திருவிழாக்கள் 

0

திருவிழாக்கள் 

 • மகோத்சவம், பிரமோத்சவம் என்று கூறுவார்கள்.
 • பொதுவாக 1 முதல் 21 நாட்கள் வரை திருவிழா நடைபெறும்.
 • பொதுவாக கொடியேற்றம் முதல் 10 நாட்கள் நடைபெறும்.
 • கொடியேற்றத்திற்கு முன்தினம் விநாயகர் ஊர்வலம் நடத்தப்படும்.
 • துவாஜரோகனம் எனப்படுவது – கொடியேற்றம்.
 • திருவிழாவில் முக்கியமாக நடத்தப்படவேண்டிய கிரியைகள் 18.
 • இறைவனின் தொழில்கள் ஐந்து.
 • சிருஷ்டி – படைத்தல் (மண்எடுத்தல், முளையிடுதல், கொடியேற்றம் முதலியன).
 • ஸ்திதி – காத்தல் (வாகன உற்சவம், யாகம், பலி முதலியன).
 • சம்ஹாரம் – அழித்தல் (தேர்த்திருவிழா, பரிவேட்டை, சாந்தணிதல்).
 • த்ரோபவம் – மறைத்தல் (மௌனமாக நடைபெறும் திருவிழா).
 • அனுக்கிரகம் – அருளல் (மட்டையடி, திருவூடல், நடராஜ உற்சவம்).
 • முதல் 5 நாட்கள் – விருத்திகிரம ஐந்தொழில்.
 • 2-வது 5 நாட்கள் – இலயகிரம ஐந்தொழில்.
 • கொடியேற்றுவிழா தத்துவத்தை உமாபதிசிவாச்சாரியர் ‘கொடிக்கவியில்” கூறியுள்ளார்.
 • முதல் நாள் – கொடியேற்றம் (மூர்த்தியின் வாகனகொடி சிவாலய ரிஷப கொடி, தர்மரூபமாகவும், ஆத்மா உருவமாகவும் மதிக்கப்படுகிறது).
 • முதல் நாள் இரவு – சிவன் மரத்தடியில் வீற்றிருப்பது விருட்ஷ வாகனம். கோலம் -விருத்திகிரம சிருஷ்டி கோலம், மர இலை, கிளைகள் உயிர் வர்க்கங்களாம். இறைவன் சிருஷ்டிக்கெல்லாம் வேர் போன்றிருப்பதாக குறிக்கிறது.
 • 2-வது நாள் காலை – சூரிய பிரபை. மாலை – சந்திரபிரபை, கோலம் – விருத்திகிரம ஸ்திதி கோலம்.
 • 3-வது நாள் காலை – அதிகார நந்தி (விஞ்ஞானகலரின் தலைவன், சாரூப பதவி பெற்றவர்), மாலை – பூத வாகனம்: கோலம் – விருத்திகிரம சம்ஹார கோலம்.
 • 4-வது நாள் – நாக வாகனம், நாகமானது நஞ்சு, மாணிக்கத்தை மறைத்து வைத்திருப்பதால் இத்திருவிழாத்ரோபவத்தை குறிக்கும்.
 • 5-வது நாள் விருஷப வாகனம், மாசற்ற வெள்ளை நிறம்கொண்ட அருள்பெற்ற ஆன்மா – விருஷபம். அருளளைக் குறிக்கும் (அநுக்கிரக கோலம்).
 • 6-வது நாள் – யானை வாகனம் (கோலம் – இலயக்கிரம சிருஷ்டி கோலம்).
 • இலயக்கிரமம் என்றால் ஒழுங்குமுறை எனப்பொருள். உலகப்பொருள் அனைத்தும்ஒரே பிண்டமான யானையின் பருவுடல் போல ஒடுங்குவதை குறிக்கிறது.
 • 7-வது நாள் – கைலாச பர்வத வாகனம், இராவணன் மேலுள்ள கைலாச பர்வதத்தில் இறைவன் எழுந்தருளல்.
 • தீங்கு செய்தோர் அடங்கி வழிபட்டால் இறைவன் அருள்வான் என குறிக்கிறது. கோலம் – ஸ்திதி கோலம், சில இடங்களில் தேர்த்திருவிழா நடைபெறும்.
 • 8-வது நாள் அசுவ (குதிரை) வாகன ஆரோகனம், கோலம் – ஹங்காரம் : மாலையில் – பிச்சாடன கோலம், ரிஷி, ரிஷிபத்தினிகளின் திமிரை அடக்கி பின் மறைந்து அருளினான்.
 • 9-வது நாள் – தேர்த்திருவிழா (ஸ்திதி கோலம்).
 • 10-வது நாள் — தீர்த்தவாரி, காலையில் நடராஜர் வீதி உலா வருவார்.
 • சபையை விட்டு புறப்படுதல் – சிருஷ்டி. அபிஷேகம் – ஸ்திதி.
 • கருஞ்சாந்தணிதல், அலங்கார ஆராதனை – சம்ஹாரம்.
 • வெள்ளைச்சாந்து பொடி – மறைத்தல், மட்டையடி தரிசனம் – அருளல்.
 • அதன்பின் தீர்த்தவாரி நடைபெறும் (மகாருத்ர பாத தீர்த்தம் எனப்படும்.

இதர திருவிழாக்கள்:

திருக்கலியாணத் திருவிழா

 • ஆலயத்தில் 6 (அ) 7 வது திருவிழா நாளில் (அ) தனித்தும் நடைபெறும்.
 • இறைவன், இறைவி செய்வது – திருக்கலியாணம்.
 • இறைவன் எடுக்கும் திருமேனிகள் 3. யோகி – யோக முக்தியருளல், போகி – உயிர்களுக்கு போகம் புரிதல், வேகி(கோர வடிவம்) – உயிர்களுக்கு வினை ஊட்டுகின்றான்.
 • நமக்கு ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு – ஒரு நாள்.
 • பராசக்தி, தட்சன் மகள் தாட்சாயிணியாய், பர்வதன் மகள் பார்வதியாய், மலையத்துவச பாண்டியன் மகள் தடாதகை(மீனாட்சி)யாய் தோன்றி, தவமியற்றி இறைவனை திருமணம் செய்தாள்.
 • திருக்கலியாண தத்துவம் – உலகில் ஆணோ, பெண்ணோ தவமியற்றுபவராயின் இறைவன் காட்சியளித்து அருள்புரிவான்.

விநாயகர் சதுர்த்தி:

 • ஒவ்வொரு வருடமும் ஆவணியில் அமாவாசை கழிந்த 4-ம் நாள் கொண்டாடப்படுகிறது.
 • விநாயகர் – தனக்கு நிகராய் ஒரு நாயகர் இல்லாதவர்.
 • மனிதர், விலங்கு, ஆயுதங்களால் தன்னை கொல்லக் கூடாது என வரம் பெற்ற கஜமுகசூரனைக் கொன்ற தினம்.
 • கஜமுகாசூரனுக்கு கொடுத்த மரியாதையான தலையில் குட்டிக்கொள்ளுதலை
  அந்நாள் முதல் விநாயகருக்கு செய்கின்றனர்.
 • பிரம்மன் பரிந்துரையால் நாரத மாங்கனியை சிவன் முருகனுக்கு கொடுக்க சந்திரன்அதைக் கண்டு சிரிக்க விநாயகர் வெகுண்டு சந்திரனுக்கு சாபம் கொடுத்தார். அதனால் சதுர்த்தியன்று சந்திரனை பார்க்காமல் பூஜிப்பவர்க்கு மட்டுமே விநாயகர் அருள் முழுமையாகக் கிட்டும்.
 • மேலும் சந்திரனை சதுர்த்தியன்று பார்ப்பது உடலுக்கு பலவித தீங்கினை விளைவிக்கும்.

நவராத்திரி விழா:

 • புரட்டாசி மாதம் அமாவாசைக்கு பின்வரும் 9 இரவில் பராசக்தியை பல வடிவாக பூஜிக்கும் விழா.
 • முதல் 3 நாட்கள் – பார்வதி(மலைமகள்), பச்சைஃநீலம்ஃ ஞான வடிவம்.
 • இடையில் 3 நாட்கள் – லட்சுமி(அலைமகள்), சிவப்புஃபொன்ஃ செல்வ வடிவம்.
 • இறுதி 3 நாட்கள் – சரசுவதி(கலைமகள்), வெள்ளைஃ64 கலைகளுக்கும் அதிதேவதை.
 • பத்து இரவுகள் விழா நடப்பதால் இதனை – தசரா என அழைப்பர்.
 • நவராத்திரி தத்துவத்தை பற்றி ‘தேவிபாகவதம்” கூறுவதாவது :
 • எதிரியின் பலத்தை அருந்தும் வலிமையைக் கொண்ட வரத்தினை பராசக்தியிடமிருந்து பெற்ற மகிஷாசூரனை பரமேஸ்வரனை மணந்த தேவியின் அவதாரமான லலிதா கொன்று தேவர் துயரினை போக்கினாள். அவளை எதிர்த்த அசுரன் தம்பியான விசுக்ரன், விசங்கனையும் தேவி தன்னிடத்தில் தோன்றிய துர்;க்கை மூலம் விழுங்கினாள். இதுவே நவராத்திரி விழா தத்துவம்.

 கந்த விரத விழாக்கள்:

 • வார விரதம் — ஒவ்வொரு வெள்ளிக்கிழமை.
 • நட்சத்திர விரதம் – ஒவ்வொரு மாதமும் கிருத்திகை தோறும் விரதமிருந்து முருகனை வழிபடுதல்.
 • ‘சர” என்றால் 25. 25 தத்துவத்தின் கூட்டமாகிய பிரபஞ்சமே சரவணம் ஆகும்.
 • ‘சரவணபவன்” என்பதற்கு நாணல்புல் நிரம்பிய தடாகத்தில் தோன்றியவன் எனப் பொருள்.
 • கார்த்திகை மாதரின் நாளாகிய கிருத்திகையில் முருகன் தோன்றியதால் கார்த்திகேயன் என பெயர் பெற்றான்.
 • மனிதர், விலங்கு, ஆயுதங்களால் தன்னை கொல்லக் கூடாது என வரம் பெற்ற கஜமுகசூரனைக் கொன்ற தினம்.

திதி (அ) சஷ்டி விரதம்:

 • ஐப்பசி அமாவாசை கழிந்த 6 நாட்கள் விரத திருவிழா.
 • காசிப முனிவருக்கும், மாயை அரக்கிக்கும் பிறந்த சூரன், சிங்கமுகன், தாரகன் ஆகியோர் சிவனை நோக்கி தவமிருந்து வரம் பெற்று, தேவர்க்கு தொல்லை கொடுத்ததால் இறைவன் முருகனாய் தோன்ற, அவனோடு தேவர்கள் 6 நாட்கள் உணவருந்தாமல் முருகனை நினைந்து தியானவிரதமிருந்தனர்.
 • போரில் தம்பியரும், தனையரும் இறந்தபின் சூரன் மாமர வடிவாக கடலினுள் மறைந்து நின்றான். முருகன் தன் வேலை எறிந்து மரத்தை இரு கூறாக்கி சேவல், மயிலாக மாற்றி சூரனுக்கு அருள்புரிந்தான்.
 • அதனால் தேவர்கள் ஐப்பசி வளர்பிறை ஆறுதினங்களும் வாழ்த்தி வணங்கினர்.
 • முசுகுந்தன் என்பவன் கந்தசஷ்டி விரதம் மேற்கொண்டு உலக அதிபதியானான்.
 • தத்துவம் – ஆணவ மலம், முக்தியிலும் அழியாது வலுக்குறைந்து நிற்கும் என்பதை சூரன் அழியாது மயிலாய் மாறியது உணர்த்தும்.

திருக்கார்த்திகை விளக்கிடு திருவிழா:

 • கார்த்திகை மாதம் பௌர்ணமி நாளில் கார்த்திகை நட்சத்திரம் வருகையில்.
 • கார்த்திகை நட்சத்திரம்(மீனின்) மறுபெயர் – ஆரல், இறால், அறுவாய், அளக்கர், அறுமீன் ஆகியன.
 • சூரியன் கார்த்திகை நட்சத்திரத்தை குறுகும்போது அக்கினி நட்சத்திரம் ஆரம்பமாகும்.
 • விளக்கிடுவதின் தத்துவம் – இறைவன் உயிர்களின் ஆணவ மலத்தைப்போக்கி தன்மயமாக்குவான்.
 • திருவண்ணாமலையிலும் தீபம் ஏற்றப்படுகிறது.
 • தீபமேற்றி வழிபட முடியாத இடங்களில் சிவ-விஷ்ணு ஆலயத்திற்கு முன் சொக்கபனை வேய்ந்து கொளுத்துவர்.

திருவாதிரை விழா:

 • மார்கழியில் திருவாதிரை நட்சத்திரத்தில் கொண்டாடப்படும்.
 • திரு அடைமொழி நட்சத்திரங்கள் – திருவாதிரை (சிவன்), திருவோணம்(விஷ்ணு)
 • கண்ணன் கீதையில் கூறியது – மாதங்களில் நான் மார்கழி.
 • இம்மாதம் தேவர்களுக்கு விடியற்காலை வேளை.
 • “திருவாதிரையில் நடராஜரை வழிபடவேண்டும்” – காராணாகமம்
 • ஆதிரையன் என்றழைக்கப்படுவது – சிவன்
 • இவ்விழா திருப்பெருந்துறை எனும் ஆவுடையார்கோவிலில் நடைபெறுகிறது.
 • தத்துவம் – நல், தீவினைகளுக்கு ஏற்ப இன்பதுன்பத்தை இறைவன் ஊட்டும் த்ரோபவ செயலை இது கூறுகிறது.
 • கொடியேற்றத்தின் அன்று மாணிக்கவாசகரை எழுந்தருளச் செய்து நிவேதனம் செய்து திருவெம்பாவை ஓதி நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் செய்வர்.
 • மார்கழி திருவாதிரையில் உமையாள் மகிழ சிவன் திருக்கூத்தாடியதால் நாமும் கூத்தன் தரிசனம் கண்டு அந்நாளில் குதூகலிக்கின்றோம்.

வைகுண்ட ஏகாதசி:

 • மார்கழியில் வரும் சுக்லபட்ச ஏகாதசி சர்வமுக்கோட்டி ஏகாதசி என்பர்.
 • ஸ்ரீரங்கத்தில் ஆண்டாள் திருப்பாவை பாடி இறைவனை வணங்குவர்.

தைப்பூச விழா:

 • தைப்பௌர்ணமி பூச நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.
 • திருவிடைமருதூர், மதுரை முதலிய இடங்களில் நடைபெறும்.

சிவராத்திரி விரத விழா:

 • மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தசியில் நடைபெறும்.
 • அன்று சிவாலயங்களில் 4 கால பூஜை நடைபெறும்.
 • இதனை விழாநிசி(இன்பராத்திரி), பிரம்மசொரூபம், மகாதபசு, பிரகாசம், யசசு, சகலபுவனம், சத்தியம் எனக் கூறுவர்.
 • த்ரயோதசி – அம்பிகையை குறிக்கும்.
 • சதுர்த்தசி – சிவனை குறிக்கும்.
 • சிவராத்திரி என்பது பஞ்சபூதங்களை மாயையில் இருந்து ஒடுக்கி அனைவரும் இல்லாதபடி சம்ஹரிப்பது.
 • சம்ஹாரம் செய்த சிவன் நர்த்தனம் ஆடுகையில் சிவகாமி அம்மையார் உயிர்களின் மேல்கொண்ட கருணையால் சிவனை பூஜித்ததால், சிவன் சிவகாமியோடு ஒன்றி மீண்டும் உலகைப் படைத்தான்.
 • உயிர்கட்கு தனு, கரண, புவன, போகமளித்தான்.
  யாமம் அபிஷேகம் பூச்சு மலர் நிவேதனம்
  முதல் யாமம் பஞ்சகவ்யம் சந்தனம் வில்வம் (அ)தாமரை பச்சைபயறு,
  பொங்கல்
  2-ம் யாமம் ரஸபஞ்சாமிர்தம் அகில் துளசி, தாமரை பாயாசம்
  3-ம் யாமம் கொம்புத்தேன் பச்சைகற்பூரம் சாதிமல்லி,
  வில்வம்
  எள்,அன்னம்
  4-ம் யாமம் கருப்பஞ்சாறு குங்குமப்பூ நந்தியாவர்த்தம், நீலோற்பவம் சுத்த, அன்னம்

மாசி மகம்:

 • மாசி பௌர்ணமி மக நட்சத்திரத்தில் நடைபெறும்.
 • பங்குனி உத்திரம் – பங்குனி பௌர்ணமி உத்திர நட்சத்திரத்தில் நடைபெறும். இடம் திருவாரூர்.
 • சித்ராபௌர்ணமி (சைத்ரோத்ஸவம்) – சித்திரை பௌர்ணமி சித்திரை நட்சத்திரத்தில் நடைபெறும். இடம் – மதுரை
 • வைகாசி விசாகம் – வைகாசி பௌர்ணமி விசாக நட்சத்திரத்தில் நடைபெறும். இடம் – திருச்செந்தூர், திருப்பாதிரிபுலியூர்.
 • ஆனி உத்திரம் – ஆனி மாத உத்திர நட்சத்திரத்தில் நடைபெறும். இது ஆனிதிருமஞ்சனம் எனப்படும். இடம் – சிதம்பரம், பெருந்துறை.
 • ஆடிப்பூரம் – ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள், சிவஸ்தல அம்பாளுக்கும் நடைபெறும்.
 • பிரதோஷம் – ஒவ்வொரு மாதமும், வளர்பிறை, தேய்பிறையில் வரும் த்ரயோதசி அன்று பிரதோஷ விரதம் மேற்கொள்ளப்படும். இவ்விரதத்தை சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை ஏதேனும் ஒரு மாதத்தில் நோன்பு நோற்க ஆரம்பிக்க வேண்டும்.
 • சனிக்கிழமை வரும் பிரதோஷம் சிறப்பு வாய்ந்தது.
 • பிரதோஷத்திற்கும், ஏகாதசி, துவாதசிக்கும் உள்ள சம்பந்தம் – துர்வாசர் சிவபூஜையில்கிடைத்த மலரை இந்திரனிடம் கொடுக்க அவன் அதனை அலட்சியமாக வெள்ளை யானை மீது வைக்க, யானையானது அதனை தூக்கியெறிய கோபமுற்ற துர்வாசர் செல்வமனைத்தும் நீங்கக்கடவது என சாபமிட, செல்மிழந்த தேவர்கள், அசுரர் உதவியோடு பாற்கடலை கடைய அதில் இழந்த செல்வங்கள் விஷத்துடன் வர, அதனை சிவன் உண்ண அவர் கழுத்திலே விஷம் தங்கி நீலகண்டன் என பெயர் பெற்றார். அன்றைய தினம் தேவர்கள் வழிபட்டது – ஏகாதசி. மறுதினம் – தேவர்கள் பரமனை பாராயணம் செய்தது – துவாதசி. அதற்கு மறுநாள் சிவன் ஏழரை நாழி தாண்டவமாடியது – பிரதோஷம்.
 • தத்துவம் – சிவபிரசாதத்தை இகழக் கூடாது. இகழந்தால் செல்வமிழந்து அவதியுற நேரிடும்

PDF Download

TNPSC சைவம் & வைணவம் பாடக்குறிப்புகள் Download

TNPSC Current Affairs in Tamil 2018

Download TNPSC அரசியலமைப்பு பாடக்குறிப்புகள்

Download TNPSC பொது தமிழ் பாடக்குறிப்புகள்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்
Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!