TNPSC காலிப்பணியிடங்களுக்கான முக்கிய அறிவிப்பு – ஜனவரி 31 முதல் கலந்தாய்வு! முழு விவரம் இதோ!

0
TNPSC காலிப்பணியிடங்களுக்கான முக்கிய அறிவிப்பு - ஜனவரி 31 முதல் கலந்தாய்வு! முழு விவரம் இதோ!
TNPSC காலிப்பணியிடங்களுக்கான முக்கிய அறிவிப்பு - ஜனவரி 31 முதல் கலந்தாய்வு! முழு விவரம் இதோ!
TNPSC காலிப்பணியிடங்களுக்கான முக்கிய அறிவிப்பு – ஜனவரி 31 முதல் கலந்தாய்வு! முழு விவரம் இதோ!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வேளாண் அலுவலர் பணிக்கான கலந்தாய்வு அட்டவணையை தற்சமயம் வெளியிட்டுள்ளது. இது தொடர்பான முழு விவரங்களையும் இப்பதிவில் காணலாம்.

கலந்தாய்வு அட்டவணை

தமிழக அரசுத்துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்கள் அனைத்தும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் போட்டித்தேர்வுகள் மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் நடைபெற்ற தமிழ்நாடு வேளாண்மை விரிவாக்க சேவையின் கீழ் உள்ள வேளாண் அலுவலர் பணிக்கான தேர்வு முடிவுகள் வெளியாகி இருக்கும் நிலையில், அதற்கான முதல் கட்ட கவுன்சிலிங் அட்டவணையை TNPSC ஆணையம் வெளியிட்டுள்ளது.

TN TRB வெளியிட்ட முக்கிய அறிவிப்பு – உடனே பாருங்க!

இப்போது, வேளாண் அலுவலர் பதவிக்கான கவுன்சிலிங் சுற்றுக்கு வெற்றிகரமாக தகுதி பெற்ற அனைத்து விண்ணப்பதாரர்களும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) அதிகாரப்பூர்வ இணையதளமான  tnpsc.gov.in  இல் பதிவேற்றப்பட்டுள்ள TNPSC கவுன்சிலிங் அட்டவணை பதிவிறக்கம் செய்துகொள்ளும் படி அறிவுறுத்தப்படுகிறார்கள். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) வேளாண் அலுவலர் பதவிக்கான கலந்தாய்வை 31 ஜனவரி 2022 மற்றும் பிப்ரவரி 1 ஆகிய தேதிகளில் நடத்த உள்ளது.

அந்த வகையில் ஆவணச் சரிபார்ப்புச் சுற்றுக்குத் தகுதி பெற்ற அனைத்து விண்ணப்பதாரர்களும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள தரவரிசைப் பட்டியலைச் சரிபார்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்த அட்டவணையின்படி, 1 முதல் 200 மற்றும் 201 முதல் 400 வரையிலான விண்ணப்பதாரர்கள் 31 ஜனவரி அன்று கவுன்சிலிங்கிற்கு ஆஜராக வேண்டும். அதே நேரத்தில் 401 முதல் 716 ரேங்க் உள்ள விண்ணப்பதாரர்கள் பிப்ரவரி 1 அன்று கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம்.

இப்போது TNPSC ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள கவுன்சிலிங் அட்டவணையை சில எளிமையான படிகளைப் பின்பற்றி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதன் படி,

  • TNPSC தேர்வாணையத்தின்  tnpsc.gov.in  என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை திறக்கவும்.
  • முகப்புப் பக்கத்தில் உள்ள அறிவிப்பு அல்லது விளம்பர விவரங்கள் பகுதிக்கு செல்லவும்.
  • அங்கு தமிழ்நாடு வேளாண்மை விரிவாக்க சேவை என்ற இணைப்பை கிளிக் செய்யவும்.
  • இப்போது TNPSC AO கவுன்சிலிங் அட்டவணையின் PDF பக்கம் திறக்கும்.
    அதனை எதிர்கால குறிப்புக்காக பதிவிறக்கம் செய்து சேமிக்கவும்.

    Velaivaippu Seithigal 2022

    To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
    To Join => Whatsapp கிளிக் செய்யவும்
    To Join => Facebookகிளக் செய்யவும்
    To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!