TNPSC தேர்வு அட்டவணை வெளியீடு – முழு பட்டியல் இதோ!!

0

TNPSC தேர்வு அட்டவணை வெளியீடு – முழு பட்டியல் இதோ!!

TNPSC தேர்வு அட்டவணை வெளியாகியுள்ள நிலையில் எந்தெந்த தேர்வுகள் எப்போது நடைபெறும் என்பது குறித்த முழு விவரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

TNPSC தேர்வு அட்டவணை:

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தற்போது குரூப் 1,2,4 என அனைத்து தகுதி தேர்வுக்கான அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது. அதாவது, தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகும் தேதி மற்றும் தேர்வு நடைபெறும் தேதி குறித்த முழு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில், குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு இந்த மாதத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஜனவரி மாதத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, ஜனவரி மாதத்தில் தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகி ஜூன் மாதத்தில் தேர்வு நடைபெற இருக்கிறது.

தமிழக மக்களுக்கு வெள்ள நிவாரணத்துடன் ரூ.1000 பொங்கல் பரிசு – முதல்வர் ஆலோசனை!

அடுத்ததாக, குரூப் 2 தேர்வுக்கான அறிவிப்பு மே மாதத்தில் வெளியிடப்படும் எனவும், ஆகஸ்ட் மாதத்தில் தேர்வு நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல, குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பு மார்ச் மாதத்தில் வெளியிடப்படும் எனவும், தேர்வு ஜூலை மாதத்தில் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது போக, 2024 ஆம் ஆண்டில் காலியாகவுள்ள முழு பணியிடம் குறித்த விவரங்களும் வெளியாகியுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!