உதவி அறுவை சிகிச்சை மருத்துவர் தேர்வு தள்ளிவைப்பு

0
உதவி அறுவை சிகிச்சை மருத்துவர் தேர்வு தள்ளிவைப்பு
உதவி அறுவை சிகிச்சை மருத்துவர் தேர்வு தள்ளிவைப்பு

உதவி அறுவை சிகிச்சை மருத்துவர் தேர்வு தள்ளிவைப்பு

வேலூர் தந்தை பெரியார் அரசு பொறியியல் கல்லூரியில் வரும் 21 ஆம் தேதி நடைபெற இருந்த உதவி அறுவை சிகிச்சை மருத்துவர்களுக்கான தேர்வு காலவரையின்றி தள்ளிவைக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தற்போது தெரிவித்து உள்ளார்.

தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வாணையம் மூலம் அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் உள்ள உதவி அறுவை சிகிச்சை மருத்துவர் பணியிடங்களுக்கான இணையவழி தேர்வானது வேலூர் தந்தை பெரியார் அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் வரும் 21 ஆம் தேதி நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் சென்னை மற்றும் சில மாவட்டங்களில் நாளை (19.06.2020) முதல் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் உதவி அறுவை சிகிச்சை மருத்துவர்களை தேர்வு செய்வதற்குரிய இந்த இணையவழி தேர்வானது தேதி குறிப்பிட்டபாடாமல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here