தமிழ்நாடு சட்டப்பேரவை நூற்றாண்டு விழா – குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் வருகை!

0
தமிழ்நாடு சட்டப்பேரவை நூற்றாண்டு விழா - குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் வருகை!
தமிழ்நாடு சட்டப்பேரவை நூற்றாண்டு விழா - குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் வருகை!
தமிழ்நாடு சட்டப்பேரவை நூற்றாண்டு விழா – குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் வருகை!

தமிழக சட்டப்பேரவையின் நூற்றாண்டு விழா இன்று கொண்டாடப்பட்ட நிலையில், இந்திய குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வாழ்த்தியுள்ளார்.

நூற்றாண்டு விழா:

தமிழ்நாடு சட்டப்பேரவை, 1921 ஆம் ஆண்டு ஜனவரி 12ஆம் தேதி தொடங்கப்பட்டது. பேரவையின் நூற்றாண்டு விழா கொண்டாடுவதற்காக தமிழக அரசு பல்வேறு ஏற்பாடுகளை செய்து வந்தது. தமிழக முதல்வர் முக ஸ்டாலின், நிகழ்வில் பங்கேற்க வருமாறு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் சபாநாயகர் அப்பாவு ஆகியோருக்கு நேரில் சென்று அழைப்பு விடுத்தார். இன்று நூற்றாண்டு விழா கொண்டப்பட இருந்த நிலையில், சென்னைக்கு தனி விமானம் மூலம் குடியரசு தலைவர் டெல்லியில் இருந்து பிற்பகலில் வந்தடைந்தார்.

ஆகஸ்ட் 4 தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் – அரசு தகவல் வெளியீடு!!

பின்னர் ஆளுநர் மாளிகைக்குச் சென்ற குடியரசுத் தலைவர், 5 மணியளவில் சட்டப்பேரவைக்கு வந்தார். விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் சபாநாயகர் அப்பாவு அவர்கள், திமுக முன்னாள் தலைவர் கலைஞர் கருணாநிதியை பற்றி பேசினார். அதன்பின்னர், கருணாநிதியின் உருவப் படத்தை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார். அதன்பிறகு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் பேசினார்கள்.

TN Job “FB  Group” Join Now

அப்போது, தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த ஒரு சில சட்டங்களை பற்றி கூறினார். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலேயே மகளிருக்கு வாக்குரிமை அளிக்கும் சட்டத்தை முதன்முதலாக நிறைவேற்றிய பெருமை சென்னை மாகாணச் சட்டமன்றத்திற்கு உண்டு. அதோடு, தேவதாசி ஒழிப்புச் சட்டம், மகளிருக்கு உள்ளாட்சிப் பதவிகளில் உரிய இடஒதுக்கீடு, பெண் குழந்தைகளைப் பாதுகாக்க சிறப்புத் திட்டம் என மகளிர் நலன் காப்பதில் நாட்டிற்கே முன்னோடித் திட்டங்களை உருவாக்கித் தந்த பெருமை கொண்டது. அதுமட்டுமல்ல, சென்னை மாநிலத்திற்கு `தமிழ்நாடு’ எனப் பெயர் சூட்டி வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தனித் தீர்மானத்தை அண்ணாவின் அரசு நிறைவேற்றியது.

ஆகஸ்ட் 16ல், 12ம் வகுப்பு துணைத்தேர்வுகள் தொடக்கம் – CBSE வாரியம் அறிவிப்பு!

இந்தியாவின் முதல் குடிமகனான குடியரசுத் தலைவர், கருணாநிதியின் உருவப் படத்தைத் திறந்து வைத்ததை எண்ணி, தமிழ்நாட்டின் முதலமைச்சராக மகிழ்கிறேன், கருணாநிதியின் மகனாக நெகிழ்கிறேன்’ என்றார். அதன்பிறகு, குடியரசு தலைவர் அவர்கள் உரையாற்றினார். அவர், இன்றைய வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த கலைஞர் மு.கருணாநிதியின் படத்தைத் திறந்து வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன், உண்மையில் இது முக்கியத்துவம் வாய்ந்த நாள்’ எனத் தமிழில் பேசினார். `தனது புரட்சிகரமான எண்ணங்களால் சமூக சீர்திருத்தத்துக்கு கருணாநிதி வித்திட்டார். அவரது படத்தைத் திறந்து வைப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்’ என்றார். இறுதியாக, `ஜெய்ஹிந்த்’ என்று கூறி தனது உரையை முடித்தார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!