ஆகஸ்ட் 4 தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் – அரசு தகவல் வெளியீடு!!

0
ஆகஸ்ட் 4 தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் - அரசு தகவல் வெளியீடு!!
ஆகஸ்ட் 4 தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் - அரசு தகவல் வெளியீடு!!
ஆகஸ்ட் 4 தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் – அரசு தகவல் வெளியீடு!!

நாளை மறுநாளான ஆகஸ்ட் 4ம் தேதி தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில் நாமக்கல் கவிஞர் மாளிகையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவை கூட்டம்:

தமிழகத்தில் திமுக தலைமையிலான புதிய ஆட்சி கடந்த மே மாதம் முதல் தொடங்கியுள்ளது. தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தனது ஆட்சியில் 33 அமைச்சர்களை நியமித்துள்ளார். இதனால் புதிய அரசின் முதல் அமைச்சரவை கூட்டம் புதிதாக முதல்வர் மற்றும் அமைச்சர்கள் அனைவரும் பதவியேற்ற பின்னர் முதன்முதலாக கடந்த மே 7ம் தேதி நடைபெற்றது. இந்த முதல் அமைச்சரவை கூட்டத்தில், தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும். ஆக்சிஜன் மற்றும் கொரோனா தடுப்பூசி மருந்துகள் தட்டுப்பாடு போன்றவற்றை போக்க செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்தும் அதில் ஆலோசிக்கப்பட்டது.

ஆகஸ்ட் 16ல், 12ம் வகுப்பு துணைத்தேர்வுகள் தொடக்கம் – CBSE வாரியம் அறிவிப்பு!

இந்நிலையில், தமிழக அமைச்சரவையின் அடுத்தகட்ட ஆலோசனை கூட்டம் வரும் ஆகஸ்ட் 4ம் தேதி அன்று நடக்க இருப்பதாக அரசு தகவல் வெளியிட்டுள்ளது. தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நடக்க உள்ள அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சர்கள் அனைவரும் கலந்து கொள்ள இருக்கிறார்கள். நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் தமிழகத்தின் நிதிநிலை அறிக்கை மற்றும் அரசின் புதிய திட்டங்கள் குறித்த ஆலோசனை நடக்க இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

இந்நிலையில் கடந்த வாரம் சென்னை தலைமை செயலகத்தில் மனிதவள மேலாண்மைத்துறையின் செயல்பாடுகள் தொடர்பான ஆய்வு கூட்டத்தில் முதல்வர் அரசு அதிகாரிகளிடம் பல முக்கிய விவரங்களை அறிவுறுத்தியுள்ளார். அதில், குடும்பத்தில் முதல் தலைமுறைப் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பகங்கள் மூலம் அரசுப் பணியிடங்களில் முன்னுரிமை வழங்குவது மற்றும் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்கீழ் அனைத்துத் துறைகளிடமும் இணையதளம் மூலம் தகவல் பெறும் வசதிகளை மேம்படுத்தவும் அறிவுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!