TN TET தேர்வுக்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு – சிலபஸ், தேர்வு முறை பற்றிய முழு விவரம் இதோ!

0
TN TET தேர்வுக்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு - சிலபஸ், தேர்வு முறை பற்றிய முழு விவரம் இதோ!
TN TET தேர்வுக்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு - சிலபஸ், தேர்வு முறை பற்றிய முழு விவரம் இதோ!
TN TET தேர்வுக்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு – சிலபஸ், தேர்வு முறை பற்றிய முழு விவரம் இதோ!

TET தேர்வுக்கான அறிவிப்பு அண்மையில் வெளியாகியுள்ள நிலையில், இந்த தேர்வுக்கான தகுதிகள், பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறை குறித்த முக்கிய தகவல்களை இப்பதிவில் பார்க்கலாம். இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஏப்ரல் 13க்குள் விண்ணப்பிக்கலாம்.

TET தேர்வு:

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கான ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. இதற்கு பல்வேறு தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இந்த தேர்வுகளில் மிக முக்கியமானது (TET exam) ஆசிரியர் தகுதித் தேர்வு. இந்த தேர்வு இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வாகும். இந்த நிலையில், தேர்வு வாரியம் TET தேர்வு அறிவிப்பை மார்ச் 7ம் தேதி வெளியிட்டது. இந்த அறிவிப்பு அடிப்படையில் TET தேர்வுக்கான விண்ணப்ப பதிவு மார்ச் 14ம் தேதி முதல் தொடங்கி உள்ளது. இத்தேர்வுக்கு ஏப்ரல் 13 மாலை 5 மணி வரை விண்ணப்பப் பதிவு செய்ய அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு இரண்டு தாள்களாக நடைபெறும். முதல் தாள் டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி படித்தவர்களுக்கும், இரண்டாம் தாள் பட்டப்படிப்பு ஆசிரியர் பயிற்சி படித்தவர்களுக்கும் நடைபெறும் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

இந்த அறிவிப்பின் அடிப்படையில் முதல் தாள் எழுதுவதற்கு, 12 ஆம் வகுப்பில் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி (D.T.Ed) முடித்திருக்க வேண்டும். இரண்டாம் தாள் எழுதுவதற்கு ஏதேனும் ஒரு இளங்கலை பட்டப்படிப்பு மற்றும் டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி (D.T.Ed) அல்லது ஆசிரியர் பயிற்சியில் (B.Ed) இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். இந்த தேர்வை எழுத விண்ணப்பதாரர் 18 வயதுக்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும், உச்ச வயது வரம்பு கிடையாது. முதல் தாள் 150 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இதில் 150 வினாக்கள் கேட்கப்படும். குழந்தை வளர்ச்சி மற்றும் கற்பித்தல்– 30,மொழிப்பாடம் – 30 (தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், உருது ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து கொள்ளலாம்), ஆங்கிலம் – 30, கணிதம் – 30, சுற்றுச்சூழல் கல்வி – 30 ஆகும்.

இந்த தேர்வுக்கான பாடத்திட்டம்,குழந்தை வளர்ச்சி மற்றும் கற்பித்தல்: 6 – 11 வயதுக்குட்பட்டவர்களுக்கான கல்வி உளவியல் கற்பித்தல் மற்றும் கற்றல்,மொழிப்பாடம்: சம்பந்தப்பட்ட மொழியின் கூறுகள், தொடர்பு மற்றும் புரிந்து கொள்ளும் திறன்கள், ஆங்கிலம்: மொழியின் கூறுகள், தொடர்பு மற்றும் புரிந்து கொள்ளும் திறன்கள், சம்பந்தப்பட்ட பாடப்பிரிவு: கருத்துகள், சிக்கல் தீர்க்கும் திறன்கள் மற்றும் இந்த பாடங்களில் கற்பித்தல் புரிதல் ஆகியவை ஆகும். இந்த தேர்வின் இரண்டாம் தாள் 150 மதிப்பெண்களுக்கு நடைபெறும். 150 வினாக்கள் கேட்கப்படும். இதில் குழந்தை வளர்ச்சி மற்றும் கற்பித்தல்– 30,மொழிப்பாடம் – 30 (தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், உருது ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து கொள்ளலாம்), ஆங்கிலம் – 30,சம்பந்தப்பட்ட பாடப்பிரிவு – 60 ஆகும்.

இந்த தேர்வுக்கான பாடத்திட்டம், குழந்தை வளர்ச்சி மற்றும் கற்பித்தல்: 11 – 14 வயதுக்குட்பட்டவர்களுக்கான கல்வி உளவியல் கற்பித்தல் மற்றும் கற்றல்,மொழிப்பாடம்: சம்பந்தப்பட்ட மொழியின் கூறுகள், தொடர்பு மற்றும் புரிந்து கொள்ளும் திறன்கள்,ஆங்கிலம்: மொழியின் கூறுகள், தொடர்பு மற்றும் புரிந்து கொள்ளும் திறன்கள், சம்பந்தப்பட்ட பாடப்பிரிவு: கருத்துகள், சிக்கல் தீர்க்கும் திறன்கள் மற்றும் இந்த பாடங்களில் கற்பித்தல் புரிதல் ஆகியவை ஆகும். இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க https://trbtet2022.onlineregistrationform.org/TNTRB/ என்ற இணையதளப் பக்கம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க பொதுப் பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ. 500, SC, SCA,, ST,மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.250 ஆகும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!