சென்னையில் போக்குவரத்து பாதை மாற்றம் – 4 நாட்களுக்கு இந்த பாதையில் தான் செல்ல வேண்டும்.. காவல்துறை அறிவிப்பு!

0
சென்னையில் போக்குவரத்து பாதை மாற்றம் - 4 நாட்களுக்கு இந்த பாதையில் தான் செல்ல வேண்டும்.. காவல்துறை அறிவிப்பு!
சென்னையில் போக்குவரத்து பாதை மாற்றம் - 4 நாட்களுக்கு இந்த பாதையில் தான் செல்ல வேண்டும்.. காவல்துறை அறிவிப்பு!
சென்னையில் போக்குவரத்து பாதை மாற்றம் – 4 நாட்களுக்கு இந்த பாதையில் தான் செல்ல வேண்டும்.. காவல்துறை அறிவிப்பு!

இந்தியாவில் ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு சென்னையில் ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது குடியரசு தின விழாவை முன்னிட்டு சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

போக்குவரத்து மாற்றம்:

தலைநகர் சென்னையில் சாலை போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் போக்குவரத்து துறை சார்பாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் அவ்வப்போது சாலைகளில் பாலம் கட்டுதல் போன்ற பணிகளின் காரணமாக போக்குவரத்து பாதைகள் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்ல முக்கிய விழாக்கள் மற்றும் பண்டிகைகளின் போதும் போக்குவரத்து பாதை மாற்றம் செய்யப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து வரும் 26 ஆம் தேதி குடியரசு தின விழாவை முன்னிட்டு சென்னையில் அணிவகுப்பு மற்றும் ஊர்வலம் ஒத்திகை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு ஜனவரி 20, 22, 23 மற்றும் 24 ஆகிய 4 நாட்களுக்கு முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது காமராஜர்‌ சாலையில்‌, காந்தி சிலை முதல்‌, போடு நினைவுச்‌ சின்னம்‌ வரை காலை 8 மணி முதல்‌ நிகழ்ச்சி முடியும்‌ வரை வாகனங்கள்‌ அனுமதிக்கபடமாட்டாது.

Follow our Instagram for more Latest Updates

அடுத்தாக அடையாறு பகுதியிலிருந்து காமராஜர் சாலையில்‌ பிராட்வே நோக்கி செல்லும்‌ சரக்கு மற்றும்‌ வணிக வாகனங்கள்‌ கிரின்வேஸ்‌ சாலை, சந்திப்பிலிருந்து ஆர்‌.கே. மடம்‌ சாலை, வி.கே. ஐயர்‌ சாலை, தேவநாதன்‌ சாலை, செயிண்ட்‌ அடையாறு பகுதியிலிருந்து காமராஜர் சாலையில்‌ பிராட்வே நோக்கி மயிலாப்பூர் சந்திப்பில் இருந்து சிவசாமி சாலை வழியாக காந்தி சிலை. நோக்கி வரும்‌ மாநரக பேருந்து வழித்தடம்‌ எண்‌ 21G இராயப்பேட்டை நெடுஞ்சாலை, இராயப்பேட்டை மேம்பாலம்‌ நோக்கி திரும்பி விடப்பட்டு அவை இராயபேட்டை மேம்பாலம்‌, இராயபேட்டை நெடுஞ்சாலை, இராயபேட்டை மணிக்கூண்டு, ஜெனரல்‌. பேட்டர்ஸ்‌ ரோடு அண்ணாசாலை வழியாக பிராட்வே சென்றடையலாம்‌.

அதே போன்று மயிலாப்பூர் சந்திப்பிலிருந்து சிவசாமி சாலை வழியாக அண்ணாசதுக்கம்‌ நோக்கி வரும்‌ மாநகர பேருந்து வழித்தடம்‌ எண்‌.459 முற்றும்‌ 126 ஆகியவை நீல்கிரிஸ்‌ சந்திப்பு. மியூசிக்‌ அகாடமி, இராயபேட்டை மருத்துவமணை, இராயப்பேட்டை மணிக்கூண்டு, ஜெனரல்‌ பேட்டர்ஸ்‌ ரோடு, அண்ணாசாலை வழியாக தற்காலிக பேருந்து நிறுத்தமான சிந்தாதரிப்பேட்டை ரயில்‌ நிலையம்‌ செல்லாம்‌.

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தில் வேலைவாய்ப்பு – மாதம் ரூ. 2.5 லட்சம் வரை ஊதியம்!

டாக்டர்‌ நடேசன்‌ சாலை மற்றும் அவ்வை சண்முகம்‌ சாலை சந்திப்பு வழியாக காமராகர்‌ சாலை நோக்கி வரும்‌ வாகனங்கள்‌ ஐஸ்‌ அவுஸ்‌ சந்திப்பு நோக்கி திருப்பி விடப்படும்‌. மேலும் டாக்டர் பெசன்ட் சாலையிலிருந்து காமராசர்‌ சாலை நோக்கி வரும்‌ வாகனங்கள் பெசன்ட்‌ சாலை ரவுண்டானாவில்‌ ஐஸ்‌ அவுஸ்‌ நோக்கி திருப்பி விடப்படும்‌.

பாரதி சாலை மற்றும்‌ பெல்ஸ்‌ ரோடு சந்திப்பில்‌ காமராஜர் சாலை நோக்கி வரும்‌ வாகனங்கள் பாரதி சாலை மற்றும்‌ பெல்ஸ்‌ ரோடு சந்தியில்‌ வெல்ஸ்‌ ரோடு நோக்கி திரும்பி விடப்படும்‌. வாலாஜா சாலை மற்றும்‌ பெல்ஸ்‌ ரோடு சந்திப்பில்‌ உழைபாளர்‌ சிலை நோக்கி வரும்‌ வாகனங்கள் (மாநகர பேருந்து தவிர்த்த) பெல்ஸ்‌ ரோடு வழியாக திருப்‌பி விடப்படும்‌.

Exams Daily Mobile App Download

அண்ணாசதுக்கம்‌ அருகில்‌ உள்ள பேருந்து நிறுத்தம்‌ தற்காலிகமாக சிந்தாதிரிப்பேட்டை இரயில்‌ நிலையம்‌ அருகில்‌ மாற்றப்படும்‌. பாரிமுனையிலிருந்து ராஜாஜி சாலை மற்றும்‌ காமராஜர்‌ சாலை வழியாக அடையாறு நோக்கி செல்லும்‌ அனைத்து வாகனங்களும்‌ ரிசர்வ்‌ வங்கி சுரங்க பாதையில்‌ திருப்பி விடப்பட்டு ராஜா அண்ணாமலை மன்றம்‌ வழியாக வாலாஜா பாயிண்ட்‌, அண்ணாசாலை, அண்ணாசிலை, ஜிபி ரோடு, வாலாஜாபேட்டை மணிக்கூண்டு. வெஸ்ட்‌ காட்‌ சாலை, ராயபேட்டை ஒண்‌ பாயிண்ட்‌, நடேசன்‌ சாலை, காரணீஸ்வரர்‌ பகோடா தெரு, சாந்தோம்‌ சாலை வழியாக அடையாறு சென்றடையலாம் .வாலாஜா பாயிண்ட் மற்றும்‌ அண்ணனா சாலை சந்திபிலிருந்து போர்‌ நினைவுச்‌ சின்னம்‌ நோக்கி வாகனங்கள்‌ வர அனுமதியில்லை என்று சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

Follow our Twitter Page for More Latest News Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!