தமிழகத்தில் ஏப்ரல் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு !!!

0
தமிழகத்தில் ஏப்ரல் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு !!!
தமிழகத்தில் ஏப்ரல் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு !!!

தமிழகத்தில் ஏப்ரல் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு !!!

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து வருவதை தொடர்ந்து ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தலைமையில் நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இந்தியாவில் கொரோனா:

இந்தியாவில் கொரோனா வைரஸினால் இதுவரை 9000கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். உயிர் இழப்புகளும் நாளுக்குநாள் அதிகரித்தபடி உள்ளதால் ஊரடங்கை நீட்டிக்க பல மாநில முதல்வர்களும், மருத்துவ நிபுணர்களும் கோரிக்கை வைத்துள்ளனர். ஏற்கனவே பஞ்சாப், ஒடிசா, மஹாராஷ்டிரா, மேற்கு வங்கம் மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களின் முதலமைச்சர்கள் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதக அறிவிப்பு வெளியிட்டு உள்ளனர்.

கொரோனா பாதிப்பின் அடிப்படையில் 3 நிறங்களாக பிரிக்கப்படும் தமிழக மாவட்டங்கள்.!

ஊரடங்கு கோரிக்கை

தமிழகத்திலும் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என மருத்துவ குழுவினரும், அனைத்துக்கட்சி தலைவர்களும் வலியுறுத்தி வந்த நிலையில் தமிழக முதல்வர் ஏப்ரல் 30 வரை ஊரடங்கை நீட்டிப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழக அரசின் அறிவிப்புகள்:
  • தமிழகத்தில் ஏப்ரல் 30ம் தேதி வரை உலக சுகாதார நிறுவனத்தின் கருத்து மற்றும் மருத்துவ வல்லுனர்களின் அறிவுறுத்தலின் படி ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
  • ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளதால் ரேஷன் கார்டுதாரர்களுக்கான மே மாதத்திற்கான பொருட்கள் இலவசமாக வழங்கப்படும். அதில் ஒரு கிலோ பருப்பு, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு லிட்டர் சமையல் எண்ணெய் மற்றும் 1000 ரூபாய் வழங்கப்பட உள்ளது.
  • ஏற்கனவே அறிவித்தபடி காலை 6 மணிமுதல் மதியம் 1 மணி வரை பேக்கரிகள் மற்றும் ஹோட்டல்கள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. அங்கு பார்சல் மட்டுமே வழங்க உத்தரவிடப்பட்டு உள்ளது.
  • தமிழகத்தில் ஏற்கனவே ஊரடங்கு அமலில் இருந்த போது அமலில் இருந்து அனைத்து விதிமுறைகளும் தொடரும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
  • கட்டிடத் தொழிலாளர்கள் உட்பட அனைத்து அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும் ரூ. 1000 நிதியுதவி வழங்கப்படும்.
  • பிறமாநில தொழிலாளர்களுக்கு 15 கிலோ அரிசி, ஒரு கிலோ துவரம் பருப்பு மற்றும் ஒரு லிட்டர் சமையல் எண்ணெய் இலவசமாக வழங்கப்பட உள்ளது.
  • தமிழகத்தில் ஊரடங்கை தளர்த்தினால் நோய்த்தொற்று அதிகரிக்கும் என்பதால் இந்த உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தெரிவித்து உள்ளார்.
இந்தியாவில் ஊரடங்கின் போது 12 வகையான தொழில்களுக்கு அனுமதி

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!