தமிழகத்தில் 6 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு – அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்!!

6
தமிழகத்தில் 6 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு - அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்!!
தமிழகத்தில் 6 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு - அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்!!

தமிழகத்தில் 6 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு – அமைச்சர் செங்கோட்டையன் பதில்!!

தமிழகத்தில் அடுத்தகட்டமாக 6 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் தொடங்கப்படுமா என்கிற கேள்விக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் விளக்கம் அளித்துள்ளார்.

பள்ளிகள் திறப்பு:

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கிட்டத்தட்ட 10 மாதங்களுக்கு பின்னர் பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளன. கடந்த ஜனவரி 19 முதல் 10, 12ம் வகுப்புகளுக்கும், பிப்ரவரி 8ம் தேதி முதல் 9 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. 12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்பட்டு உள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. கூடுதல் தேர்வு மையங்கள் உருவாக்கம், வினாத்தாள் தயாரிப்பு பணிகள் மும்முரமாக நடைபெறுகிறது.

நீதிமன்ற ‘பியூன்’ 13 காலிப்பணியிடங்கள் – 22 ஆயிரம் பேர் விண்ணப்பம்!!

இந்நிலையில் ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்களிடம், 11ம் வகுப்பு மாணவர்களுக்கு நடப்பு கல்வியாண்டில் பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுமா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அது குறித்து எந்த ஒரு முடிவும் எடுக்கப்படவில்லை என அமைச்சர் பதில் அளித்தார். மேலும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து கல்வித்துறை ஆய்வு செய்த பின்னரே முதல்வர் இறுதி முடிவை அறிவிப்பார் என தெரிவித்தார்.

TN Job “FB  Group” Join Now

6 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு குறித்த கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர், 6 – 8ம் வகுப்பு வரையிலான அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கல்வி தொலைக்காட்சி மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஆன்லைன் மூலம் கல்வி கற்பிக்கப்படும் முறை தொடரும் என தெரிவித்து உள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

6 COMMENTS

  1. Please reopen the school fast tell the date of reopening please only reopen for 6to 8 only please please please please please 😭😭😭😭🙏🙏🙏🙏

  2. Most of the ountries like dubai, iraq, etc they are again shut down with their people s due to covid 2nd phase. But only india is not thinking about it.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!