டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகளில் வினாத்தாள் தயாரிப்பை மாற்ற திட்டம் !!!!

0
டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகளில் வினாத்தாள் தயாரிப்பை மாற்ற திட்டம் !!!!
டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகளில் வினாத்தாள் தயாரிப்பை மாற்ற திட்டம் !!!!

டி.என்.பி.எஸ்.சி., போட்டி தேர்வுகளில் வினாத்தாள் தயாரிப்பை மாற்ற திட்டம் !!!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., நடத்தும் தேர்வுகளில், வினாத்தாள் தயாரிப்பு மற்றும் வினாத்தாள் வழங்கும் முறைகளில் மாற்றம் ஏற்படுத்துவது குறித்து, தேர்வாணையம் ஆலோசனை நடத்திவருகிறது.

வருங்காலங்களில் வினாத்தாள் கசியாமல், அதன் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய கட்டாயம், டி.என்.பி.எஸ்.சி.க்கு ஏற்பட்டுள்ளது. இது குறித்து, தேர்வாணைய அதிகாரிகள் கூடி ஆலோசனை நடத்தி உள்ளனர். வரும் காலங்களில், ஒவ்வொரு போட்டி தேர்விலும், வரிசை எண் மாற்றப்பட்ட ஒன்றுக்கு மேற்பட்ட வகை வினாத்தாள்களை மாற்றி, மாற்றி வழங்குவது.

மேலும், வினாத்தாள் தயாரிப்பில் உள்ள ஆசிரியர்கள் பட்டியலை மாற்றி, புதிய ஆசிரியர்கள் மற்றும் துறைசார் நிபுணர்களிடம், வினாத்தாள் தயாரிப்பு பணிகளை வழங்குவது போன்ற பரிந்துரைகள் முன் வைக்கப்பட்டுள்ளன.

தேர்வு மையத்துக்கு வாகனங்களில் வினாத்தாளை அனுப்புவதற்கு பதில், இணையதளம் வழியே வினாத்தாளை வழங்குவது, அவற்றை பெறுவதற்கு, ஆன்லைனில் ரகசிய குறியீட்டு எண் நிர்ணயிப்பது போன்ற புதிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருவதாக சமூக ஊடகங்களில் செய்திகள் பரவி வருகின்றன.

Official Website

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!