TNPSC தட்டச்சர், இளநிலை உதவியாளர் பணியிடங்கள் – 102 பேர் நியமனம்!!

0
TNPSC தட்டச்சர், இளநிலை உதவியாளர் பணியிடங்கள் - 102 பேர் நியமனம்!!
TNPSC தட்டச்சர், இளநிலை உதவியாளர் பணியிடங்கள் - 102 பேர் நியமனம்!!
TNPSC தட்டச்சர், இளநிலை உதவியாளர் பணியிடங்கள் – 102 பேர் நியமனம்!!

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC) சார்பில் தட்டச்சர் மற்றும் இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு தேர்வான 102 பேருக்கு பணிநியமன ஆணை வழங்கப்பட்டு உள்ளது.

TNPSC பணி நியமனம்:

தமிழக அரசு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC) வாயிலாக போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். ஏற்கனவே காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு இந்த ஆண்டுக்கான தேர்வு கால அட்டவணையும் வெளியிடப்பட்டது. அதன்படி மே மாதத்தில் குரூப் 2 மற்றும் குரூப் 2a தேர்வுகளும், ஜூலை மாதத்தில் குரூப் 3 தேர்வுகளும், செப்டம்பரில் குரூப் 4 மற்றும் VAO தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் டிரீம்11 ஆன்லைன் விளையாட்டு செயலிக்கு தடை!!

இந்நிலையில் தமிழக சமூக நலத்துறைக்கு சுருக்கெழுத்து பணியிடத்திற்கு 8 பேர், தட்டச்சர் பணியிடத்திற்கு 37 பேர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். மேலும் அத்துறையில் பணியாற்றி, வேலையின் போதே உயிரிழந்த பணியாளர்களின் வாரிசுகளுக்கும் கருணை அடிப்படையில் பணி வழங்க முடிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் 26 வாரிசுகளுக்கு இளநிலை உதவியாளர் பணி வழங்கப்பட்டு உள்ளது. இவர்கள் அனைவர்க்கும் பணி நியமன ஆணை வழங்கப்பட்டு உள்ளது.

‘தாலிக்கு தங்கம் திட்டம்’ – ரூ.50,000 நிதியுதவி & 3150 தங்க நாணயங்கள் ஏற்பாடு!!

இதன் அடையாளமாக தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சமூக நலத்துறையில் தட்டச்சர் பணியிடத்திற்கு தேர்வு செய்யப்பட்ட 4 பேருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் பணிநியமன ஆணையை வழங்கினார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!