தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகள் திறப்பு எப்போது ?

0
தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகள் திறப்பு எப்போது? நாளை முடிவு!!
தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகள் திறப்பு எப்போது? நாளை முடிவு!!

தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகள் திறப்பு எப்போது ? நாளை முடிவு!!

தமிழகத்தில் கொரானா நோய் தொற்று மாணவர்களிடத்தில் பரவாமல் இருக்க கடந்த மார்ச் மாதம் பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டது. இதையடுத்து இனி எப்போது திறக்கப்படும் என்பது குறித்து நாளை முதலமைச்சர் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதலமைச்சர் தலைமையில் நாளை நடக்கும் கொரோனா தடுப்பு ஆய்வுக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர்கள் பங்கேற்கின்றனர்.

வேலைவாய்ப்பு செய்திகள்

பள்ளிகள் திறப்பது குறித்த முடிவு

ஏற்கனவே அறிவித்தபடி, விலையில்லா முகக்கவசங்கள் விநியோகம் செய்யப்படுவது குறித்தும் இக்கூட்டத்தில் முடிவெடுக்க வாய்ப்பு உள்ளது என்று எதிர்பார்கப்படுகிறது. பள்ளிகள் மூடப்பதால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்பு நடைபெற்று வருகின்றன. அரசு பள்ளி மாணவர்கள் தொலைக்காட்சி மூலம் பாடம் கற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த கல்வி ஆண்டுக்கான வகுப்புகள், தேர்வுகள் நடைபெறுவது தொடர்பாக தெளிவில்லாத நிலையாக நீடித்துக்கொண்டிருக்கிறது. தற்போது தளர்வுகள் அதிகரிக்கப்பட்டுள்ளதால், பள்ளிகளை திறந்து பாதுகாப்பான முறையில் மாணவர்களை வரவழைத்து பாடம் கற்பிக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன. எனவே நாளை பள்ளி கல்லூரி திறப்பது குறித்து முதலமைச்சர் அறிவிப்பார்.

                                     

பண்டிகைக்கால நடவடிக்கை

மேலும் தீபாவளி பண்டிகை நெருங்குவதால் பொது மக்கள் கூடும் இடங்களில் நோய் பரவுவதற்கான அபாயம் உண்டு. எனவே பண்டிகை காலங்களில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய அம்சங்கள் குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது. வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், குறுவை சாகுபடிக்கான ஏற்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்யப்படுகிறது என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!