தமிழக அரசு SETC இல் 1,800 காலிப்பணியிடங்கள் – அமைச்சர் பேட்டி!

0
தமிழக அரசு SETC இல் 1,800 காலிப்பணியிடங்கள் - அமைச்சர்
தமிழக அரசு SETC இல் 1,800 காலிப்பணியிடங்கள் - அமைச்சர்

தமிழக அரசு SETC இல் 1,800 காலிப்பணியிடங்கள் – அமைச்சர் பேட்டி!

தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ள நிலையில், பல்வேறு தகவல்கள் மற்றும் உறுதிகளையும் அளித்துள்ளார்.

SETC காலிப்பணியிடங்கள்:

தமிழகத்தில் தற்போது நடப்பாண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இதில் தமிழகத்தின் பல்வேறு தேவைகள் மற்றும் கோரிக்கைகள் பற்றி ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இன்று தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் அவர்கள், ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள திணைக்குளம் கிராமத்தில் 26 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட சமுதாய கூடத்தை திறந்து வைத்தார். அதன் பின்னராக சத்தியமூர்த்தி காலணி அருகில் ரூ.1.66 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள மோட்டார் வாகன அலுவலக கட்டிடத்தை திறந்து வைத்தார்.

மதுரை மாநகராட்சியில் 2,500 காலிப்பணியிடங்கள் – அரசுக்கு கோரிக்கை!

பரமக்குடியில் இருந்து 12 புதிய வழிப்பாதைகளில் அரசு பேருந்து சேவையை பச்சைக்கொடி அசைத்து அமைச்சர் துவங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். தற்போது தமிழகத்தில் 16,650 பேருந்துகள் இயங்கி கொண்டிருப்பதாகவும், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோடநாடு விவகாரத்தில் பல கருத்துக்களை தெரிவித்து வருகிறார். தவறு செய்தவர்களுக்கு நிச்சயமாக தண்டனை கிடைக்கும் என்பதே உண்மை. கடந்த ஆட்சியில் தமிழகத்தின் கடனை ரூ.2.45 லட்சம் கோடியில் இருந்து ரூ. 5 லட்சம் கோடி ரூபாய் ஆக அதிகரித்துள்ளதால் அரசு கடன் நிலுவைகளை செலுத்த சிரமத்தில் உள்ளது.

தற்போதுள்ள சூழ்நிலையில் கடன் வாங்காமல் அரசை நடத்த முடியாத சூழல் உள்ளது. இருப்பினும், சரியான முறையில் வட்டி கட்டி அதிக அளவில் கடன் பெறாமல் இருந்தால் ஓரளவு சுமூகமாக செல்லும் என்று அறிவித்துள்ளார். தொடர்ந்து, போக்குவரத்து துறையில் கருணை அடிப்படையிலான பணிகள் தயாராகி வருகின்றது. தமிழக அரசு போக்குவரத்து துறையில் தற்போது 1800 காலிப்பணியிடங்கள் உள்ளது. மேலும், நடத்துநர், ஓட்டுநர் பணியிடங்களும் காலியாக உள்ளது. பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்த பிறகு முதல்வரிடம் பரிசீலித்து வாரிசுகளுக்கு வேலை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!