தமிழக அரசில் 2,604 காலியிடங்கள் – ரூ.71,900/- மாத ஊதியம் || கல்வி, வயது… விவரங்கள் இதோ!    

0
தமிழக அரசில் 2,604 காலியிடங்கள் - ரூ.71,900/- மாத ஊதியம் || கல்வி, வயது... விவரங்கள் இதோ!    

தமிழக அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள Junior Assistant பணிக்கான காலியிடங்கள் குறித்த அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. இப்பணிக்கான விண்ணப்பங்கள் 28.02.2024 அன்று வரை https://tnpsc.gov.in/ என்ற இணையதளம் மூலம் பெறப்படவுள்ளது. இந்த பணிக்கு குறித்த தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே வழங்கப்பட்டுள்ளது.

Junior Assistant பணிக்கான தகுதிகள்:

  • TNPSC என்னும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் Junior Assistant பதவிக்கென தமிழக அரசின் பல்வேறு துறைகளின் கீழ் ஒதுக்கப்பட்டுள்ள 2,604 காலியிடங்களின் அறிவிப்பை 30.01.2024 அன்று வெளியிட்டது.
  • இந்த தமிழக அரசு சார்ந்த Junior Assistant பணிக்கு பொருத்தமான நபர்கள் TNPSC Group IV என்னும் எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு வாயிலாக தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.
  • இப்பணிக்கான TNPSC Group IV எழுத்து தேர்வானது 09.06.2024 அன்று காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
  • Junior Assistant பணிக்கு 18 வயது நிரம்பிய 34 அல்லது 37 வயதுக்குள் உள்ள நபர்கள் மட்டுமே விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுவார்கள்.
  • இப்பணிக்கு அரசின் கல்வி வாரியங்களில் 10ம் வகுப்பு, Graduate Degree, Diploma தேர்ச்சி பெற்ற நபர்கள் மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.
  • Junior Assistant பணிக்கு TNPSC Group IV தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படும் நபர்கள் ரூ.19,500/- முதல் ரூ.71,900/- வரை மாத சம்பளமாக பெறுவார்கள்.
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் எளிய வழிமுறை பின்வருமாறு தரப்பட்டுள்ளது.

TNPSC குரூப் 4 தேர்விற்கு இன்னும் 4 மாதங்களே – இதை கண்டிப்பா படிக்க மறக்காதீங்க!!

விண்ணப்பிக்கும் முறை:

  • https://tnpsc.gov.in/ அல்லது  http://www.tnpscexams.in/ என்ற இணையதள முகவரிக்கு செல்லவும்.
  • பின் Apply Online -> விண்ணப்பிக்க என்பதை கிளிக் செய்யவும்.
  • பிறகு திரையில் தோன்றும் பக்கத்தில் Apply Now என்பதை கிளிக் செய்து தங்களது பயனாளர் குறியீடு, கடவுச் சொல் ஆகியவற்றை சரியாக உள்ளீடு செய்து சமர்ப்பிக்க வேண்டும்.
  • பின் திரையில் தோன்றும் விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகல், புகைப்படம், கையொப்பம் ஆகியவற்றை பதிவேற்றம் செய்து சமர்ப்பிக்க வேண்டும்.
  • 30.01.2024 அன்று முதல் 28.02.2024 அன்று வரை இப்பணிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
  • விண்ணப்பதாரர்கள் முதன் முறையாக விண்ணப்பிக்கும் நபராக இருப்பின் Apply Online ->  நிரந்தர பதிவு விவரங்கள் -> புதிய பதிவு செய்ய விழைவோர் என்பதை கிளிக் செய்து தனது பயனாளர் குறியீட்டை உருவாக்க வேண்டும். பிறகு மேற்கண்ட வழிமுறைகளின் படி விண்ணப்பத்தை பதிவு செய்து கொள்ளலாம்.
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களிடம் ரூ.150/- விண்ணப்ப கட்டணமாக வசூலிக்கப்படும்.        

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!