கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டோர் கவனத்திற்கு – சுகாதாரத்துறை செயலர் முக்கிய தகவல்!

0
கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டோர் கவனத்திற்கு - சுகாதாரத்துறை செயலர் முக்கிய தகவல்!
கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டோர் கவனத்திற்கு - சுகாதாரத்துறை செயலர் முக்கிய தகவல்!
கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டோர் கவனத்திற்கு – சுகாதாரத்துறை செயலர் முக்கிய தகவல்!

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு தொற்று ஏற்பட்டாலும் பெரும்பாலும் மரணம் ஏற்படுவதில்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் விளக்கம் அளித்துள்ளார்.

தடுப்பூசி முகாம்:

நாடு முழுவதும் கொரோனா தாக்கம் தீவிரமாக இருந்து வந்தது. எனவே மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது. பின் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு நோய் தாக்கம் படிப்படியாக கட்டுப்படுத்தப்பட்டது. கொரோனா முதல மற்றும் இரண்டாம் அலை தொடர்ந்து 3ம் அலை பரவும் வாய்ப்பு அதிகமாக இருப்பதாக கூறப்பட்டது. எனவே தடுப்பூசி பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது. அதனை தொடர்ந்து கொரோனா தாக்கம் குறைந்து வந்தது.

தமிழகத்தில் தீவிர ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்? முதல்வர் முக்கிய ஆலோசனை! விரைவில் அறிவிப்பு!

தற்போது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை 5 தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று முடிந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் 50,000 இடங்களில் 6வது மெகா தடுப்பூசி முகாம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் நடைபெற்று வரும் தடுப்பூசி முகாமினை ஆய்வு செய்தார்.

தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்புகளுக்கு ‘இல்லம் தேடி கல்வி’ திட்டம் – தன்னார்வலர்களுக்கு அழைப்பு!

அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு தொற்று ஏற்பட்டாலும் பாதுகாப்பாக இருப்பதாகவும் ஏற்கனவே உள்ள வேறு சில பாதிப்புகள் உள்ளிட்ட காரணங்களால் 4% மக்களுக்கு மட்டுமே இறப்பு ஏற்படுவதாகவும் கூறியுள்ளார். மேலும் கொரோனா 3ம் அலை பரவுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறிய அவர் முகக்கவசம், தனிமனித இடைவெளியை கடைபிடிப்பது அவசியம் என்றும் தெரிவித்துள்ளார். தமிழக அரசு மேற்கொண்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து மக்கள் பின்பற்றுவதன் மூலம் கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்த முடியும் எனவும் கூறியுள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!