TNPSC குரூப் 4 VAO தேர்வு கல்வித்தகுதி, வயது வரம்பு, பதவிகள் & வினாத்தாள் – முழு விபரங்கள் இதோ!

0
TNPSC குரூப் 4 VAO தேர்வு கல்வித்தகுதி, வயது வரம்பு, பதவிகள் & வினாத்தாள் - முழு விபரங்கள் இதோ!
TNPSC குரூப் 4 VAO தேர்வு கல்வித்தகுதி, வயது வரம்பு, பதவிகள் & வினாத்தாள் - முழு விபரங்கள் இதோ!
TNPSC குரூப் 4 VAO தேர்வு கல்வித்தகுதி, வயது வரம்பு, பதவிகள் & வினாத்தாள் – முழு விபரங்கள் இதோ!

தமிழகத்தில் நான்காம் நிலை அரசுப் பணியிடங்கள் TNPSC தேர்வு வாரியத்தால் நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் Group 4 மற்றும் VAO தேர்வுகளுக்கு விரைவில் அறிவிப்பு வெளியாக உள்ள நிலையில் அந்த தேர்வு முறை குறித்த முழு விபரங்களை இந்த பதிவில் காணலாம்.

TNPSC Group 4,VAO தேர்வு:

தமிழகத்தில் தற்போது கொரோனா பரவல் குறைந்து வருவதை தொடர்ந்து அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் விதமாக அறிவிப்புகள் வெளியாகி கொண்டிருக்கின்றன. அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் TNPSC தேர்வாணையத்தால் நடத்தப்படும் Group 4 மற்றும் VAO தேர்வுகள் கடந்த ஆண்டு பரவிய கொரோனா பெருந்தொற்று காரணமாக நடத்தப்படவில்லை. அதனால் அதிக அளவிலான காலிப்பணியிடங்கள் உருவாகியுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இந்த தேர்வுக்கான அறிவிப்பு TNPSC தேர்வு வாரியத்தால் விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ரத்த வகை இருந்தால் கொரோனா தாக்கும் அபாயம் அதிகம் – ஷாக் ரிப்போர்ட்! தவறாமல் படிங்க!

அதனால் தேர்வு எழுதுபவர்களுக்கு உதவும் வகையில் தேர்வு முறைகள் குறித்து இந்த பதிவில் காணலாம். TNPSC தேர்வு வாரியத்தால் நடத்தப்படக்கூடிய தேர்வுகளில் மிகவும் எளிமையான மற்றும் பெரும்பாலானோர் விண்ணப்பிக்கும் தேர்வு என்றால் அது Group 4 மற்றும் VAO தேர்வுகள் ஆகும். ஏனெனில் இந்த தேர்வுக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி மட்டுமே கல்வித்தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், கிராம நிர்வாக அலுவலர், வரித் தண்டலர், நில அளவர், வரைவாளர் உள்ளிட்ட 7 பதவிகளுக்கு நடத்தப்படுகிறது.

இந்த தேர்வுக்கு பொதுவாக வயது வரம்பு 18 முதல் 30 வயது ஆகும். அரசின் விதிகளின்படி உள்ள இதர பிரிவினருக்கு வயது வரம்பு விளக்கு உண்டு. Group 4 தேர்வு மூலம் நடத்தப்படும் அனைத்து பதவிகளுக்கும் 10ம் வகுப்பிற்கு மேல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வயது வரம்பு இல்லை. இந்த தேர்விற்கு மொத்தம் 200 வினாக்கள் கேட்கப்படும். ஒரு வினாவிற்கு 1.5 மதிப்பெண் அடிப்படையில் மொத்தம் 300 மதிப்பெண் வழங்கப்படும். அந்த 200 வினாக்களில் 100 வினாக்கள் மொழிப்படங்களில் இருந்தும், 75 வினாக்கள் பொதுஅறிவு மற்றும் 25 வினாக்கள் திறனறி தேர்வு அடிப்படையில் கேட்கப்படும்.

TNPSC குரூப் 2/ 2A தேர்வர்கள் கவனத்திற்கு – ஆன்லைன் மாதிரி தேர்வு!

இந்த Group தேர்வில் கலந்து கொண்டு எழுத்து தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவார்கள். பின்னர் நேரடி நியமனம் செய்யப்படும். இவ்வாறு எளிய முறையில் இந்த பணி நியமனம் செய்யப்படுவதனாலேயே பெரும்பாலானோர் இந்த தேர்வை காத்திருந்து விண்ணப்பித்து வருகின்றனர். பணி நியமனம் மேலே குறிப்பிட்ட 7 பணியிடங்களில் ஏதேனும் உங்களுக்கு விருப்பப்பட்ட பணியை உங்களது சொந்த ஊரில் பெற்றுக்கொள்ள முடியும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!