TN TRB தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு அட்டவணை வெளியீடு – தேர்வர்கள் கவனத்திற்கு!

0
TN TRB தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு அட்டவணை வெளியீடு - தேர்வர்கள் கவனத்திற்கு!
TN TRB தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு அட்டவணை வெளியீடு - தேர்வர்கள் கவனத்திற்கு!
TN TRB தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு அட்டவணை வெளியீடு – தேர்வர்கள் கவனத்திற்கு!

தமிழகத்தில் அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப பல்வேறு அறிவிப்புகளை அறிவித்து வருகிறது. இதனை தொடர்ந்து ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான முக்கிய அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வு

தமிழகத்தில் உள்ள அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான தகுதித் தேர்வு ஆசிரியர் தகுதித் தேர்வு மூலமாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அத்துடன் இத்தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் மட்டுமே அரசு ஆசிரியராக பணியாற்ற முடியும். இந்த தகுதித் தேர்வுவானது கடந்த 2010ஆம் ஆண்டு முதல் தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. ஏனெனில் வருங்கால சமுதாயத்தை கட்டமைப்பதில் மாணவர்கள் முக்கிய பங்கு வகிப்பதால் தகுதியான ஆசிரியர்களாக இருத்தல் வேண்டும்.

TNPSC தேர்வாணையத்தின் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு 2022 – A டூ Z தகவல்கள் இதோ!

அதன் காரணமாக தான் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இத்தேர்வில் தேர்ச்சி பெறுவதன் மூலமாக சான்றிதழை பெற முடியும். அத்துடன் இந்த சான்றிதழ் 7 ஆண்டுகளுக்கு மட்டுமே செல்லுபடியாகும். அதன் பின் மறுபடியும் தேர்வு எழுத வேண்டும் அல்லது மறுமதிப்பீட்டு முறை மூலமாக சான்றிதழை மேலும் சிறிது காலத்திற்கு நீட்டித்து கொள்ளும் வசதிகளும் உள்ளது. அத்துடன் பல்வேறு துறைகளில் உள்ள 9494 காலிப்பணியிடத்தை நிரப்ப இந்த ஆண்டுக்கான தேர்வு கால அட்டவணையை ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் இன்று முதல் ஜன 27 வரை வறண்ட வானிலையே நிலவும் – வானிலை தகவல்!

இதையடுத்து இந்த ஆண்டுக்கான தேர்வு குறித்து முக்கிய அறிவிப்பை தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பில், தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு வருகிற ஏப்ரல் மாதம் 2வது வாரத்தில் நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. அத்துடன் அரசு கலைக்கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணியிடத்துக்கான தேர்வு ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் நடைபெறும் என்றும் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. இப்பணியில் 1334 காலிப்பணியிடங்கள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் இது தொடர்பான கூடுதல் தகவல்களை பெற http://www.trb.tn.nic.in/ என்ற இணையதள முகவரியில் சென்று தெரிந்து கொள்ளலாம்.

ஆசிரியர் தகுதித் தேர்வின் இந்த ஆண்டுக்கான தேர்வு கால அட்டவணை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!