தமிழ் புராண இலக்கியங்கள்

0

TNPSC பொது தமிழ் – தமிழ் புராண இலக்கியங்கள்

இங்கு தமிழ் புராண இலக்கியங்கள்  பற்றிய முக்கியமான பொது தமிழ் குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. இது TNPSC போட்டி தேர்வுக்கு மிகவும் பயன்படும். போட்டி தேர்வாளர்கள் கீழ்கண்ட தொகுதிகளை படித்து பயன்பெற வாழ்த்துகிறோம்.

பெரிய புராணம்

ஆசிரியர் குறிப்பு:

  • பெரிய புராணத்தை அருளியவர் சேக்கிழார்
  • இவர் தற்போதைய காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள குன்றத்தூரில் பிறந்தவர்.
  • இவரது இயற்பெயர் அருண்மொழித்தேவர்
  • இவர் அநாபாயச் சோழனிடம் தலைமை அமைச்சராய் திகழ்ந்தவர்.
  • இவர் உத்தம சோழப் பல்லவர் என்னும் பட்டம் பெற்றவர்.
  • இவரைத் தெய்வ சேக்கிழார் என்றும் போற்றுவர்.
  • இவரது காலம் கி.பி.பன்னிரண்டாம் நூற்றாண்டு
  • சொற்கோவில் எழுப்பிய இவர் கற்கோவிலும் எழுப்பினர்.

நூற்குறிப்பு:

  • தனியடியார் அறுபத்துமூவரும், தொகையடியார் ஒன்பதின்மரும் ஆக எழுபத்திருவர் சிவனடியார் ஆவார்.
  • அவ்வடியார்கள் வரலாற்றை கூறுவதால், பெருமை பெற்ற புராணம் என்னும் பொருளில் பெரிய புராணம் எனும் பெயர் பெற்றது.
  • இந்நூலுக்கு சேக்கிழார் இட்டப்பெயர் திருத் தொண்டர் புராணம்
    தில்லை நடராசப் பெருமான் உலகெலாம் என்று அடியெடுத்துக் கொடுக்க பாடப்பட்டதெனவும் கூறுவர்.
  • இவரது பாடல்கள் அனைத்தும் தெய்வமனம் கமழும் தன்மையுடையவன.
  • எனவே தான் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார்,பக்திச்சுவைநனி சொட்டச்
  • சொட்டப் பாடிய கவி வலவ எனச் சேக்கிழார் பெருமானைப் புகழ்ந்துரைத்துள்ளார்.
  • உலகம், உயிர், கடவுள் ஆகிய மூன்றையும் ஒருங்கே காட்டும் காவியந்தான் பெரியபுராணம் என்பார் திரு.வி.கலியாண சுந்தரனார்.

இறைவனிடம் தருமி வேண்டல்:

ஐய யாவையும் அறிதி யேகொலாம்
வையை நாடவன் மனக்க ருத்துணர்ந்(து)
உய்ய வோர்கவி யுரைத்தெ னக்கருள்
செய்ய வேண்டுமென் றிரந்து செப்பினான்.

திருநாவுக்கரசர் அமுதுண்ண இசைதல்:

ஆசனத்தில் பூசனைகள் அமர்வித்து விருப்பினுடன்
வாசம்நிறை திருநீற்றுக் காப்பேந்தி மனந்தழைப்பத்
தேசமுய்ய வந்தவரைத் திருவமுது செய்விக்கும்
தேசமுற விண்ணப்பம் செயஅவரும் அதுநேர்ந்தார்.

சீறாப்புராணம்

ஆசிரியர் குறிப்பு:

  • சீறாப்புராணத்தை இயற்றியவர் உமறுப்புலவர்
  • இவர் எட்டயபுரம் கடிகை முத்துப் புலவரின் மாணவர்
  • அப்துல்காதிர் மரைக்காயர் என்ற வள்ளல் சீதக்காதியின் வேண்டுகோளின் வண்ணமே உமறுப்புலவர் சீறாப்புராணம் எழுதத் தொடங்கினார்.
  • நூல் முற்றும் முன்னமே சீதக்காதி மறைந்தார்.
  • அவருக்குப் பின் அபுல்காசின் என்ற வள்ளல் உதவியால் சீறாப்புராணம் நிறைவுற்றது.
  • உமறுப்புலவர் வள்ளல் பெருமக்களை நூலின் பலவிடங்களில் நினைவு கூர்ந்து போற்றுகிறார்.
  • இவர் என்பது பாக்களால் ஆகிய முதுமொழி மாலை என்னும் நூலையும் படைத்தளித்துள்ளார்.
  • இவர் காலம் பதினேழாம் நூற்றாண்டு.

நூற் குறிப்பு:

  • இறைவனின் திருந்தூதர் நபிகள் நாயகத்தின் சீரிய வரலாற்றினை எடுத்தியம்பும்
  • இனிய நூல் சீறாப்புராணம்.
  • சீறா – வாழ்க்கை புராணம் – வரலாறு என பொருள்படும்.
  • இந்நூல் விலாதத்துக் காண்டம், நுபுவ்வத்துக் காண்டம், ஹிஜ்ரத்துக் காண்டம், என்னும் முப்பெரும் பிரிவுகளை கொண்டது.
  • ஐயாயிரத்து இருபத்தேழு விருத்தப்பாக்களால் ஆனது.
  • பாடப்பகுதி விலாதத்துக் காண்டத்தில் உள்ளது.
புலி வசனித்த படலம்:

ஒருவன் முகம்மதுநபியை வணங்கிக் கூறிய செய்தி
படர்ந்த தெண்டிரைப் பெருக்கெடுத் தெறிநதிப் பரப்பைக்
கடந்து கான்பல கடந்தரு நெறிசெலுங் காலை
கொடுத்த மக்கரித் திரளெனும் குழுவினுள் ஒருவன்
அடைந்து சீரகு மதினடி தொழுதறை குவனால்.

புலியின் தோற்றம்:

நீண்ட வால்நிலம் புடைத்திடக் கிடந்துடல் நிமிர்ந்து
கூண்ட கால்மடிந் திருவிழழ கனல்கள் கொப்பளிப்பப்
பூண்ட வெள்ளெயி றிலங்கிட வாய்புலால் கமழ
வீண்டு முட்செறி வனத்திடை சினத்தொடும் இருக்கும்

புலியின் வெறிச்செயல்:

நிரம்பும் வள்ளுகிர் மடங்கலின் இனங்களில் நிணமுண்
டிரும்ப னைக்கைமும் மதகரிக் கோட்டினை யீழ்த்திட்
டுரம்பி எந்துதி ரங்களை மாந்திநின் றுறங்கா
தரும்பெ ருங்கிரி பிதிர்ந்திட வுருமினும் அலறும்

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்

ஆசிரியர் குறிப்பு:

  • கேரளா மாநிலத்திலுள்ள திருவஞ்சைக்களத்தில் பிறந்தவர் குலசேகரப் பெருமாள்
  • இராமபிரானிடம் பக்தி மிகுதியாக வாய்க்கப் பெற்ற காரணத்தால் இவர்
  • குலசேகரப் பெருமாள் என்றும் அழைக்கப்பட்டார்.
  • இவர் பன்னிரு ஆழ்வார்களில் ஒருவர்.
  • இவர் அருளிய திருவாய்மொழி நாலாயிரத்திவ்விய பிரபந்தத்தில் ஒன்று.
  • இதில் நூற்றைந்து பாசுரங்கள் உள்ளன.
  • இவர் வடமொழி, தென்மொழி இரண்டிலும் வல்லவர்.
  • குலசேகரர் திருவரங்கத்தின் மூன்றாவது மதிலைக் கட்டியதால் அதற்கு குலசேகரன்
  • வீதி என்னும் பெயர் இன்றும் வழங்கி வருகிறது.
  • இவரது காலம் கி.பி.ஒன்பதாம் நூற்றாண்டு.

நூற் குறிப்பு:

  • தமிழகத்தின் பழம்பெரும் சமயங்களுள் ஒன்று வைணவம்
  • வைணவம் திருமாலை முழுமுதற் கடவுளாய்க் கொண்டு போற்றும்.
  • பன்னிரு ஆழ்வார்கள் பாடியருளிய தேனினும் இனிய தீந்தமிழ்ப் பனுவல் நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்.
  • “மீன்நோக்கும் நீள்வயல்சூழ் வித்துவக்கோட் டம்மாஎன்
    பானோக்கா யாகிலுமுன் பற்றல்லால் பற்றில்லேன்
    தானோக்கா தெத்துயரம் செய்திடினும் தார்வேந்தன்
    கோனோக்கி வாழுங் குடிபோன் றிருந்தேனே”.
    – குல சேகர ஆழ்வார்
தேம்பாவணி

ஆசிரியர் குறிப்பு:

  • பெயர் – வீரமாமுனிவர்
  • இயற்பெயர் – கான்ஸ்டாண்டின் ஜோசப் பெஸ்கி
  • பெற்றோர் – கொண்டல் போபெஸ்கி – எலிசபெத்
  • பிறந்த ஊர் – இத்தாலி நாட்டில் காஸ்திக்கிளியோன்
  • அறிந்த மொழிகள் – இத்தாலியம் இலத்தீன், கிரேக்கம், எபிரேயம், தமிழ், தெலுங்கு, சமற்கிருதம்.
  • தமிழ்க் கற்பித்தவர் – மதுரைச் சுப்பிரதீபக் கவிராயர்
  • சிறப்பு – முப்பதாம் வயதில் தமிழகம் வந்து தமிழ் பயின்று காப்பியம் படைத்தமை
  • இயற்றிய நூல்கள்
    1. ஞானோபதேசம்
    2. பராமார்த்த குருகதை
    3. சதுரகராதி
    4. திருக்காவலூர்க் கலம்பகம்
    5. தொன்னூல் விளக்கம்
  •  காலம் – 1680 – 1747

நூல் குறிப்பு:

  • தேம்பாவணி – தேம்பா + அணி – வாடாதமாலை தேம்பாவணி தேம்  பா  அணி –
  • தேன் போன்ற இனிய பாடல்களாலான மாலை.
  • இந்நூல் கிறித்தவச் சமயத்தாரின் கலைக் களஞ்சியம் என அழைக்கப்படுகிறது.
  • இந்நூலில் மூன்று காண்டங்களும் முப்பத்தாறு படலங்களும் உள்ளன. பாடல்களின் எண்ணிக்கை மூவாயிரத்து அறுநூற்றுப் பதினைந்து.
வில்லிபாரதம் – வில்லிபுத்தூரார்
ஆசிரியர் குறிப்பு:
  • பெயர் – வில்லிப்புத்தூரார்
  • தந்தையார் – வீரராகவர்
  • ஆதரித்தவர் – வக்கபாகையை ஆண்ட வரபதி ஆட்கொண்டான்.
  • காலம் – பதினான்காம் நூற்றாண்டு

நூல் குறிப்பு:

  • வில்லிபாரதம் பத்து பருவம் கொண்டது.
  • நாலாயிரத்து முந்நூற்றைம்பது விருத்தப் பாடலால் ஆனது.
திருவிளையாடற் புராணம் 

ஆசிரியர் குறிப்பு:

  • பரஞ்சோதி முனிவர் நாகை மாவட்டத்திலுள்ள திருமறைக்காடு (வேதாரண்யம்) என்னும் ஊரில் பிறந்தவர்.
  • தமிழிலும் வடமொழியிலும் புலமை பெற்றவர்
  • இவரின் தந்தையார் மீனாட்சி சுந்தர தேசிகர் ஆவார்.
  • பரஞ்சோதி முனிவர் துறவியாகிச் சிவாலயங்கள் தோறும் சென்று இறைவனை வழிபட்டு வந்தார்.
  • மதுரை நகரினை அடைந்து மீனாட்சி அம்மனையும் சோமசுந்தரக் கடவுளையும் வணங்கியவர், அந்நகரிலேயே சிலகாலம் தங்கியிருந்தார்.
  • அந்நகரத்தார் அவரைக் கேட்டுக் கொண்டதற்கு இணங்க திருவிளையாடற் புராணத்தை இயற்றினார்.
  • அந்நூலைச் சிவபெருமான் திருக்கோவிலின் எதிரே உள்ள அறுகால் பீடத்தில் இருந்து வடமொழி தென்மொழிப் புலவர் யாவரும் போற்ற அரங்கேற்றினார்.
    திருவிளையாடற் போற்றிக் கலிவெண்பா, மதுரைப்பதிற்றுப்பத்தந்தாதி ஆகிய நூல்களையும், வேதாரண்ய புராணம் (திருமறைக்காட்டுப் புராணம்) என்னும் மொழிபெயர்ப்பு நூலையும் இயற்றியுள்ளார்.

நூல் குறிப்பு:

  • திருவிளையாடற் புராணம் கந்தபுராணத்தின் ஒரு பகுதியான ஆலாசிய மான்மியத்தை அடிப்படையாகக் கொண்டு இயற்றப்பட்டது.
  • இந்நூல் மதுரைக்காண்டம் (பதினெட்டுப் படலம்) கூடற்காண்டம் (முப்பது படலம்) திருவாலவாய் காண்டம் (பதினாறு படலம்) என்னும் முப்பெரும் பகுதிகளையும் படலம் என்னும் அறுபத்து நான்கு உட்பிரிவுகளையும் உடையது.
  • இதில் மூவாயிரத்து முந்நூற்று அறுபத்து மூன்று விருத்தப்பாக்கள் உள்ளன.
  • மதுரையில் இறைவன் நிகழ்த்திய அறுபத்து நான்கு திருவிளையாடல்களை இப்படலங்கள் விளக்குகின்றன.
  • இந்நூல் இறைவனின் திருவிளையாடல்களை விளக்கி எழுந்த நூல்களுள் வரிவானதும் சிறப்பானதும் ஆகும்.
  • தொடைநயமும் பக்திச்சுவையும் மிக்க இந்நூலுக்குப் பண்டிதமணி ந.மு. வேங்கடசாமி உரையெழுதியுள்ளார்.
  • இறைவனின் திருவிளையாடல்கள் பற்றிய பிற நூல்கள்:
    1. செல்லிநகர்ப் பெரும்பற்றப் புலியூர் நம்பியின் திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணம் (வேம்பத்தூர் திருவிளையாடற் புராணம்)
    2. தொண்டை நாட்டு இளம்பூர் வீமநாதப் பண்டிதரின் கடம்பவன புராணம்
    3. தொண்டைநாட்டு வாயற்பதி அன தாரியப்பனின் சுந்தரபாண்டியன்.

திருவிளையாடற் புராணம்:

  •  புராணம் என்றால் வரலாறு என்று பொருள்
  • சிவபெருமானின் திருவிளையாடல்களைப் பற்றிக் கூறும் நூல்
  • இறைவனின் திருவிளையாடல்களைப் பற்றி முதன் முதலில் கூறிய கல்லாடம் சுந்தரபாண்டியம்
  • கல்லாடத்தின் ஆசிரியர் கல்லாடர் 11 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்
  • ‘கல்லாடம் கற்றவனோடு மல்லாடாதே’ என்பது பழமொழி
  • முதன் முதலில் (13 நூற்றாண்டு) திருவிளையாடற் புராணம் பாடியவர் பெரும்பற்றப் புலியூர் நம்பி
  • இவர் பாடிய திருவிளையாடற் புராணம் திருவாலாவாய் உடையார்
  • திருவிளையாடற் புராணம் என்று அழைக்கப்படுகிறது.
  • அடுத்துத் திரு விளையாடற் புராணம் எழுதியவர் பரஞ்சோதி முனிவர்
  • இவர் ஊர் திருமறைக்காடு
  • காலம் 16 ஆம் நூற்றாண்டு
  • பரஞ்சோதியின் திருவிளையாடற்புராணமே புகழ்பெற்றது.
  • பரஞ்சோதி திருவிளையாடல் என்றே அழைக்கப்படுகிறது.
  • இது சொக்கர் சோமசுந்தரப் பெருமானின் திருவிளையாடலைக் கூறுகிறது.
  • பரஞ்சோதியின் திருவிளையாடற் புராணம் மூன்று காண்டம் (மதுரை, கூடல், திருவாலவாய்) 68 படலம், 3363 பாடல்களைக் கொண்டது.
  • இப்புராணங்கள் ஆலாஸ்ய மகாத்மியம் என்ற வடமொழி நூலின் தழுவல்கள் ஆகும்.

இறைவனிடம் தருமி வேண்டல்:

ஐய யாவையும் அறிதி யேகொலாம்
வையை நாடவன் மனக்க ருத்துணர்ந்(து)
உய்ய வோர்கவி யுரைத்தெ னக்கருள்
செய்ய வேண்டுமென் றிரந்து செப்பினான்.

இறையனாரும் நக்கீரரும்:

ஆரவை குறுகி நேர்நின் றங்கிருந் தவரை நோக்கி
யாரைநம் கவிக்குக் குற்றம் இயம்பினார் என்னா முன்னம்
கீரனஞ் சாது நானே கிளத்தினேன் என்றான் நின்ற
சீரணி புலவன் குற்றம் யாதெனத் தேராக் கீரன்.

நெற்றிக்கண் காட்டினும் குற்றம் குற்றமே:

கற்றைவார் சடையான் நெற்றிக் கண்ணினைச் சிறிதே காட்டப்
பற்றுவான் இன்னும் அஞ்சான் உம்பரார் பதிபோல் ஆகம்
முற்றுநீர் கண்ணா னாலும் மொழிந்தநும் பாடல் குற்றம்
குற்றமே யென்றான் தன்பால் ஆகிய குற்றம் தேரான்.

தமிழ் புராண இலக்கியங்கள் PDF Download

Download TNPSC பொது தமிழ் பாடக்குறிப்புகள்

TNPSC Group 2 பாடக்குறிப்புகள் PDF Download

TNPSC Group 2 நடப்பு நிகழ்வுகள் PDF Download

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்
Facebook  Examsdaily Tamil – FB ல் சேர கிளிக் செய்யவும்
Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!