தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் அறிக்கை!!
தமிழகத்தில், மத்தியபிரதேசம் முதல் வட தமிழ்நாட்டின் கடலோர பகுதி வரை (1.5 கிலோமீட்டர் உயரத்தில்) நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வானிலை ஆய்வு மையம் அறிக்கை:
தமிழகத்தில் நேற்று முதல் நல்ல மழை பெய்து வெயில் தாக்கம் குறைவாக உள்ளது. இந்நிலையில் இன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பின் படி, மத்தியபிரதேசம் முதல் வட தமிழ்நாட்டின் கடலோர பகுதி வரை (1.5 கிலோ மீட்டர் உயரத்தில்) நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த சில நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
06.06.2021:
சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருவள்ளூர், மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், வட தமிழ்நாட்டின் ஏனைய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும் தென் தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் இலேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
07.06.2021, 08.06.2021:
மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழையும் ஏனைய மாவட்டங்களில் இலேசான மழையும்பெய்யக்கூடும்.
09.06.2021, 10.06.2021:
மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இலேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் இலேசான மழையும் பெய்யக்கூடும்.
TN Job “FB Group” Join Now
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய இலேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழையாக புதுக்கோட்டை மாவட்டத்தில் 19 செ.மீ மழை பெய்துள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை:
08.06.2021:
மன்னார் வளைகுடா மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
09.06.2021,10.06.2021:
மத்திய வங்கக்கடல் மற்றும் தெற்கு கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் மேற்குறிப்பிட்ட தேதிகளில் இப்பகுதிகளுக்கு எச்சரிக்கையுடன் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
ரேஷன் பொருட்கள் டோர் டெலிவரி – மத்திய அரசு போட்ட முட்டுக்கட்டை!!
08.06.2021,09.06.2021:
கேரளா கடலோர பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
குறிப்பு: தென் மேற்கு பருவமழை இன்று தமிழ்நாட்டின் அநேக மாவட்டங்களில் முன்னேறியுள்ளது.