TNPSC தேர்வுக்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு – பாடத்திட்டத்தில் சில மாற்றங்கள்! முழு விபரம் இதோ!

0
TNPSC தேர்வுக்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு - பாடத்திட்டத்தில் சில மாற்றங்கள்! முழு விபரம் இதோ!
TNPSC தேர்வுக்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு - பாடத்திட்டத்தில் சில மாற்றங்கள்! முழு விபரம் இதோ!
TNPSC தேர்வுக்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு – பாடத்திட்டத்தில் சில மாற்றங்கள்! முழு விபரம் இதோ!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த சில மாதங்களுக்கு முன் இந்த ஆண்டுக்கான தேர்வுகால அட்டவணையை வெளியிட்டுள்ளது. இதனை தொடர்ந்து தற்போது குரூப் 2,2ஏ தேர்வுக்கான பாடத்திட்டத்தில் சில மாற்றங்களை கொண்டுவந்துள்ளது. இது தொடர்பாக மேலும் சில தகவல்களை பார்க்கலாம்.

பாடத்திட்டம் மாற்றம்:

தமிழகத்தில் அரசு துறைகளில் காலியாக இருக்கும் இடங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டி தேர்வுகளின் மூலமாக தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். மேலும் அரசு பணிகளில் உள்ள பதவிகளின் அடிப்படையில் குரூப் 1, குரூப் 2, குரூப் 3 மற்றும் குரூப் 4 மற்றும் குரூப் 5,6,7,8 உள்ளிட்ட தேர்வுகளை நடத்தி வருகிறது. தமிழகத்தில் கடந்த ஆண்டு கொரோனா காரணமாக அனைத்து போட்டித் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டது. தற்போது கொரோனா கட்டுக்குள் உள்ளதால் இந்த ஆண்டுக்கான தேர்வு கால அட்டவணையை TNPSC தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

IND vs WI : ரோஹித் தலைமையிலான இந்திய அணி சிறப்பாக செயல்படும் – டேரன் ஷமி பேட்டி!

இந்த அறிவிப்பின் படி, குரூப் 2,2ஏ தேர்வுக்கான அறிவிப்புகள் பிப்ரவரி மாதம் வெளியிடப்படும். இத்தேர்வு மூலமாக 5831 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு மார்ச் மாதம் வெளியிடப்படும். இத்தேர்வு மூலமாக 5255 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாகவும் மேலும் இந்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. அதனால் இத்தேர்வுக்கு பல்லாயிரக்கணக்கான தேர்வர்கள் தங்களை தயார்ப்படுத்தி கொண்டு வருகின்றனர்.

தற்போது குரூப் 2,2ஏ தேர்வில் உள்ள பாடத்திட்டத்தில் கொண்டுவந்துள்ள சில மாற்றங்களை விரிவாக பார்க்கலாம்.

பகுதி அ : இலக்கணம்
பகுதி ஆ: இலக்கியம்
பகுதி இ: தமிழ் அறிஞர்களும் தமிழ் தொண்டும்

இந்த பகுதி அ, பகுதி ஆ, பகுதி இ உள்ளிட்ட 3 பகுதிகளிலும் 11 மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.

முதலாவதாக பகுதி அ வில் உள்ள புதிய மாற்றங்களை பார்க்கலாம்.

1. தற்போது வரை 20 வகையான இலக்கண தலைப்புகளை கொண்ட இப்பகுதியில் புதிதாக பழமொழிகள் என்ற தலைப்பு கொண்டு வந்துள்ளது.

இதனை தொடர்ந்து இலக்கியம் பகுதியான ‘ஆ’ பகுதியில் சில மாற்றங்களை கொண்டுள்ளது.

2. இதில் உள்ள திருக்குறள் அதிகாரத்தில் ஊக்கமுடைமை, ஈகை, தெரிந்து செயல்வகை, இன்னொ செய்யொமை, கூடொ நட்பு, உழவு உள்ளிட்ட அதிகாரத்தை புதிதாக இணைத்து மொத்தமாக தற்போது 25 அதிகாரத்தை கொண்டுள்ளது.

3. இதையடுத்து இராவண காவியம் தொடர்பான செய்திகள் என்ற தலைப்பும் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.

4. சிற்றிலக்கியங்கள் கீழ் உள்ளவற்றில் அழகர் கிள்ளை விடு தூது, திருவேங்கடத்து அந்தாதி, பெத்தலகேம் குறவஞ்சி உள்ளிட்டவை நீக்கப்பட்டுள்ளது.

தற்போது பகுதி ‘இ’ என்பதன் கீழ் கொண்டு வந்துள்ள சில மாற்றங்களை பார்க்கலாம்.

5. தமிழ் அறிஞர்கள் என்பதன் கீழ் உள்ள சாலை இளந்திரையன், சாலினி இளந்திரையன், மோகன ரங்கன் உள்ளிட்ட புதுக்கவிதை எழுத்தாளர்கள் நீக்கப்பட்டுள்ளது.

6. தமிழ் கடித இலக்கியம் என்பதன் கீழ் உள்ள ஆனந்தரங்கம் பிள்ளை நாள் குறிப்பு நீக்கப்பட்டுள்ளது

7. இதையடுத்து நாட்டுப்புற கலை இசைக்கலை என்பதற்கு பதிலாக நிகழ்கலை (நாட்டுப்புறக் கலைகள்) தொடர்பான செய்தி இடம்பெற்றுள்ளது.

8. அடுத்ததாக தமிழ் அறிஞர்களில் உரைநடையின் கீழ் உள்ள தலைப்புகளில் பேரா.தனிநாயகம் அடிகள், செய்குதம்பி பாவலர் – மொழி நடை தொடர்பான செய்திகள் என்பது புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது

9. அடுத்ததாக சமுதாய தொண்டு என்பதன் கீழ் புதிதாக ம.பொ. சிவஞானம் , காயிதேமில்லத் என்ற தலைப்பு சேர்க்கப்பட்டுள்ளது.

10. தமிழ் மகளிரின் சிறப்பு – வேலு நாச்சியார் மற்றும் சாதனை மகளிர் என்ற தலைப்பை புதிதாக சேர்த்துள்ளது.

11. பகுதி ‘இ’ என்பதன் கீழ் புதியதாக நூலகம் பற்றிய செய்திகள் என்ற தலைப்பு சேர்க்கப்பட்டுள்ளது.

குரூப் 2,2ஏ தேர்வுக்கான புதிய பாடத்திட்டத்தை பெற : https://drive.google.com/file/d/1Y1f0jAr9_Lfiu44-S9o-z2Attzvg1NLU/view

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!