குரூப் 1 தேர்வு விடைக்குறிப்பில் ஆட்சேபனைகள் இருந்தால் தெரிவிக்கலாம் – TNPSC அறிவிப்பு!!

0
குரூப் 1 தேர்வு விடைக்குறிப்பில் ஆட்சேபனைகள் இருந்தால் தெரிவிக்கலாம் - TNPSC அறிவிப்பு!!
குரூப் 1 தேர்வு விடைக்குறிப்பில் ஆட்சேபனைகள் இருந்தால் தெரிவிக்கலாம் - TNPSC அறிவிப்பு!!
குரூப் 1 தேர்வு வினாத்தாள் குறித்து ஆட்சேபனைகள் தெரிவிக்கலாம்- TNPSC அறிவிப்பு!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பாக துணை ஆட்சியர் மற்றும் காவல் துறை கண்காணிப்பாளர் பணிகளுக்கான குரூப் 1 தேர்வு தமிழகம் முழுவதும் ஜனவரி 3 ஆம் தேதி நடைபெற்றது. இதில் 1.31 லட்சம் தேர்வர்கள் கலந்துகொண்டு தேர்வு எழுதினார்கள். குரூப் 1 தேர்வு மாதிரி விடைகளை தேர்வுக்குழு வெளியிட்டுள்ளது. விடைகளில் ஆட்சேபனை இருந்தால் தேர்வர்கள் வருகிற 14-ஆம் தேதிக்குள் அனுப்பலாம் என்று தேர்வு ஆணையம் தெரிவித்துள்ளது.

Download TNPSC Group1 Answer Key

குரூப் 1 தேர்வு தற்காலிக விடைகள்:

தமிழகத்தில் உள்ள துணை ஆட்சியர், காவல்துறை உள்ளிட்ட பணிகளை உள்ளடக்கிய 66 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. கடந்த வருடம் வெளியிடப்பட்ட குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பில் 2 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். தமிழகம் முழுவதும் சுமார் 16 மையங்கள் அமைக்கப்பட்டு முதல்நிலை தேர்வு ஜனவரி 3-ஆம் தேதி நடத்தப்பட்டது. காலை 9.15 மணிக்கு தேர்வு தொடங்கி 1.15 வரை நடைபெற்றது. தேர்வில் 1.31 லட்சம் பேர் கலந்துகொண்டு எழுதினார்கள்.

பணி நிரந்தரம் வழங்கக்கோரி பகுதி நேர ஆசிரியர்கள் போராட்டம் – முதல்வர் வீடு முன்பு முற்றுகை!!

குரூப் 1 தேர்வுக்கான தற்காலிக விடைகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. வெளியிடப்பட்ட வினாத்தாளில் சரியான விடைகள் டிக் செய்யப்பட்டிருக்கும். ஏற்கனவே தேர்வர்கள் தேர்வு முடிந்த அடுத்த நாளே வினாத்தாள்களில் 6 வினாக்களில், மொழியாக்கம், விடைகள் போன்றவை தவறாக உள்ளதாக தெரிவித்தனர். இந்நிலையில் 38, 80, 107 மற்றும் 139 ஆகிய வினாக்கள் தவறாக உள்ளதாக நிபுணர் குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

Download TNPSC Group1 Objection Link

மேலும் வெளியிடப்பட்ட வினாக்கள் மற்றும் விடைகளில் மாற்றம் ஏதும் இருந்தால் வருகிற 14-ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் ஆட்சேபனை தெரிவிக்கலாம். ஏற்கனவே தவறாக உள்ளது என அறிவிக்கப்பட்ட இந்த 4 வினாக்களில் உள்ள ஆட்சேபனைகளை உரிய ஆவணங்களுடன் தெரிவிக்கலாம். ஆட்சேபனைகள் தெரிவிக்கும் போது தேர்வரின் பெயர், பதிவெண், விண்ணப்ப எண், பிறந்த தேதி, தேர்வு பாடத்தின் பெயர், வினா எண் ஆகியவற்றை உள்ளீடு செய்ய வேண்டும். இவ்வாறு பதிவு செய்தபின் தவறாக சுட்டிக்காட்டிய வினாவின் பதில் தோன்றும் அதில் உள்ள தவறு குறித்து தகுந்த புத்தக ஆதாரத்துடன் தெரிவிக்க வேண்டும். இந்த விவரங்கள் இல்லாத ஆட்சேபனைகள் கட்டாயம் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. அஞ்சல் மூலமாக அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!