இறுதி செமஸ்டர் தேர்வு 1 மணி நேரம் ஆன்லைனில் நடைபெறும் ! – அரசின் அனுமதி பெற்று தேர்வு நடத்த வேண்டும் !!!!

0
இறுதி செமஸ்டர் தேர்வு 1 மணி நேரம் ஆன்லைனில் நடைபெறும்
இறுதி செமஸ்டர் தேர்வு 1 மணி நேரம் ஆன்லைனில் நடைபெறும்

இறுதி செமஸ்டர் தேர்வு 1 மணி நேரம் ஆன்லைனில் நடைபெறும் ! – அரசின் அனுமதி பெற்று தேர்வு நடத்த வேண்டும் !!!!

தமிழகத்தில் பொறியியல் பயிலும் மாணவர்களுக்கு இறுதி செமஸ்டர் தேர்வு ஆனது 1 மணி நேரம் ஆன்லைனில் நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் தற்போது அறிவித்துள்ளது. மேலும் அரசின் அனுமதி பெற்று தான் தேர்வு நடத்த வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

செமஸ்டர் தேர்வுகள் :

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. மேலும் அரியர் தேர்வுகளும் ரத்து செய்யப்படுவதாக அரசாணை வெளியிடப்பட்டது. ஆனால் இறுதி ஆண்டு மாணவர்களுக்கு அரியர் தேர்வுகள் கட்டாயம் நடத்தப்படும் என்று காலை அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்து இருந்தது.

இறுதி செமஸ்டர் தேர்வு !!!

தற்போது பொறியியல் இறுதி செமஸ்டர் தேர்வு 1 மணி நேரம் ஆன்லைனில் நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. மேலும் மாதிரி ஆன்லைன் தேர்வு 19, 21 ஆகிய தேதிகளில் நடைபெறும் எனவும் கூறியுள்ளது. இறுதி செமஸ்டர் தேர்வில் 40 கேள்விகள் கேட்கப்படும் எனவும், 30 கேள்விகளுக்கு மட்டும் மாணவர்கள் பதிலளித்தால் போதுமானது எனவும் அறிவித்துள்ளது.

அரசின் அனுமதி !!!

மேலும் சில பல்கலைக்கழகங்கள் தேர்வு தொடர்பான முடிவை தன்னிச்சையாக எடுத்து வருவதாக புகார் எழுந்த நிலையில் பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்கள் அரசின் அனுமதியைப் பெற்ற பிறகே தேர்வை நடத்த வேண்டும் என உயர்கல்வித்துறை செயலாளர் அபூர்வா அதிரடி உத்தரவிட்டுள்ளார்.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!