![தமிழகத்தில் பட்டதாரி ஆசிரியர்களுக்கான TET தாள் - 2 தேர்வு - 1.50 லட்சம் பேர் தேர்வில் பங்கேற்கவில்லை! தமிழகத்தில் பட்டதாரி ஆசிரியர்களுக்கான TET தாள் - 2 தேர்வு - 1.50 லட்சம் பேர் தேர்வில் பங்கேற்கவில்லை!](https://tamil.examsdaily.in/wp-content/uploads/2023/03/தமிழகத்தில்-பட்டதாரி-ஆசிரியர்களுக்கான-TET-தாள்-2-தேர்வு.jpg)
தமிழகத்தில் பட்டதாரி ஆசிரியர்களுக்கான TET தாள் – 2 தேர்வு – 1.50 லட்சம் பேர் தேர்வில் பங்கேற்கவில்லை!
தமிழகத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் – 2 கடந்த மாதம் நடைபெற்றது. இந்த தேர்வில் சுமார் 1.50 தேர்வர்கள் பங்கேற்கவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
ஆசிரியர் தகுதித்தேர்வு:
தமிழகத்தில் 6 முதல் 8ம் வகுப்பு வரை பாடம் கற்பிக்கும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான TET தாள் – 2 தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் தமிழகம் முழுவதும் பல்வேறு மையங்களில் காலை, மாலை என இரு வேலைகளிலும் நடைபெற்றது. முதன் முதலாக இந்த தேர்வு ஆன்லைன் வாயிலாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
இத்தேவை எழுத சுமார் 4 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்தனர். ஆனால் 2,54,224 மட்டுமே தேர்வை எழுதினர். சுமார் 1,47,632 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த தேர்வின் முடிவுகள் நேற்று முன்தினம் இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
Follow our Instagram for more Latest Updates
அதில் 2% தேர்வர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். மீதமுள்ள 98% பேர் தோல்வி அடைந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதே போல கடந்த வருடம் நடைபெற்ற TET தாள் – 1 தேர்வில் 21,543 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
Exams Daily Mobile App Download