தமிழக அரசு போக்குவரத்து கழக ஊழியர்களின் ஓய்வு வயது 58 ஆக குறைப்பு – புதிய அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர்!

0
தமிழக அரசு போக்குவரத்து கழக ஊழியர்களின் ஓய்வு வயது 58 ஆக குறைப்பு - புதிய அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர்!
தமிழக அரசு போக்குவரத்து கழக ஊழியர்களின் ஓய்வு வயது 58 ஆக குறைப்பு - புதிய அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர்!
தமிழக அரசு போக்குவரத்து கழக ஊழியர்களின் ஓய்வு வயது 58 ஆக குறைப்பு – புதிய அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர்!

தமிழக அரசின் கீழ் இயங்கி வரும் போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் ஓட்டுநர்கள், நடத்துனர்கள் ஆகியோரின் ஓய்வு வயதை 58 ஆக குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஓய்வு வயது

தமிழகத்தில் அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 60 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அந்த வகையில் போக்குவரத்து கழக ஓட்டுனர்கள், நடத்துனர்களின் ஓய்வு வயதை 58ஆக குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டப்பேரவையில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். நேற்று சட்டப்பேரவையில் போக்குவரத்து துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அதில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பதில் பேசி இருக்கிறார்.

384 அத்தியாவசிய மருந்துகளின் விலை 11% உயர்வு – ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமல்!

இது குறித்து அவர் கூறுகையில், சென்னையில் போக்குவரத்து பணிமனைகளில் ஆய்வு மேற்கொண்டோம் அதில், ஓட்டுனர்கள், நடத்துனர்கள் ஆகியோர் பல மணி நேரம் பணி புரிந்து வருகின்றனர். அவர்களுக்கு வயது மூப்பு காரணமாக உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் போன்ற நோய் பாதிப்புகள் ஏற்படுகிறது. அதனால் அவர்களின் ஓய்வூதிய வயதை 58 ஆக குறைப்பது குறித்து முதல்வரிடம் கலந்து ஆலோசித்து முடிவு செய்யப்படும் என தெரிவித்துள்ளார். மேலும் சில புதிய அறிவிப்புகளை அவர் வெளியிட்டுள்ளார்.

புதிய அறிவிப்புகள்
  • ஒவ்வொரு அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்திலும் 4 இருக்கைகள் பெண் பயணிகளுக்கு பிரத்யேகமாக ஒதுக்கப்படும்
  • போக்குவரத்துக் கழக டெப்போக்களில் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு விடுதிகள் நடத்த முன்னுரிமை அளிக்கப்படும்
  • குன்னத்தில் ரூ.3.55 கோடியில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும்
  • ஆவடி பேருந்து நிலையம் மற்றும் டெப்போ ரூ.10.76 கோடியில் புதுப்பிக்கப்படும்
  • பாடியநல்லூர் பேருந்து நிலையம் மற்றும் பேருந்து நிலையம் ரூ.5.43 கோடியில் புதுப்பிக்கப்படும்
  • போக்குவரத்து வாகனங்களுக்கு உடற்திறன் சான்றிதழ் வழங்க ஸ்ரீபெரும்புதூர், தாம்பரம், வேலூர், ஸ்ரீரங்கம், திண்டுக்கல், தஞ்சாவூர், திண்டிவனம், விருதுநகர் உள்ளிட்ட 18 இடங்களில் பிபிபி மாதிரியில் தானியங்கி பரிசோதனை மையங்கள் அமைக்கப்படும்.
Exams Daily Mobile App Download

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!