தமிழகத்தில் பள்ளிகளை திறக்க பெற்றோர்கள் எதிர்ப்பு !!

0
தமிழகத்தில் பள்ளிகளை திறக்க பெற்றோர்கள் எதிர்ப்பு !!
தமிழகத்தில் பள்ளிகளை திறக்க பெற்றோர்கள் எதிர்ப்பு !!

தமிழகத்தில் பள்ளிகளை திறக்க பெற்றோர்கள் எதிர்ப்பு !!

தமிழகத்தில் வரும் நவம்பர் 16ம் தேதி முதல் பள்ளிகளை திறக்க இருப்பதாக தமிழக அரசு அறிவித்து உள்ளது. ஆனால் இதற்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் பள்ளிகள் திறப்பு இன்னும் தாமதமாகும் நிலை ஏற்படும் அபாயம் உள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன.

வேலைவாய்ப்பு செய்திகள்

பள்ளிகள் திறப்பு !

கொரோனா அச்சத்தினால் கடந்த மார்ச் மாதத்தில் மூடப்பட்ட பள்ளிகள் இன்று வரை திறக்கப்படாமல் உள்ளது. ஆன்லைன் வகுப்புகள் மூலமாக மட்டுமே நடப்பு கல்வியாண்டு செயல்பட்டு வருவதால் பள்ளிகளை திறக்க தமிழக அரசு முடிவு செய்து உள்ளது.

அதன்படி முதற்கட்டமாக தமிழகத்தில் உள்ள 12,500க்கும் மேற்பட்ட பள்ளிகளில் பயிலும் 9 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகளை வரும் நவம்பர் மாதம் 16ம் தேதி முதல் திறக்க உத்தரவிடப்பட்டது. ஆனால் அதற்கு பெற்றோர்கள் தரப்பில் இருந்து பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பியதால் பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டு அதன்படி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

BANK
BANK
பெற்றோர்கள் எதிர்ப்பு !!

அதன்படி பெற்றோர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நேற்று நடைபெற்றது. ஆனால் அதில் பள்ளிகளை திறக்க வேண்டாம் என்ற பெற்றோர்கள் கூறியிருப்பதாக தெரிகிறது. ஏனென்றால் மாணவர்கள் சரியாக சமூக இடைவெளி விட்டு நடக்க மாட்டார்கள் என்றும், இதனால் தொற்றின் பரவல் மீண்டும் வேகமெடுக்கலாம் என்றும் பெற்றோர்கள் தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த கருத்துக்கள் அடங்கிய படிவங்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மூலம் பள்ளி கல்வி இயக்குனரகத்திற்கு அனுப்பப்பட உள்ளது. அதன் பின் அதன் அறிக்கையின் அடிப்படையில் பள்ளிகள் திறப்பு குறித்த அறிவிப்பினை தமிழக அரசு வெளியிடும்.

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!