‘வெண்பா பற்றிய உண்மை யாருக்குமே தெரிய வராதா டைரக்டர் சார்’ – ரசிகர்களின் ஹிட் கமெண்ட்ஸ்!

0
'வெண்பா பற்றிய உண்மை யாருக்குமே தெரிய வராதா டைரக்டர் சார்' - ரசிகர்களின் ஹிட் கமெண்ட்ஸ்!
'வெண்பா பற்றிய உண்மை யாருக்குமே தெரிய வராதா டைரக்டர் சார்' - ரசிகர்களின் ஹிட் கமெண்ட்ஸ்!
‘வெண்பா பற்றிய உண்மை யாருக்குமே தெரிய வராதா டைரக்டர் சார்’ – ரசிகர்களின் ஹிட் கமெண்ட்ஸ்!

தொடர்ந்து நல்ல டிஆர்பியில் உள்ள பிரபல சீரியல்களுக்கான ப்ரோமோ வெளியிடப்பட்டுள்ள நிலையில், ரசிகர்கள் அந்த ப்ரோமோவிற்கான கமெண்டுகளை அளித்து வருகின்றனர். அதில், ஹிட் கமெண்ட்ஸ் குறித்து இந்த பதிவில் காண்போம்.

ரசிகர்களின் கமெண்ட்ஸ்:

சின்னத்திரை சீரியல்களுக்கான ரசிகர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர். அதற்கேற்றாற் போல், சீரியல்களும் ஒதுக்கி வைத்து விட முடியாதபடி பல்வேறு விதமான திருப்பங்களுடன் மிகவும் விறுவிறுப்பாக சென்று வருகிறது. ஒவ்வொரு நாளும், வாரமும் கதையின் போக்கில் மாற்றங்களும் அதிர்ச்சிகளும் ரசிகர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. சீரியலின் மீதான எதிர்பார்ப்பினை அதிகரிக்கும் விதமாக ப்ரோமோக்கள் செயல்பட்டு வருகிறது. அதற்கு சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் அளிக்கும் கமெண்டுகளும் சமீபத்தில் அதிக பிரபலமடைந்து வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் தமிழும் சரஸ்வதியும்:

பாண்டியன் ஸ்டோர்ஸ் தமிழும் சரஸ்வதியும் இந்த இரண்டு சீரியலின் மெகா சங்கமம் நடந்து வருகிறது. இதற்கான ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் மீனா தான் நம்மள மாதிரி நார்மலா இருப்பாங்க.. தனம் முல்லை லாம் சீரியல் மெட்டீரியல் என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் இந்த அம்மா சந்தியாவை தமிழுக்கு கட்டி வைக்கலாம் என்று கூறியுள்ளார். மேலும் ஒரு ரசிகர் விஜய் டிவியின் உருப்படியான சீரியல் தமிழும் சரஸ்வதியும் மட்டுமே என்று கூறியுள்ளார். சங்கமம் எப்போது முடியும் என்று தெரியவில்லை என ஒரு ரசிகர் கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் தமிழும் சரஸ்வதியும் சூப்பர் என்றே கூறியுள்ளனர்.

பாரதி கண்ணம்மா:

அஞ்சலியை கடத்தி வைத்திருக்கும் போது பிரசவ வலி வந்து விடுகிறது. அஞ்சலியை தேடி அனைவரும் செல்கின்றனர். இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் அஞ்சலி பாவம் என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் இந்த கடத்தல் யார் பண்ணானு பாரதி வீட்ல யாருக்குமே தெரியாத மாதிரிதான் கதை போகும் என்று கூறியுள்ளார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ஐஸ்வர்யாவிற்கு ஏற்கனவே திருமணம் ஆகிருச்சா? ரசிகர்களின் கேள்விக்கு பதில்!

மற்றொரு ரசிகர் இந்த வாரம் ஃபுல்லா இதே சீன்தானா என்று கேட்டுள்ளார். மேலும் ஒரு ரசிகர் வெண்பா பற்றிய உண்மை யாருக்குமே தெரிய வராதா டைரக்டர் சார் என்று கேட்டுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் வெண்பா கேரக்டருக்கு விமர்சனங்களை கொடுத்துள்ளனர்.

பாக்யலட்சுமி:

பாக்யலட்சுமி சீரியலின் ப்ரோமோவை பார்த்த ரசிகர் ஒருவர் டேய் அப்பா உன்னால எனக்கு என்னா பண்ண முடியுமோ அத பண்ணிட்ட என கோபி நினைப்பது போல பதிவிட்டுள்ளார். மேலும் ஒரு ரசிகர் எனக்கு சொத்து வேணாம் ராதிகா தான் வேணும் என்று கோபி நினைப்பது போல கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் ராதிகா தான் என் சொத்து எனக்கு எதுக்கு இன்னொரு சொத்து என்று கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் கோபி மனதில் ராதிகாவை நினைப்பது போலவே பதிவிட்டுள்ளனர்.

ராஜா ராணி 2:

ராஜா ராணி 2 சீரியலில் சமையல் போட்டி தொடர்பான, ப்ரோமோ வெளியாகியுள்ளது. இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் சந்தியா சொல்வது சரிதான் கஷ்டம் இல்லாமல் ஜெயித்துவிட்டால் அது நமக்கு பெரிதாக தெரியாது என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் அர்ச்சனா உளருவதை பார்த்தே கண்டுபிடித்துவிடலாம் ஆனால் உங்களுக்கு ஒன்றும் தெரியவில்லை என்று கூறியுள்ளார். மேலும் ஒரு ரசிகர் இப்படியே போன என்ன அர்த்தம் அர்ச்சனா எத்தனை முறைதான் திருட்டுத்தனம் செய்வார் என்று கூறியுள்ளார்.

ரோஜா:

வழக்கம் போல் அனு தில்லு முள்ளு செய்து ராஜாவிடம் மாட்டிக் கொள்வது போல் ப்ரோமோ உள்ளது. இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் பாட்டி மாறிய பிறகு சூப்பரா இருக்கும் என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் அனு வந்தால் ரோஜா வுக்கு கண்டிப்பாக பிரச்சனை தான் வரும் என்று கூறியுள்ளார். மேலும் ஒரு ரசிகர் வில்லங்கம் வந்துருச்சு டா ரெண்டு நாளா சந்தோஷமா போச்சு என்று கூறியுள்ளார். மேலும் ஒரு ரசிகர் வீட்டில் இருந்த இரண்டு பசங்களை யும். காணோமே மேல் படிப்புக்காக வெளிநாடு போனதாக கதை. சொல்ல போறாங்கன்னு நினைக்கிறேன் என்று கூறியுள்ளார். அனு வந்தவுடன் ரோஜாவை டார்ச்சர் பண்ணா ஆரம்பிச்சுடுவா என்று கூறியுள்ளனர்.

நாம் இருவர் நமக்கு இருவர்:

மாயன் அரவிந்தாகவும், அரவிந்த் மாயனாகவும் மாறும் காட்சிகள் ப்ரோமோவாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் மாயனின் அடுத்த அதிரடி தொடங்கியாச்சு என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் மாயன் எப்போவுமே மாஸ்தான் என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் சரண்யாவுக்கு வேற வேலையே இருக்காது போல என்று கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் மாயனை புகழ்ந்துள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!