TN TRB முதுகலை பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

0
TN TRB முதுகலை பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் - முக்கிய அறிவிப்பு வெளியீடு!
TN TRB முதுகலை பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் - முக்கிய அறிவிப்பு வெளியீடு!
TN TRB முதுகலை பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

முதுகலை பட்டதாரிக்கான ஆசிரியர் தகுதி தேர்வு கணினிவழியில் நவம்பர் 13, 14, 15 ஆகிய தேதிகளில் தேர்வு நடைபெற இருக்கிறது. இந்நிலையில், வணிகவியல், வரலாறு பாடங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

ஆசிரியர் தகுதி தேர்வு:

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப ஒவ்வொரு ஆண்டும் தகுதி தேர்வினை நடத்தி தகுதியான ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். பட்டப் படிப்புடன் பி.எட் மற்றும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக பணியாற்ற தமிழக அரசு நடத்தும் ஆசிரியர் தகுதிக்கான TN TET-தேர்வில் கண்டிப்பாக தேர்ச்சி பெற வேண்டும். அதே போல இந்தாண்டும் ஆசிரியர் தேர்வு வாரியம் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தகுதி தேர்வினை நடத்த உள்ளது.

ExamsDaily Mobile App Download

அதே போல முதுகலை பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் விண்ணப்பங்களை வெளியிட்டுள்ளது. விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலமாக செப்டம்பர் 20-ம் தேதி முதல் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. மேலும், முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கான ஆன்லைன் தேர்வு கணினிவழியில் நவம்பர் 13, 14, 15 ஆகிய தேதிகளில் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக மாவட்ட சுகாதார சங்கத்தில் பணிபுரிய ஆசையா? உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க..!

விண்ணப்பதாரர்கள் செப்டம்பர் 16 முதல் அக்டோபர் 17 க்குள் விண்ணப்பிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், முதுகலை பட்டதாரிக்கான ஆசிரியர் தகுதி தேர்வில் வணிகவியல், வரலாறு பாடங்களுக்கான திருத்தப்பட்ட தேர்வு பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இந்த திருத்தப்பட்ட பாட திட்டங்களை www.trb.tn.nic.in என்கிற இணையதள முகவரிக்கு சென்று அறிந்துகொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!