TNPSC குரூப் 4 VAO தேர்வர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – A டூ Z தகவல்கள் இதோ!

1
TNPSC குரூப் 4 VAO தேர்வர்களுக்கு சூப்பர் அறிவிப்பு - A டூ Z தகவல்கள் இதோ!
TNPSC குரூப் 4 VAO தேர்வர்களுக்கு சூப்பர் அறிவிப்பு - A டூ Z தகவல்கள் இதோ!
TNPSC குரூப் 4 VAO தேர்வர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – A டூ Z தகவல்கள் இதோ!

தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையத்தால் அரசுத் துறைகளில் 7 விதமான பணியிடங்களுக்கு குரூப் 4 தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இத்தேர்வு குறித்த விவரங்களை இப்பதிவில் காண்போம்.

குரூப் 4 & VAO:

தமிழகத்தில் கொரோனா தாக்கத்தால் கடந்த 2 ஆண்டுகளாக அரசு பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுகள் நடைபெறவில்லை. இந்த நிலையில் அண்மையில் TNPSC தேர்வு குறித்த அறிவிப்புகள் வெளியானது. இதற்கான அறிவிப்புகள் 2022 பிப்ரவரி மற்றும் மார்ச் மாதம் வெளியாகும் என்று TNPSC தேர்வாணையம் தெரிவித்துள்ளது. இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், கிராம நிர்வாக அலுவலர் வரித் தண்டலர், நில அளவர், வரைவாளர் ஆகிய பணியிடங்களுக்கு நடத்தப்படும் குரூப் 4 தேர்வை லட்சக்கணக்கான மக்கள் எழுதுகின்றனர். அரசுத்துறைகளில் ஆரம்ப நிலை பணியிடங்களை இந்த தேர்வின் மூலம் நிரப்பப்படுவதால் இதற்கான கல்வித்தகுதி 10ம் வகுப்பு ஆகும்.

தமிழகத்தில் மீண்டும் அமலுக்கு வரும் ஊரடங்கு கட்டுப்பாடுகள்? சுகாதாரத்துறை செயலாளர் அறிவிப்பு!

வயது வரம்பு 18 வயது முதல் 30 வரை ஆகும். பட்டியலினத்தவர்கள் 40 வயது வரை இத்தேர்வை எழுதலாம். மேலும் 10ம் வகுப்பிற்கு மேல் கல்வித்தகுதி பெற்றவர்களுக்கு வயது வரம்பு இல்லை. குரூப் 4 தேர்வானது ஒரே ஒரு எழுத்துத் தேர்வை அடிப்படையாக கொண்டது. மொத்தம் 200 வினாக்கள் கேட்கப்படும். ஒவ்வொரு வினாவுக்கும் 1.5 மதிப்பெண்கள் என மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும். குரூப் 4 தேர்வில் பெரும்பாலும் வினாக்கள் 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான பள்ளி பாடப் புத்தகங்களில் இருந்தும் சில வினாக்கள் கேட்கப்படும். மேல்நிலை வகுப்பு பாடப்புத்தகங்களில் இருந்தும் கேட்கப்படும்.

TNPSC Coaching Center Join Now

இந்த நிலையில் தற்போது அரசு போட்டித்தேர்வுகளில் தமிழ் மொழி தேர்வை கட்டாயமாக்கியுள்ளது. இந்த தகுதித் தேர்வில் குறைந்தபட்சம் 40% மதிப்பெண்கள் எடுப்பது அவசியமாகும். தமிழ் மொழிப் பாடப் பகுதியைப் பொறுத்தவரை, பத்தாம் வகுப்பு தரத்தில் கேள்விகள் இடம்பெறும். 75 வினாக்கள் பொது அறிவாகவும், 25 வினாக்கள் திறனறி வினாக்களும் இடம் பெறும். நடப்பு நிகழ்வுகளில் மதிப்பெண் பெற ஆறு மாதம் முதல் 1 வருடம் வரையிலான செய்திகளை தெரிந்திருக்க வேண்டும். கணிதத்தின் மதிப்பெண் பெற முதல் 10 வகுப்பு வரை உள்ள கணித பாடங்களை படிக்க வேண்டும். பாடப்புத்தகங்களை முழுமையாக படித்தாலே எளிதாக 95 மதிப்பெண்கள் வரை பெறலாம்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!