TNPSC தேர்வர்களுக்கான புதிய அறிவிப்பு 2023 – தேர்வு முடிவுகள் / மதிப்பெண்கள் வெளியீடு!
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள JTA / ATO (Stenography) 2023 பணிகளுக்கு என நடத்தப்பட்ட எழுத்து தேர்வுக்கான முடிவை தற்போது வெளியிட்டுள்ளது. இத்தேர்வு முடிவை தேர்வர்கள் எங்களது வலைதள பக்கத்தின் மூலம் எளிமையாக பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
TNPSC JTA / ATO 2023 தேர்வு முடிவுகள்:
தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை மற்றும் தமிழக ஜவுளி துறையில் காலியாக உள்ள உதவி பயிற்சி அலுவலர் (ATO), இளநிலை தொழில்நுட்ப உதவியாளர் (JTA) ஆகிய பணிகளுக்கான காலியிடங்கள் குறித்த அறிவிப்பானது 18.07.2023 அன்று TNPSC ஆணையத்தால் வெளியிடப்பட்டது. இப்பணிகளுக்கான எழுத்து தேர்வானது 05.10.2023, 06.10.2023 ஆகிய தேதிகளில் காலை, மாலை என இரண்டு சுற்றுகளாக நடத்தப்பட்டது. இந்நிலையில் இத்தேர்வுக்கான முடிவுகளானது இன்று (28.11.2023) வெளியிடப்பட்டுள்ளது.
TNPSC AE தேர்வு.. தயாராக இதோ சூப்பர் வழி!
TNPSC JTA / ATO 2023 எழுத்துத்தேர்வுக்கான முடிவுகள் மற்றும் மதிப்பெண்களை தேர்வர்கள் https://www.tnpsc.gov.in/ என்ற இணையதளம் மூலம் எளிமையாக ஆன்லைனில் பெற்றுக்கொள்ளலாம். உதவி பயிற்சி அலுவலர் (ATO) பணிக்கான 02 காலியிடங்களுக்கு 158 நபர்கள் மற்றும் இளநிலை தொழில்நுட்ப உதவியாளர் (JTA) பணிக்கான 05 காலியிடங்களுக்கு 195 நபர்கள் இத்தகைய எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.