TNPSC புதிய அறிவிப்பு – கொட்டிக்கிடக்கும் அரசு வேலைவாய்ப்புகள் || சம்பளம்: ரூ.37,700/-

0
TNPSC புதிய அறிவிப்பு - கொட்டிக்கிடக்கும் அரசு வேலைவாய்ப்புகள் || சம்பளம்: ரூ.37,700/-
TNPSC புதிய அறிவிப்பு - கொட்டிக்கிடக்கும் அரசு வேலைவாய்ப்புகள் || சம்பளம்: ரூ.37,700/-
TNPSC புதிய அறிவிப்பு – கொட்டிக்கிடக்கும் அரசு வேலைவாய்ப்புகள் || சம்பளம்: ரூ.37,700/-

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) தற்போது ஒருங்கிணைந்த பொறியியல் சேவைகள் தேர்வு எனும் Combined Engineering Services Examination (CESE) பதவிக்கு காலிப்பணியிடங்கள் நிரப்புவதை குறிப்பிட்டு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் மேற்கண்ட பணிக்கு 625 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவித்துள்ளது. இப்பதிவை முழுமையாக வாசித்தபின், இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்த நபர்கள் தங்களின் பதிவுகளை உடனே செய்து கொள்ள அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Tamil Nadu Public Service Commission (TNPSC)
பணியின் பெயர் Combined Engineering Services Examination (CESE)
பணியிடங்கள் 625
விண்ணப்பிக்க கடைசி தேதி 03.05.2022
விண்ணப்பிக்கும் முறை Online

 

TNPSC காலிப்பணியிடம்:

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பில், Combined Engineering Services Examination (CESE) பதவிக்கு என மொத்தமாக 625 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவித்துள்ளது. இது குறித்த விரிவான தகவல்களை கீழே காணலாம்.

TNPSC CESE கல்வித் தகுதிகள்:
  • 04.04.2022 அன்றைய நாளின் படி, TNPSC – CESE பணிக்கு கீழுள்ளவாறு கல்வி தகுதிகள் உள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • Automobile Engineer in the Motor Vehicles Maintenance Department பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் Automobile Engineering / Mechanical Engineering பாடப்பிரிவில் Diploma / டிகிரி முடித்திருக்க வேண்டும்.
  • Junior Electrical Inspector பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் Electrical Engineering பாடப்பிரிவில் டிகிரி முடித்திருக்க வேண்டும்.
  • Assistant Engineer (Agricultural Engineering) பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் Agriculture அல்லது Mechanical / Civil / Automobile / Production / Industrial Engineering பாடப்பிரிவில் B.E / B. Tech / B.Sc டிகிரி முடித்திருக்க வேண்டும்.
  • Assistant Engineer (Highways Department) பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் Civil Engineering பாடப்பிரிவில் டிகிரி முடித்திருக்க வேண்டும்.
  • Assistant Director of Industrial Safety and Health பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் Mechanical / Electrical / Chemical / Production / Industrial Engineering / Textile Technology பாடப்பிரிவில் டிகிரி முடித்திருக்க வேண்டும்.
  • Assistant Engineer (Civil) (Water Resources Department, PWD) பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் Civil Engineering / Civil and Structural Engineering பாடப்பிரிவில் B.E டிகிரி முடித்திருக்க வேண்டும்.

  • General Foreman and Technical Assistant in Motor Vehicles Maintenance Department பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் Mechanical Engineering / Automobile Engineering / Automobile Technology பாடப்பிரிவில் Diploma / டிகிரி முடித்திருக்க வேண்டும்.
  • Assistant Engineer (Rural Development and Panchayat Raj Department) பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் Civil Engineering பாடப்பிரிவில் B.E டிகிரி முடித்திருக்க வேண்டும்.
  • Assistant Engineer (Civil) பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் Civil Engineering / Highways பாடப்பிரிவில் B.E degree முடித்திருக்க வேண்டும்.
TNPSC அனுபவம்:

மேற்கண்ட பனிக்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற நிறுவனங்கள் அல்லது தனியார் நிறுவனங்களில் குறைந்தது 1 ஆண்டு பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் அல்லது பிரிவில் பணிபுரிந்த முன் அனுபவம் வைத்திருக்க வேண்டும். மேலும் அனுபவம் குறித்த விரிவான தகவல்களை அதிகாரபூர்வ அறிவிப்பில் காணலாம்.

TNPSC CESE வயது வரம்பு:

01.07.2022 அன்றைய நாளின்படி, விண்ணப்பதாரர்கள் கீழுள்ளவாறு விண்ணப்பிக்கும் பணி மற்றும் பதவிக்கு தகுந்தாற்போல் வயது வரம்பு மற்றும் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.

Assistant Engineer பதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு 32 வயது அதிகபட்ச வயதாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Automobile Engineer, General Foreman and Technical Assistant in the Motor Vehicle Maintenance Department பதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு 37 வயது அதிகபட்ச வயதாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும் இப்பணிக்கு அளிக்கப்பட்டுள்ள வயது தளர்வுகள் பற்றி முழுமையான தகவல்களை அதிகாரபூர்வ அறிவிப்பில் காணலாம்.

TNPSC CESE ஊதியம்:

மேற்கண்ட பணிகளுக்கு என்று தேர்வு செய்யப்படும் தகுதியும் திறமை வாய்ந்த நபர்களுக்கு தேர்வாகும் பணி மற்றும் பதவிக்கு ஏற்றாற்போல் மாத ஊதியமானது குறைந்தது ரூ.37,700/- முதல் அதிகபட்ச பட்சம் ரூ.2,05,700/- வரை அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. மேலும் இப்பணிகளுக்கு அளிக்கப்படும் கூடுதல் தொகை குறித்து அறிவிப்பில் காணலாம்.

TNPSC CESE தேர்வு முறை:

விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேரடியாக எழுத்து தேர்வின் ( Written Examination) மூலம் தேர்வு செய்யப்பட்டு, அதன்பின் தேர்வுகளில் தேர்ச்சி ஆனவர்கள் மட்டும் அடுத்தக்கட்ட தேர்வு முறையான Oral Test / Interview மூலம் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

TNPSC CESE கட்டண விவரங்கள்:

பதிவு கட்டணம்:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் பதிவு கட்டணமாக ரூ.150 மட்டும் வசூலிக்கப்படும். இதில் முன்பு One Time online Registration system and within the validity period of 5 years வைத்திருக்கும் விண்ணப்பதாரர்களுக்கு இந்த பதிவு கட்டணம், கிடையாது என்றும் அறிவித்துள்ளது.

தேர்வு கட்டணம்:

இப்பணிக்கு ஆன்லைன் விண்ணப்பங்களை சரியாக பூர்த்தி செய்து சமர்பிக்கும் போது விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் வாயிலாக தேர்வுக்கட்டணம் ரூ.200/- செலுத்த வேண்டி இருக்கும். இது குறித்து விரிவான தகவல்களை அறிவிப்பில் காணலாம்.

TNPSC No.1 Coaching Center – Join Immediately

TNPSC CESE தேதிகள் விவரம்:

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் 04.04.2022ம் தேதி முதல் 03.05.2022 ம் தேதி வரை மட்டும் தங்களின் ஆன்லைன் பதிவுகளை செய்து பயனடைய முடியும்.

Paper-I தேர்வு தேதி:

Subject paper (Degree standard) தேர்வானது 26.06.2022 ம் தேதி காலை 09.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளது.

Paper – II தேர்வு தேதி:

Part-A Tamil Eligibility Test (SSLC Standard) மற்றும் Part-B General Studies (Degree Standard) தேர்வானது 26.06.2022 ம் தேதி மதியம் 02.00 மணி முதல் மதியம் 05.00 மணி வரை நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளது.

TNPSC CESE விண்ணப்பிக்கும் முறை:

இந்த தமிழக அரசு பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் ஆர்வமுள்ள நபர்கள் இப்பதிவின் கீழ் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ தளத்திற்கான இணையதள இணைப்பை கிளிக் செய்து 03.05.2022ம் தேதிக்குள் தங்களின் பதிவுகளை எளிமையாக செய்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Download Notification

Apply Online

Official Website

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!