‘கண்ணம்மா பேச வேண்டிய டயலாக் எல்லாம் வெண்பா பேசுறா’ பாரதி கண்ணம்மா முதல் கயல் வரை – டாப் கமெண்ட்ஸ்!

0
'கண்ணம்மா பேச வேண்டிய டயலாக் எல்லாம் வெண்பா பேசுறா' பாரதி கண்ணம்மா முதல் கயல் வரை - டாப் கமெண்ட்ஸ்!
'கண்ணம்மா பேச வேண்டிய டயலாக் எல்லாம் வெண்பா பேசுறா' பாரதி கண்ணம்மா முதல் கயல் வரை - டாப் கமெண்ட்ஸ்!
‘கண்ணம்மா பேச வேண்டிய டயலாக் எல்லாம் வெண்பா பேசுறா’ பாரதி கண்ணம்மா முதல் கயல் வரை – டாப் கமெண்ட்ஸ்!

தமிழ் தொலைக்காட்சிகளில் காலை முதல் மாலை வரை ஒளிபரப்பாகும் சீரியல்களில் இன்றைய எபிசோட் குறித்த ப்ரோமோ வெளியான நிலையில் அதில் ரசிகர்களின் ரசிக்க வைக்கும் கமெண்ட்ஸ் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

டாப் கமெண்ட்ஸ்:

சின்னத்திரையில், விஜய் டிவி, ஜீ தமிழ், சன் டிவி என தொலைக்காட்சி நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு சீரியல்களை ஒளிபரப்பி வருகின்றனர். அதில் ஒரு சில சீரியல்கள் மக்களுக்கு பிடித்தமான சீரியலாக இருக்கிறது. அந்த சீரியல்களில் இன்றைய எபிசோடுகளில் நடைபெறும் திருப்பங்கள் குறித்து வெளியான ப்ரோமோக்களில் ரசிகர்களின் டாப் கமெண்ட்ஸ் பற்றி பார்க்கலாம்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில், முல்லை கதிரிடம் குழந்தை வேண்டும் என சொல்கிறார். மறுபக்கம் மீனா தனத்தின் அம்மா எப்போதும் திட்டிக் கொண்டே இருக்கிறார் என ஜீவாவிடம் வருத்தப்படுகிறார். இது குறித்த ப்ரோமோ வெளியான நிலையில், இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர் ஒருவர் இந்த வீட்டில் மீனா பண்றது எல்லாமே லேட்டா தான் எல்லாருக்கும் புரியுது என்று கூறியுள்ளார்.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ஐஸ்வர்யா இன்ஸ்டாவில் செய்த சாதனை – ரசிகர்கள் வாழ்த்து மழை!

மற்றொரு ரசிகர் மீனா பெஸ்ட் நடிப்பு என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் கண்ணன் பேர சொன்னதும் மூர்த்தி ஏன் முகத்தை சுழிக்கிறார் என்று கேட்டுள்ளார். மேலும் ஒரு ரசிகர் மூர்த்தி முகத்தை பார்க்கும் போதே கோபம் வருகிறது. இவரெல்லாம் மூத்த அண்ணன் என்று கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் மீனாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகினறனர்.

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா சீரியலில், வெண்பாவை ஜெயிலில் சந்திக்க பாரதி செல்கிறார். அப்போது பாரதி விவாகரத்து செய்ய இருப்பதாக வெண்பாவிடம் சொல்கிறார். இது குறித்த ப்ரோமோ வெளியான நிலையில் இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர் ஒருவர் கண்ணம்மா பேச வேண்டிய டயலாக் எல்லாம் இது பேசுது சீரியலே திருப்பி பார்த்த மாதிரி இருக்கு என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் கட்டுன பொண்டாட்டிய நம்பல இவ பேச்சை கேட்டுக்கிட்டு கண்ணம்மாவிற்கு டைவர்ஸ் நோட்டீஸ் அனுப்புறான் பாரதி என்று கூறியுள்ளார். வெண்பா ஜெயில்ல இருந்தாலும் டைரக்டர் அவருக்கு சாதகமா தான் கதை எழுதுகிறார் போல என்று கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் பாரதி வெண்பாவை கடுமையாக விமர்சித்துள்ளனர்.

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகாவின் அம்மா கோபி வந்து விட்டு செல்வதை நினைத்து கோபப்படுகிறார். கோபிக்கு திருமண வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் உன்னை திருமணம் செய்து கொள்ள சொல் என சொல்கிறார். இது குறித்த ப்ரோமோ வெளியான நிலையில், இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர் ஒருவர் கோபி நீங்களும் ராதிகாவ பார்த்துவிட்டீர்களா அப்போ உங்களுக்கு ஆப்பு தான் என்று கூறியுள்ளார்.

பாரதி கண்ணம்மா, பாக்கியலட்சுமியை பின்னுக்கு தள்ளிய சன் டிவியின் ‘கயல்’ – 43வது வார TRP பட்டியல்!

மற்றொரு ரசிகர் கோபி குடும்பத்தோட சந்தோஷமா இல்லைனு ராதிகா உங்களுக்கு எப்படி தெரியும்? யோசிக்க மாட்டீங்களா என்று கேட்டுள்ளார். மற்றொரு ரசிகர் போச்சிடா இவள வேற சமாளிக்கனுமா என்று கோபி நினைப்பது போல கருத்துக்களை பதிவிட்டுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் கோபியின் அடுத்த மூவ் என்ன என்று ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருப்பதாக கூறியுள்ளனர்.

ரோஜா

ரோஜா சீரியலில் அர்ஜுன் உயிரை காப்பாற்ற ரோஜா கோவிலில் கடினமான பிராத்தனைகளை செய்கிறார். இது குறித்த ப்ரோமோ வெளியான நிலையில் இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர் ஒருவர் செண்பகத்துக்கு பழைய ஞாபகம் வந்துரும் என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் அர்ஜுனுக்கும் செண்பகத்துக்கும் எதுவும் ஆக கூடாது என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் இந்த ரோஜாவுக்கு எப்போமே இதேதான் வேலையா என்று கேட்டுள்ளார். மற்றொரு ரசிகர் அழுகாட்சி சீன எல்லாம் ரொம்ப ஓவரா இருக்கு என்று கூறியள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் அனுவுக்கு எதுவும் ஆகாதா நடக்கர கெட்டது எல்லாமே நல்லவங்களுக்குதான் நடக்குமா? சீரியல்ல கூட நல்லவங்க நல்லா இருக்க விடமாட்டீங்க என்று கேட்டுள்ளனர்.

நாம் இருவர் நமக்கு இருவர்

நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் சரண்யா மாயனிடம் சந்தேகம் ஒன்றை கேட்கிறார். இது குறித்த ப்ரோமோ வெளியான நிலையில், இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர் ஒருவர் சரண்யா வழக்கமா நினைக்கிறது தானே இதுல புதுசா என்ன இருக்கு என்று கேட்டுள்ளார். மற்றொரு ரசிகர் சரண்யா எப்போவும் போலதா இருக்கு மாயனும் எப்பவும் போலதான் இருக்காரு இதுல வீட்ல இருக்கவங்களுக்கு என்ன டவுட் என்று கேட்டுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் மாயன் நடிப்பு சூப்பர் என்றே பதிவிட்டுள்ளனர்.

கயல்

கயல் சீரியலில் கயலின் கண்ணன் கயலிடம் கேள்வி ஒன்றை கேட்கிறார். இது குறித்த ப்ரோமோ வெளியான நிலையில் இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர் ஒருவர் முதல்ல ஏதாச்சும் வேலையை பாருப்பா அப்புறம் வந்து கயல் கிட்ட கேள்வி கேட்கலாம் என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் எல்லா சீரியல்லயும் இதே போர்க்களம் தான் போகுது இதுல புதுசா நீங்க வேறயா என்று கேட்டுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் உங்களுக்கும் புதுசா எதுவும் ஐடியா இல்லையா டைரக்டர் சார் இதே ஜோதியில் ஐக்கியமாகிட்டீங்க என்று கூறியுள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!