TNUSRB PC 2023 மதிப்பெண் பட்டியல் – சற்றுமுன் வெளியீடு!

0
TNUSRB PC 2023 மதிப்பெண் பட்டியல் - சற்றுமுன் வெளியீடு!

TNUSRB என்னும் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் ஆனது 2023ம் ஆண்டில் நடைபெற்ற TNUSRB Group II எழுத்து தேர்வுக்கான மதிப்பெண் பட்டியலை (Scorecard) சற்றுமுன் வெளியிட்டுள்ளது. இது குறித்த தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே வழங்கப்பட்டுள்ளது.

TNUSRB Gr. II PC 2023 Score Card:

தமிழக காவல் நிலையங்கள் மற்றும் சிறை / தீயணைப்பு துறைகளில் காலியாக உள்ள Police Constable, Jail Warden & Fireman ஆகிய பணிகளுக்கென 2023 ஆம் ஆண்டு இறுதியில் ஒதுக்கப்பட்டுள்ள 3,359 பணியிடங்கள் குறித்த அறிவிப்பானது 08.08.2023 அன்று வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து இப்பணிகளுக்கான விண்ணப்பங்கள் 18.08.2023 அன்று முதல் 17.09.2023 அன்று வரை TNUSRB ஆணையத்தால் வெளியிடப்பட்டது. பிறகு இப்பணிகளுக்கான TNUSRB Group II எழுத்து தேர்வானது கடந்த டிசம்பர் மாதம் 10ம் தேதி நடத்தப்பட்டது.

இந்நிலையில் 12.01.2024 அன்று இத்தகைய எழுத்து தேர்வுக்கான முடிவுகளானது வெளியிடப்பட்டது. தற்போது எழுத்துத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட நபர்களுக்கான மதிப்பெண் பட்டியல் ஆனது இன்று (22.01.2023) வெளியிடப்பட்டுள்ளது. இதனை தேர்வர்கள் https://www.tnusrb.tn.gov.in/ என்ற இணைப்பின் மூலம் எளிமையாக ஆன்லைனில் பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு நேர்காணலுக்கான அழைப்பு கடிதம் ஆனது விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!