13ம் தேதி பாடப்புத்தகங்கள் வெளியீடு – அமைச்சர் தகவல்

0
13ம் தேதி பாடப்புத்தகங்கள் வெளியீடு - அமைச்சர் தகவல்
13ம் தேதி பாடப்புத்தகங்கள் வெளியீடு - அமைச்சர் தகவல்

13ம் தேதி பாடப்புத்தகங்கள் வெளியீடு – அமைச்சர் தகவல்

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் பயிலும் 1முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான கல்வியாண்டிற்கான பாடப்புத்தகங்களை வரும் ஜூலை 13 ம் தேதி வெளியிட இருப்பதாக தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தொற்றின் பரவலால் பள்ளி திறப்பானது, தள்ளி போடப்பட்டுள்ளதால், மாணவர்களுக்கு அவர்களின் நலன் கருதி கல்வி துறை பல்வேறு முடிவுகளினை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக பாடப்புத்தகங்களில் பாடங்களை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

1 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பாடப்புத்தகங்களை குறைக்கும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்றது. 10 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பாடங்களை குறைக்கும் பணி தற்போது முடிவடைந்து உள்ளது.

மேலும் 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பாட குறைப்பு 90 % முடிவடைந்து உள்ளது. அதனை முடித்து விட்டு ஜூலை 13 அன்று பாடப்புத்தகங்கள் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தந்த வகுப்புகளுக்கு ஏற்ப படங்கள் விவரமாக அறிவிக்கப்படும்.

மேலும் பள்ளியில் புத்தகங்களினை வழங்கினால் கூட்டம் அதிகரிக்கும் என்பதனால் மாற்று யோசனை வழங்க திட்டமிடப்படுகிறது.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here