TNPSC & TET போட்டி தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர் கவனத்திற்கு – ஆன்லைன் மாதிரி தேர்வு!
தமிழகத்தில் அரசு போட்டித் தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவி புரியும் வகையில் எங்கள் Examsdaily வலைத்தளத்தில் நாள்தோறும் ஆன்லைன் மாதிரி தேர்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த மாதிரி தேர்வுகள் மூலம் தேர்வர்கள் அனைத்து போட்டி தேர்வுகளிலும் வெற்றி அடையலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆன்லைன் மாதிரி தேர்வு:
தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் தேர்வுகள் நடத்தி பணியாளர்கள்/ அதிகாரிகள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். TNPSC நடத்தி வரும் குரூப்2, குரூப் 2A தேர்வுக்கான அறிவிப்பு அண்மையில் வெளியானது. இந்த தேர்வு வரும் மே 21ம் தேதி நடைபெற உள்ளது. மேலும் 2022 ஆம் ஆண்டு தேர்வு கால அட்டவணையில் (Annual Planner) குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பானது, மார்ச் 2022-இல் வெளியிடப்படும் என குறிப்பிடபட்டுள்ளது. தேர்வு அறிவிப்பு இந்த (மார்ச்) மாதம் வெளியிடப்பட்டால் தேர்வானது ஜூன்/ஜூலை 2022 இல் நடத்தப்பட வாய்ப்பு உள்ளது.
அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கான ஆசிரியர் பணியிடங்கள், தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. (TET exam) ஆசிரியர் தகுதித் தேர்வு மூலம் இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்த நிலையில், தேர்வு வாரியம் TET தேர்வு அறிவிப்பை கடந்த மார்ச் 7ம் தேதி வெளியிட்டது. இந்த அறிவிப்பு அடிப்படையில் TET தேர்வுக்கான விண்ணப்ப பதிவு மார்ச் 14ம் தேதி முதல் தொடங்கி உள்ளது. இத்தேர்வுக்கு ஏப்ரல் 13ம் தேதி வரை விண்ணப்ப பதிவு செய்ய அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த அனைத்து தேர்வுகளுக்கும் பல்லாயிரக்கணக்கான தேர்வர்கள் தயாராகி வருகின்றனர்.
இந்த நிலையில் அனைத்து தேர்வுகளுக்கும் நடப்பு நிகழ்வுகள் பாடத்திட்டத்தில் முக்கிய பகுதியாக உள்ளது. எனவே தேர்வர்களுக்கு உதவும் வகையில் எங்கள் Examsdaily வலைத்தளத்தில் அனைத்து வகையான போட்டி தேர்வுகளுக்கும் ஆன்லைன் மூலம் மாதிரி தேர்வுகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. அதன்படி TNPSC, TET தேர்வுக்கான முந்தைய ஆண்டு தேர்வில் கேட்கப்பட்டுள்ள வினாக்களில் இருந்து தேர்வு நடத்தப்படுகிறது. மேலும் TNPSC & TET தேர்வில் கேட்கப்படும் 10 ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இருந்து உயிரியல் பாடத்திற்கான கேள்விகளை கொண்ட ஆன்லைன் முறையில் மாதிரி தேர்வு நடைபெற உள்ளது. இதை தேர்வர்கள் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.