8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.50,000/- ஊதியத்தில் அரசு வேலை ரெடி..!

0
8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.50,000/- ஊதியத்தில் அரசு வேலை ரெடி..!
8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.50,000/- ஊதியத்தில் அரசு வேலை ரெடி..!
8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.50,000/- ஊதியத்தில் அரசு வேலை ரெடி..!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் அலுவலக உதவியாளர் (Office Assistant) பணியிடம் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் இன்றே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். வயது, சம்பளம், விண்ணப்பிக்கும் முறை போன்றவை கீழ்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Tamilnadu Hindu Religious and Charitable Endowments Department (TNHRCE Namakkal)
பணியின் பெயர் Office Assistant
பணியிடங்கள் 04
விண்ணப்பிக்க கடைசி தேதி 22.04.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
இந்து சமய அறநிலையத்துறை காலிப்பணியிடங்கள்:

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள இந்து சமய அறநிலையத் துறையில் காலியாக உள்ள Office Assistant பணிக்கு என 4 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Office Assistant கல்வி தகுதி :

Office Assistant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் 8 ஆம் வகுப்பு தேர்ச்சியை அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற பள்ளி/ கல்வி நிலையங்களில் பெற்றவராக இருப்பது அவசியம் ஆகும்.

Office Assistant வயது விவரம்:

01.07.2021 அன்றைய நாள் கணக்கின்படி விண்ணப்பதாரரின் வயது வரம்பு குறைந்தபட்சம் 18 எனவும் அதிகபட்சம் 32 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Join Our TNPSC Coaching Center

SC/ ST பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு 5 ஆண்டுகள் வயது தளர்வும், MBC/ DNC/ BC பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு 2 ஆண்டுகள் வயது தளர்வும் வழங்கப்பட்டுள்ளது.

இந்து சமய அறநிலையத்துறை ஊதியம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் ரூ.15,700/- முதல் அதிகபட்சம் ரூ.50,000/- வரை ஊதியம் பெறுவார்கள்.

TNHRCE Namakkal தேர்வு செய்யும் விதம்:

Office Assistant பணிக்கு விண்ணப்பிக்கும் தகுதியுள்ள விண்ணப்பதாரர் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

TNHRCE Namakkal விண்ணப்பிக்கும் விதம்:

விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர் அறிவிப்பின் கீழ் தரப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்யலாம் அல்லது அலுவலகத்திற்கு நேரில் சென்று விண்ணப்பத்தை பெற்று அதை பூர்த்தி செய்து கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்யலாம். 22.04.2022 என்ற கடைசி நாளுக்குள் விண்ணப்பங்களை தபால் செய்ய வேண்டும்.

தபால் செய்ய வேண்டிய முகவரி:

உதவி ஆணையர்,
உதவி ஆணையர் அலுவலகம்,
இந்து சமய அறநிலைய துறை,
அரசு அலுவலகளுக்கான கூடுதல் கட்டடம்,
213, முதல் தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்,
நல்லிபாளையம், நாமக்கல் – 637 003.

Download Notification

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!