தமிழக மக்களுக்கு ஹாப்பி நியூஸ் – இனி கோவை, மதுரை மாநகரங்களில் மெட்ரோ திட்டம்!

0
தமிழக மக்களுக்கு ஹாப்பி நியூஸ் - இனி கோவை, மதுரை மாநகரங்களில் மெட்ரோ திட்டம்!
தமிழக மக்களுக்கு ஹாப்பி நியூஸ் - இனி கோவை, மதுரை மாநகரங்களில் மெட்ரோ திட்டம்!
தமிழக மக்களுக்கு ஹாப்பி நியூஸ் – இனி கோவை, மதுரை மாநகரங்களில் மெட்ரோ திட்டம்!

தமிழக அரசின் 2023-24 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் நேற்று (மார்ச் 20) தாக்கல் செய்யப்பட்ட நிலையில் சென்னையை தொடர்ந்து கோவை, மதுரை உள்ளிட்ட நகரங்களில் மெட்ரோ ரயில் செயல்படுத்தப்படும் என நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

மெட்ரோ ரயில்

2023-24ம் ஆண்டிற்கான தமிழ்நாடு பட்ஜெட் நேற்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்தாண்டு பட்ஜெட்டை நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். பல துறைகளை சார்ந்த பல அறிவிப்புகள் வெளியான நிலையில், அதில் மெட்ரோ ரயில் கொடுத்த அறிவிப்புகள் மக்களை பெரிதும் கவர்ந்தது. அந்த வகையில் சென்னையில் மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக ரூ. 63,246 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு.. அச்சத்தில் தமிழக மக்கள் – அமைச்சர் கொடுத்த விளக்கம்!

அதனை தொடர்ந்து தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் கோயம்புத்தூர் மாநகரில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. இந்த திட்டத்தில் அவிநாசி சாலை, சத்தியமங்கலம் சாலைகளை உள்ளடக்கி 9,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மதுரையில் மெட்ரோ ரயில் திட்டம் 8,500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் எனவும், மதுரை நகரின் மைய பகுதிகளில் அடியில் அமைக்கப்படும் மெட்ரோ ரயில் திருமங்கலத்தையும் ஒத்தக்கடையையும் இணைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு இரண்டு நகரங்களில் ஒன்றிய அரசின் ஒப்புதல் பெறப்பட்டு, பன்னாட்டு நிதி நிறுவனங்களின் நிதியுதவி மூலம் மெட்ரோ ரயில் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!