IND vs WI : ரோஹித் தலைமையிலான இந்திய அணி சிறப்பாக செயல்படும் – டேரன் ஷமி பேட்டி!

0
IND vs WI : ரோஹித் தலைமையிலான இந்திய அணி சிறப்பாக செய்லபடும் - டேரன் ஷமி பேட்டி!
IND vs WI : ரோஹித் தலைமையிலான இந்திய அணி சிறப்பாக செய்லபடும் - டேரன் ஷமி பேட்டி!
IND vs WI : ரோஹித் தலைமையிலான இந்திய அணி சிறப்பாக செயல்படும் – டேரன் ஷமி பேட்டி!

இந்திய வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் ஒரு நாள் போட்டிகள் வருகிற பிப்ரவரி 6 ஆம் தேதி தொடங்கவுள்ளது. இந்நிலையில் ரோஹித் தலைமையிலான இந்திய அணி குறித்து முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் டேரன் ஷமி பேட்டியளித்துள்ளார்.

டேரன் ஷமி பேட்டி:

2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 20 ஓவர் T20 போட்டிகளின் கேப்டன் பொறுப்பிலிருந்து விராட் கோஹ்லி விலகினார். இதனை தொடர்ந்து ஒரு நாள் போட்டிகளின் கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். இதனால் சர்வதேச ஒரு நாள் மற்றும் T20 போட்டிகளின் கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டார். இம்மாதம் தொடங்கிய தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் ஹாம்ஸ்ட்ரிங் இஞ்சூரி காரணமாய் இந்திய ஒருநாள் கேப்டன் ரோஹித் சர்மா இடம்பெறவில்லை. ரோஹித்துக்கு பதில் இந்திய டெஸ்ட் அணி வைஸ் கேப்டன் KL ராகுல் அணியை வழி நடத்தினார்.

மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீக்கம்? முதல்வர் முக்கிய தகவல்!

இந்தியா தென்னாபிரிக்கா அணிகள் மோதிய 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இந்திய அணி மூன்றிலும் தோல்வியடைந்து தொடரை கைப்பற்ற தவறியது. இதை தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 T20 போட்டிகளில் விளையாட உள்ளது. இத்தொடரில் இந்திய ஒயிட் பால் கிரிக்கெட் கேப்டன் ரோஹித் சர்மா இடம்பெற்று அணியை வழிநடத்துவார் என்று BCCI தெரிவித்துள்ளது. மேலும் ரோஹித் சர்மா ஹாம்ஸ்ட்ரிங் இஞ்சூரியில் இருந்து முழுமையாக குணமடைந்துள்ளதாக தெரிவித்தது.

Reliance Jio பயனர்களுக்கு ரூ.300க்கு குறைந்த சூப்பரான ரீசார்ஜ் திட்டங்கள் – முழு விவரம் இதோ!

இந்நிலையில் ரோஹித் தலைமையிலான இந்திய அணி குறித்து முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் டேரன் ஷமி பேட்டியளித்துள்ளார். அதில் ரோஹித் ஒரு சிறந்த கேப்டன். கடந்த ஆண்டு நியூசிலாந்து எதிரான போட்டிகளில் ரோஹித்தின் கேப்டன் திறமையை நாம் அனைவரும் கண்டறிந்தோம். இதை தொடர்ந்து ஐபிஎல்லில் அவர் மும்பைக்கு கேப்டனாக இருந்ததை நான் பார்த்திருக்கிறேன். எனவே எம் எஸ் தோனி, (கௌதம்) கம்பீர் போன்ற வெற்றி பெற்ற கேப்டன்களில் ரோஹித்தும் ஒருவர் என தெரிவித்தார். மேலும் தற்போதுள்ள இந்திய அணி மிகவும் பலம் வாய்ந்தது என்று பேட்டியளித்தார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!