மதுரை மாநகரில் இருந்து காலை 11.30 அளவில் புறப்படும் மதுரை – செங்கோட்டை (06663), அதே போலவே செங்கோட்டையில் இருந்து மதுரைக்கு 11.50 மணி அளவில் வரும் முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில்கள் வரும் 15ம் தேதி வரை முழுமையாக ரத்து செய்யப்பட இருக்கிறது. ஏற்கனவே இந்த ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது ரத்து செய்யப்படும் நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேலே குறிப்பிட்டுள்ள இந்த ரயில்களுடன் பாலக்காடு – திருச்செந்தூர் விரைவி ரயில் (16731) மற்றும் திருச்செந்தூர் – பாலக்காடு விரைவு ரயில் (16732) ஆகிய இரண்டு ரயில் சேவைகளுக்கும் வரும் 14ம் தேதி ரத்து செய்யப்படுகிறது. அதே போலவே மதுரை – திருச்செந்தூர் இடையே செல்லும் ரயில் ரத்து செய்யப்படுகிறது. வருகிற 15ம் தேதி திருச்செந்தூர் – பாலக்காடு வழியே செல்லும் ரயில் ரத்து செய்யப்பட்டது மாலை 6.30 மணிக்கு புறப்படும் என்றும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here